News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Thursday, December 22, 2016

மாநில தலைமையின் அறிவிப்பு!

மக்கா பள்ளியின் இமாமாக இருந்த சம்சுத்தீன் காசிமி அப்பள்ளி நிர்வாகத்தால் நீக்கப்பட்டு வேறொரு இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை இரு தரப்பும் சொல்லவில்லை. எனவே அவரது நீக்கம் குறித்து பலவாறாக சொல்லப்படுவதை பரப்ப வேண்டாம். நமது இலக்கிலிருந்து நம்மை திசை திருப்பும் இது போன்ற வேலைகளில் ஈடுபடாமல் ஆக்கப் பூர்வமான பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சம்சுத்தீன் காசிமியின் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டு உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும் நாம் சொல்வது சத்தியம் என்பதை நிரூபிக்க அதை ஆதரமாக ஆக்கக் கூடாது. நாம் சொல்லும் கொள்கை குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டது என்பதை வைத்துத்தான் நமது பிரச்சாரம் அமைய வேண்டும். அவரது நடத்தை சரி இல்லை என்பது நமது கொள்கை சரி என்பதைக் காட்ட உதவாது.

நம் ஜமாஅத் மீது அவர் அவதூறு சொன்ன போது அதற்கு பதிலளிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால் அவரது குற்றச் சாட்டை மறுப்பதுடன் அவரது தகுதியையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். அது போன்ற தேவை எதுவும் இப்போது இல்லாததால் அவரைப் பற்றிய தனிப்பட்ட விஷயத்தை ஆதாரமின்றி பரப்ப வேண்டாம் என்று அன்புடன் கொள்கைச் சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

மு.முஹம்மது யூசுஃப்

பொதுச் செயலாளர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Monday, December 12, 2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரிடர் உதவி எண்கள்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரிடர் உதவி எண்கள்:*
TNTJ பொதுச் செயலாளர்
முஹம்மது யூசுப்
9952035222
TNTJ தலைமை நிலைய செயலாளர் எக்மோர் சாதிக் 9677171391
TNTJ செயலாளர் குழு:
எம்.எஸ்.சுலைமான் 9952035444
சிராஜுதீன் 9789027757
ஆவடி இப்ராஹீம் 9003167714
திருவாரூர் அப்துர்ரஹ்மான் 9789030302
மயிலை அப்துர்ரஹீம் 9940659299
இ.முஹம்மது 9600556685
நெல்லை சையது அலி 9003167713
நெல்லை யூசுப் அலி 9952046555
சேப்பாக்கம் அப்துல்லாஹ் 9952056111
இ.ஃபாரூக் 9952056444
TNTJ வட தமிழக மாவட்ட நிர்வாகிகள் :
வட சென்னை
அன்சாரி 9566137765
சுல்தான் 9884132651
ரஃபீக் 9840271828
தென் சென்னை
சித்தீக் – 7708067162
அலாவுத்தீன் – 7708067163
ராசிக் அலி – 7708067164
கடலூர் தெற்கு
முஹம்மது ஆதம் 9788083569
தமீஸீதீன் 9894583913
ஜமீல் நசீர் 9600578603
கடலூர் வடக்கு
முஹம்மது கவுஸ் 9790583337
சர்புதீன் 9994218285
முஹம்மது சலீம் 9443046580
கிருஷ்ணகிரி
பொறுப்பாளர்கள்
அபுதாஹிர் 8110988704
சித்தீக் 8110988702
சர்தார் 9488921747
லியாகத் பாஷா 8110988703
சிராஜ் 9003450040
தர்மபுரி
சமியுல்லாஹ் 9042729693
ரிஸ்வான் 9600749498
சுலைமான் 9095783529

தொண்டரணியினருக்கு மாநிலத் தலைமையின் அன்பான வேண்டுகோள்

தயார் நிலையில் இருங்கள்!!! தொண்டரணியினருக்கு மாநிலத் தலைமையின் அன்பான வேண்டுகோள்.
அன்பான கொள்கைச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.மழை என்பது எல்லாம்வல்ல இறைவனின் அருட்கொடை.எனினும் அதிலும் பல சோதனைகளை உண்டாக்கி, அதன் மூலம் நமக்குப் படிப்பினைகளையும், நன்மைகளையும் அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.இதை சென்ற ஆண்டு சென்னை,கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட, புயலும் மழையும் நமக்கு உணர்த்தின.
இதனிடையே சிலதினங்களுக்கு முன்பு ‘வர்தா’ புயல் உருவானது.இது அதி தீவிரப் புயலாக மாறி சென்னை,காஞ்சிபுரம்,புதுவை,திருவள்ளூர்,கடலூர் ஆகிய பகுதிகளைத் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக,வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனவே நமது ஜமாத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருக்கவும்.
அவ்வாறு தங்கள் பகுதியில்,புயல் மற்றும் மழையால் பெரும் சேதங்கள் ஏற்படுமானால்; தொண்டரணியினர் உடனடியாகக் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசுப்
மாநிலப் பொதுச் செயலாளர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
ஊடகத் தொடர்பு. 9789030302

Wednesday, November 30, 2016

பொதுக்கூட்டம் பத்திரிக்கை செய்தியில்

அஸ்ஸலாமு  அலைக்கும் ரஹமதுல்லாஹி வா பரக்காத்தஹு ,

கடலூர் வடக்கு  மாவட்டம் , பண்ணுருட்டி கிளை சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டம் , பத்திரிக்கை செய்தியாக

அல்ஹம்துலில்லாஹ் !


Saturday, November 26, 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) பண்ருட்டியில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்...!

மாநாடாக மாறிய முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) பண்ருட்டியில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்...!
சகோ. M.S.சையது இப்ராஹீம், TNTJ மாநில தணிக்கைக்குழு தலைவர்,
தலைப்பு: நபி வழி நடப்போர் யார்...?
சகோ. R.ரஹ்மத்துல்லாஹ், TNTJ மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்,
தலைப்பு: நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு...?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,பண்ருட்டி நகரம்,
கடலூர் வடக்கு மாவட்டம்.

அல்லாஹ்வின் கிருபையால் பண்ருட்டி காந்தி சாலை ஸ்தம்பித்தது

Friday, November 11, 2016

மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு

தலைமை சுற்றறிக்கை எண் 51/2016
அன்புள்ள மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு
உணர்வு வார இதழ் சமுதாயத்தின் செய்திகளை தாங்கி வருவதை தாங்கள் 
அறிவீர்கள்,
அரசு நூலகங்களில் உணர்வு வார இதழை கொண்டு சேர்க்கும் வகையில் உணர்வு இதழை நூலகத்திற்கு அனுப்பி வைக்க மாநில நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தங்கள் பகுதியில் உள்ள நூலகத்தின் முகவரியை கடிதம் மூலம் மாநில தலைமைக்கு அனுப்பி வைத்தால், நூலகத்திற்கு நேரடியாக உணர்வு இதழை அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசுப்
மாநில பொதுச் செயலாளர்

Sunday, November 6, 2016

பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பெண்கள் நடத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம், நேரலை , LIVE


பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பெண்கள் நடத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

உரை: 


சகோதரி ஆயிஷா, சகோதரி ஜாஸ்மின், சகோதரி அப்சானா, சகோதரி மும்தாஜ், சகோதரி ஃபர்சானா 


சிறப்புரை 


பீ.ஜைனுல் ஆபிதீன் 


பி.எம்.அல்தாஃபி
நேரலை , LIVE


Saturday, November 5, 2016

பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக -திருச்சி- திடல் தடம் வழிகாட்டிபொதுசிவில் சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நவம்பர் 6,  திருச்சியில் நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்     ,திடலுக்கு -பல்வேறு வழித்தடங்களில் இருந்து வருபவர்களுக்கு  வழி கட்டி ..

 
மதுரை மார்க்கம்  இருந்து வருபவர்களுக்கு ...


கரூர் மார்க்கத்தில் இருந்து வருபவர்களுக்கு ....


சேலம் மார்க்கத்தில் இருந்து வருபவர்களுக்கு ...


சென்னை மார்க்கத்தில் இருந்து வருபவர்களுக்கு ...


திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து வருபவர்களுக்கு ...


புதுக்கோட்டை மார்க்கத்தில் இருந்து வருபவர்களுக்கு ...


தஞ்சாவூர் மார்க்கத்தில் இருந்து வருபவர்களுக்கு ...


அணைத்து ரூட் ....

Tuesday, November 1, 2016

போபாலில் நடந்த போலி எண்கவுண்டர் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்


01.11.2016
*போபாலில் நடந்த போலி எண்கவுண்டர்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.*
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் 8 முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.
இது காவல் துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி எண்கவுண்டர் என ஊடகங்களில் வரக் கூடிய தகவல்கள்உறுதிபடுத்துகின்றன.
தப்பியோடிய கைதிகள் கையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.ஆனால் மத்தியப்பிரதேச அரசோ அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த முரண்பாடான தகவல்கள் பலசந்தேகங்களை எழுப்புகின்றன.
மேலும் என்கவுண்டர் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.அதில் அந்தஇளைஞர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்பதும் மிக அருகில் வைத்தே அவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதும் தெளிவாகத் தெரிகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது.அதில் அவர்கள்அனைவரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இச்சூழலில்தான் என்கவுண்டர்நடைபெற்றுள்ளது.
இவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த என்கவுண்டர் திட்டமிட்டப் படுகொலைதான் என்பதுஊறுதியாகின்றது.
முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக்கண்டிக்கின்றது. இது தொடர்பாக முறையான நீதி விசாரணை செய்து, தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியப் பிரதேச அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசுப்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஊடக தொடர்பு-
..9789030302

வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா?

கணவன் மனைவியை விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபியே! பெண்களை நீங்கள் விவாக ரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாக ரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

அல்குர்ஆன் (65 : 1,2)

இவ்வசனத்தில்  விவாகரத்துக்குரிய முக்கிய விதியை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும் போது இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த விதியாகும்.

ஒருவர் தம் மனைவியை விவாகரத்துச் செய்வதாக இரண்டு நபர்களிடம் கூறிவிட்டால் அவ்விருவரும் சாட்சியாகிவிட மாட்டார்கள்.
இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தபால் எழுதி, அல்லது இரண்டு சாட்சிகளின் முன்னால் தொலைபேசியில் பேசி தலாக் என்பதைத் தெரிவித்தால் இந்த நிபந்தனையைப் பேணி விட்டதாகவும் சிலர் நினைக்கின்றனர்.
விவாகரத்துச் செய்பவனையும், செய்யப்பட்டவளையும் இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும்.
எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேரிடையான இரு சாட்சிகளுக்கு முன்னால் தான் விவாகரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது தலாக் சொன்னதாக ஆகாது.

தபால் மூலமோ, எஸ் எம் எஸ் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, வீடியோ கான்பரன்சி மூலமோ தலாக் சொல்லுதல் அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக்குரியதாக்குவதாகும்


இத்துடன் தலாக்கில் இன்னும் பல விஷயங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

எதிர்த் தரப்பில் உள்ள பெண் யார்? அவளுடைய கோரிக்கை என்ன? விவாகரத்துக்குப் பின் அவன் அவளுக்கு எவ்வளவு உதவித் தொகை கொடுக்க வேண்டும்? பிள்ளைகள் இருந்தால் அப்பிள்ளைகளுக்கு இவன் செய்ய வேண்டியது என்ன? ஆகிய விஷயங்கள் விவாகரத்து வழங்குவதற்கு முன்பு பேசப்பட வேண்டும்.  இதைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

لَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً وَمَتِّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرُهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ (236)2

அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் அவருக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

அல்குர்ஆன் (2 : 236)

விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.

وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ ளالبقرة : 233ன

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார்.

அல்குர்ஆன் (2 : 233)

மேலும் கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் காரியத்தில் சிலர் ஈடுபட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا (35) 4

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (4 : 35)


இவை அனைத்தும் பேசி முடிக்கப்பட்ட பின்பே கணவன் தலாக் சொல்ல முடியும். சாட்சி கூற வருபவர்கள் மேலுள்ள அனைத்து விஷயங்களுக்கும் சாட்சிகளாக இருக்க வேண்டும்.

எனவே பிறரிடம் தலாக் சொல்லி அனுப்புவது , கடிதம் அனுப்புவது ,இஸ்லாம் கூறும் இந்த ஒழுங்கு முறைகளை மீறும் செயலாகும். அவ்வாறு கூறப்படும் தலாக் செல்லத்தக்கதல்ல, ஏற்கனவே குறிப்பிட்டதை போல , இது  அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக்குரியதாக்குவதாகும்.

தலாக்குக்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை ஒருவன் கடைப்பிடித்தானா இல்லையா என்பதை றியாமல் சாட்சி சொல்பவன் அநியாயத்துக்குத் தான் சாட்சி கூறுகிறான். 
ஒரு மகனுக்கு மட்டும் சொத்தைக் கொடுத்து மற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருந்த நபித்தோழர் ஒருவர் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்கியபோது நான் அநியாயத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். (பார்க்க : புகாரீ 2650 )
ஒரு ஆண் மார்க்கத்தின் நெறியைப் பேணாமல் தலாக் சொல்லும்போது அதற்கு சாட்சியாக இருப்பதும் இது போன்றது தான்.

முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?

ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ கூறினாலும் ஒரு தடவைதான் விவாகரத்து நிகழ்ந்துள்ளது. ஒரு தடவை விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அதுபோல் இப்போதும் செய்து கொள்ளலாம்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 2932, 2933, 2934
தலாக் என்பது மூன்று தவணைகளில் செய்வது ஆகும்,( இங்கு இந்தபதிவின் கிழ் அதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது)  , மேலும் இதற்கான காணொளி  .   onlinepj  இணையதள லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது .பார்க்க காணொளி 

சரி தலாக் விடயத்துக்கு வருவோம் ,  தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம்.

விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லா விட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்து தீர்ப்பைப் பெறுகிறான்.

இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியை விட்டுப் பிரிவதற்குக் கொடூரமான வழியைக் கையாள்கிறான். அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்துச் செத்ததாக உலகை நம்ப வைக்கிறான்.

விவாகரத்துச் செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

இன்னும் சில கணவன்மார்கள் மனைவியைக் கொல்லும் அளவிற்கு கொடியவர்களாக இல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள். கற்பொழுக்கம் உள்ள மனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர். இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர். இதன் பின்னர் ஒழுக்கம் உள்ள அப்பெண்மணி களங்கத்தைச் சுமந்து கொண்டு காலமெல்லாம் கண்ணீர் விடும் நிலைமை ஏற்படுகிறது. அவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைப் படுகிறது. எளிதாக விவாகரத்துச் செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது.

வேறு சில கயவர்கள் விவாகரத்துப் பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாத சிரமங்களைச் சுமக்க வேண்டும்? என்று நினைத்து பெயரளவிற்கு அவளை மனைவியாக வைத்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொள்கின்றனர். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதையும் படுத்துகின்றனர். இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்தக் கொடுமைகள் அனைத்திலிருந்தும் பெண்கள் பாதுகாக்கப் படுகிறார்கள். ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போல பெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்கு கணவனைப் பிடிக்கா விட்டால் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுவது சிரமமாக இருந்தால் அவள் கணவனைக் கொலை செய்கிறாள். உணவில் விஷம் கலந்தோ, அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனைத் தீர்த்துக் கட்டுகிறாள்.

அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறு வாழ்க்கை கிடைக்காமல் செய்து விடுகிறாள். அல்லது கணவனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன் ஓடுகிறாள். எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே.
அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித் தோழரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படி யானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுத்து விடு' என்று கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்:- புகாரி 5273, 5275, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவதற்கு நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாக ரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப்பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார்.

அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிருந்து இதை உணரலாம்.

இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (திருக்குர்ஆன் 4:21)

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர் களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (திருக்குர்ஆன் 2:228)

ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாகின்றன.

இனி முத்தலாக் விஷயத்துக்கு வருவோம்.

ஆண்களுக்கு தலாக் கூறும் மூன்று வாய்ப்புகள் உள்ளன.

ஒரு முறை விவாகரத்து செய்து விட்டு பின்னர் சேர்ந்து வாழலாம். பின்னர் மீண்டும் விவாகரத்துச் செய்து மீண்டும் சேர்ந்து வாழலாம். மூன்றாம் முறை விவாகரத்து செய்தால் தான் மீண்டும் சேர முடியாது.

மூன்றாம் முறை விவாகரத்து செய்த பின் இன்னொருவ னுக்கு அவள் வாழ்க்கைப்பட்டு அவனும் விவாகரத்து செய்தால் மட்டுமே முதல் கணவன் அவளை மணக்க முடியும்.

அவசரப்பட்டு விவாகரத்து செய்தவர்கள் பின்னர் திருந்தி சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரே சமயத்தில் மூன்று தலாக் எனக் கூறினால் ஒரு தலாக் ஆகவே அது கருதப்படும் என்பது தான் சரியான கருத்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மூன்று தலாக் என்பது ஒரு தலாக் என்பது மொத்தமாகவே கருதப்பட்டது


அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 2689எனவே, ஒரே சமயத்தில் முத்தலாக் கூறுவது என்பது இஸ்லாத்தில் இல்லை. முஸ்லிம்களில் சிலரது அறியாமை காரணமாக இது போன்ற கேள்விகளை நாம் எதிர் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

இந்த வார(04.11.16 - 10.11.16) உணர்வு இதழில்...(குரல் 21 : 11)

இந்த வார(04.11.16 - 10.11.16) உணர்வு இதழில்...(குரல் 21 : 11)
பொது சிவில் சட்டம் பற்றிய பல ஆக்கங்களை உள்ளடக்கிய இதழ்...
படியுங்கள்! படிக்கத் தூண்டுங்கள்!!


Saturday, October 8, 2016

தனியார் சட்டத்திற்குள் தலையிட வேண்டாம்! பாஜகவுக்கு முஸ்லிம்கள் எச்சரிக்கை!!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையின் 
முக்கிய அறிவிப்பு:


தனியார் சட்டத்திற்குள் தலையிட வேண்டாம்!
பாஜகவுக்கு முஸ்லிம்கள் எச்சரிக்கை!!

சிறுபான்மை சமுதாயத்தில் பெரும்பான்மை சமூகமாக முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற நம் நாட்டில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுமானவையாக உள்ளன. ஆயினும் சில சட்டங்கள் மட்டும் மத நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால் அனைத்து மதத்தினருக்கும் விதி விலக்காக அவர்களின் மத நம்பிக்கை படி செய்து கொள்ள மிகச்சில சட்டங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிவிலக்கின் படி முஸ்லிம்கள் தங்களின் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் இஸ்லாமியச் சட்டத்தின் படி செய்து கொள்ள அனுமதிப்பது தான் முஸ்லிம் தனியார் சட்டமாகும்.
முஸ்லிம்கள் தங்களின் மத நம்பிக்கைப் படி இதனைச் செய்வதில் மற்ற எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இருப்பினும் முஸ்லிம்களின் இந்த உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்பரிவார அமைப்புகள் துடித்து கொண்டிருக்கின்றன.
சங்பரிவாரத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் உச்சநீதிமன்றத்தில் தலாக் (விவாகரத்து) வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமியச் சட்டத்திற்குள் நுழைவது முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதாக ஆகுமா? என்ற கேள்வியோடு மத்திய அரசின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
உடனே பரிந்துரை என்கிற பெயரில் பாஜக அரசு முஸ்லிம் விரோதப் போக்கைக் காட்டும் விதமான அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையைப் பார்க்கின்ற போது ‘ஆடு நனையுதே என்று ஓநாய் அழுகின்ற” பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
முத்தலாக் என்பது சமத்துவத்திற்கு எதிரானது, பெண்களின் சுயமரியாதையைப் பாதிக்கக்கூடியது என்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமியப் பெண்களின் நலனில் பாஜகவிற்கு உதித்திருக்கிற அக்கறையை இங்கு கவனிக்க வேண்டும்.
குஜராத், முஸாஃபர் நகர் உட்பட பல்வேறு கலவரங்களில் ஆயிரக்கணக்கான பெண்களைக் கருவறுத்தவர்கள், அகதிகளாக ஊரை விட்டே ஓட ஓட விரட்டியவர்கள் இன்று தலாக் பற்றி கவலை கொள்வது அப்பட்டமான அயோக்கியத்தனாமாகும்.
ஒரு நேரத்தில் முத்தலாக என்பது இல்லை என்பது உண்மைதான். சவூதி எகிப்து உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்ல அனுமதியில்லை. நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழியிலும் இதற்கு அனுமதி இல்லை. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தவறுதலாக இடம்பெற்ற இச்சட்டத்தை முஸ்லிம் சமுதாயத்தின் ஒப்புதலோடு மாற்றியமைத்தால் அதில் முஸ்லிம்களுக்கு மறுப்பு இல்லை.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள விவாகரத்து உரிமையை ஒட்டு மொத்தமாகப் பறிக்க பாஜக அரசும் நீதிமன்றமும் முயல்வதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. இது அரசியல் சாசனம் வழங்கிய உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்பதுதான் முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தாகும்.
மற்ற சமுதாயம் போல் விவாகரத்து வழக்குக்கு ஐந்து பத்து ஆண்டுகள் அலைவது போல் முஸ்லிம்கள் அலைய தயாரில்லை.
விவாகரத்து தாமதம் ஆவதால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதையும், தவறான செயல்களில் ஈடுபடுவதையும் சிந்திக்கும் யாரும் இஸ்லாம் கூறும் விவாகரத்து முறைதான் சரியானது என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
மேலும் போகிற போக்கில் தலாக் சொல்வது இஸ்லாத்தில் இல்லை.
கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை எனில் இரு வீட்டாரும் இணைந்து அவர்களை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களால் முடியாத நிலையில் ஜமாத்தார்கள் தலையிட்டு இணைத்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். அதுவும் பயனளிக்கவில்லை எனில் நல்ல முறையில் பிரிந்து விட வேண்டும்.
இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டால் இரு சாட்சிகள் முன்னிலையில் விவாக ரத்து செய்ய வேண்டும். அதன் பின்னர் ஜமாஅத்தார்கள் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு கணவனிடமிருந்து கணவனின் வசதிக்கு ஏற்ப பாதுகாப்புத் தொகை பெற்றுத்தர வேண்டும்.
குழந்தைகள் இருந்தால் அதன் பராமரிப்புச் செலவு முழுவதும் கணவனைச் சேர்ந்ததாகும். குழந்தைக்கு பாலூட்டுவதற்காகக் கூட மனைவிக்கு தக்க சன்மானம் வழங்க வேண்டும். இன்னும் பல விஷயங்கள் இதன் பின்னணியில் உள்ளன.
இது தான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டமாகும்.
இவற்றில் எதையும் கவனிக்காமல் முஸ்லிம்களிடம் கருத்தும் கேட்காமல் அவசர அவசரமாக இந்த அறிக்கையைச் சமர்ப்பித்து பாஜக தனது ஃபாஸிச சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக முஸ்லிம்களின் மத உரிமையைப் பறித்து பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நிறைவேற்ற பாஜக முயல்கிறது என்பது தான் உண்மை.
எனவே பாஜக தனது அத்துமீறலை நிறுத்திக் கொள்ள வேண்டும், அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளில் கைவைக்கக் கூடாது என இஸ்லாமிய சமுதாயம் எச்சரிக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தைப் பெற்று முத்தலாக் முறையை நீக்க முன்வந்தால், நபிகள் நாயகத்தின் வழிமுறைக்கு மாற்றமான இந்த முத்தலாக்கை நீக்குவதை முஸ்லிம்கள் மறுக்க மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
M.முஹம்மது யூசுப்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்

SOURCE: https://www.facebook.com/ThouheedJamath/posts/1303619709657040
LikeShow More Rea

Wednesday, September 7, 2016

முக்கிய அறிவிப்பு


முக்கிய அறிவிப்பு :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய ஆய்வு முடிவு என்ற பெயரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் தொலைபேசி எண்களுடன் ஒரு பொய்யான செய்தியை வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ் புக் வாயிலாக சில குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர்.

திருக்குர்ஆன் வசனங்களில் இடைச்செருகல்கள் இருக்கின்றதா என தவ்ஹீத் ஜமாஅத் ஆய்வு செய்து வருவதாக அந்த அவதூறு செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும்
ஹஜ் கடமைகளில் ஷைத்தானுக்கு கல் எறியக்கூடாது;
ஸஃபா மர்வா தொங்கோட்டம் ஓடக்கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததாக பரப்பப்படும் அந்த பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.

தவ்ஹீத் ஜமாஅத் தின் பெயரில் ஏதேனும் அறிவிப்புக்கள் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்தால் 
நமது அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பக்கமான 
www.facebook.com/ThouheedJamath/ என்ற முகவரியிலோ

அல்லது
www.Onlinepj.com என்ற நமது இணையதளத்திலோ

அல்லது
tntj.net என்ற நமது இணையதளத்திலோ சென்று பார்த்து அது நம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தானா என்பதை உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இவண்,
மாநில தலைமையகம்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பெருநாள்_தின_சிறப்புச்சலுகை உணர்வு மற்றும் ஏகத்துவம்

உணர்வு மற்றும் ஏகத்துவம் இரண்டு இதழ்களும் இணைந்த ஆண்டுச் சந்தா சலுகை விலையில் ரூ.600. மட்டுமே.
Image result for unarvu
Image result for egathuvam
உணர்வு முகவர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் திடல் தொழுகையில் ஸ்டால் அமைத்து, புதிய சந்தாக்கள் பிடித்தல், பழைய சந்தாக்களை புதுபித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நமது ஜமாஅத்தின் இதழ்களை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு
மாநில தலைமையகம்

Tuesday, September 6, 2016

2016 ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்திற்க்கு....

ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்திற்க்கு....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்!
இஸ்லாத்தின் கடைமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றிட எப்படியாவது மக்கா என்னும் புனிதத் தலம் சென்றுவிட வேண்டும் என்று எண்ணுவோரை மையப்படுத்தி இயன்றவரை கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன சில டிராவல்ஸ் நிறுவனங்கள்.


கடைசி நேரத்தில் இந்த வருடம் உங்களுக்குப் பயணம் கிடையாது என்று கை விரிப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பின்னர் பணத்தைத் திருப்பித்தர இழுத்தடிப்பது அடுத்த கட்டமாகும்.
இந்த விவகாரத்தில் பயணத்திற்கான விசாவிலும் குளறுபடி செய்யப்படுகிறது என்று இப்போது வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
டூரிஸ்ட் விசா போன்று ஏதோ ஒரு விசாவில் ஹஜ் பயணிகளை அனுப்பி வைத்து, சவூதியில் அவர்களைத் திண்டாட வைத்துவிடுகின்றன சில மோசடி நிறுவனங்கள்.
எனவே இவர்களால் வழங்கப்படும் விசாவானது ஹஜ் பயணத்திற்கான விசாதானா என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் பயணிக்கவும்.
வேறு வகையான விசா பெற்று பயணிப்பது கடும் சிரமத்தையும் பல சட்ட சிக்கல்களையும் உருவாக்கும் என்பதை மனதில் நிறுத்தி, எச்சரிக்கையுடன் செயல்பட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
முறையாக மத்திய அரசிடம் பதிவு செய்துள்ள நிறுவனமா என்று ஆய்வு செய்து பின்னர் முறையான விசாதானா என்பதையும் ஆராய்ந்து பயணம் மேற்கொள்வதே ஹஜ் செய்யவிருப்போருக்கு பாதுகாப்பாகும்.
எனவே மோசடி நிறுவனங்களைக் கண்டறிந்து, எச்சரிக்கையாக இருக்கும்படி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு;

எம். முகம்மது யூசுஃப்
(பொதுச் செயலாளர்)

Friday, August 26, 2016

ஒட்டக குர்பானி சட்ட விரோத தீர்ப்பை கண்டித்து சென்னை ஆர்ப்பாட்ட களத்தில் நடைபெற்ற பத்திரிக்கை பேட்டி

ஒட்டக குர்பானிக்கு தடை விதிக்கும் உயர் நீதிமன்ற சட்ட விரோத தீர்ப்பை கண்டித்து, சென்னை ஆர்ப்பாட்ட களத்தில் நடைபெற்ற பத்திரிக்கை பேட்டி


இன்று ஒரு தகவல் - 26-08-2016

இன்று ஒரு தகவல் - 26-08-2016

தலைப்பு : மனிதநேயத்தை கற்பிக்கும் தருணம்..!

உரை : பா. அப்துர் ரஹ்மான்

(மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)Tuesday, August 23, 2016

முக்கிய அறிவிப்பு !!!, ஆர்ப்பாட்டம் தேதி மற்றம் ................

முக்கிய அறிவிப்பு !!!, ஆர்ப்பாட்டம் தேதி மற்றம்

ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்..!
ஒட்டகக் குர்பானிக்கு தடை விதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சட்ட விரோத தீர்ப்பைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்ஒட்டக குர்பானிக்கு தடை விதிக்கும் உயர் நீதிமன்ற சட்ட விரோத தீர்ப்பை கண்டித்து , கண்டண ஆர்ப்பாட்டம்

ஒட்டக குர்பானிக்கு தடை விதிக்கும் உயர் நீதிமன்ற சட்ட விரோத  தீர்ப்பை கண்டித்து , கண்டண  ஆர்ப்பாட்டம்


நாள்  : 25 ஆகஸ்ட் 2016  மாலை 4 மணி , 26 ஆகஸ்ட்  மாலை 4 மணி க்கு தேதி மற்றம் .

இடம் :  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்


முக்கிய அறிவிப்பு !!!, ஆர்ப்பாட்டம் தேதி மற்றம் 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது ....

ஒட்டகம் வெட்டத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஒட்டகம் வெட்டத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் P.M.அல்தாஃபி, பொதுச் செயலாளர் முஹம்மது யூசுஃப், துணைப் பொதுச் செயலாளர் தவ்ஃபீக் ஆகியோர் கலந்து கொண்டு எங்கள் மத வழிபாட்டு உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம் என செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.

மேலும் உயர்நீதிமன்றத்தின் சட்ட விரோத தீர்ப்பை கண்டிக்கும் விதமாக வரும் வியாழன் அன்று மாலை 4 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம் என்பதையும் அறிவித்தனர்.


இந்த வார உணர்வு... (குரல் 21 :01) - [26.Aug.2016 - 01.Sep.2016]


இந்த வார உணர்வு...

26.08.2016 - 01.09.2016
குரல் 21 :01

Friday, August 19, 2016

ஒட்டகத் தடை சட்டமும், முஸ்லீம்களின் எச்சரிக்கையும்..!

ஒட்டகத் தடை சட்டமும், முஸ்லீம்களின் எச்சரிக்கையும்..!

தலைமையக ஜுமுஆ (19-08-2016) - இரண்டாம் உரை

உரை : அப்துல்லாஹ்

(மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)
Wednesday, August 3, 2016

குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 6

நாற்பது புதன் கிழமை தொடர்ந்து மொட்டையடித்தால் ஆலிம் ஆகிவிடலாம்:
- மத்ஹபு நூல் மஙானியின் அற்புத(?)ச் சட்டம்!
குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 6
நாம் மார்க்கத்தில் தலை சிறந்த ஆலிம்சாவாக ஆகவேண்டுமென்றால் அதற்கு ஓர் அற்புதமான சட்டத்தை மஙானி என்ற மத்ஹபு நூலில் கூறியுள்ளார்கள்.
அதாவது யார் ஒருவர் 40 புதன் கிழமைகள் தொடர்ச்சியாக 40 தடவை மொட்டை அடிக்கின்றாரோ அவர் தலைசிறந்த மார்க்க அறிஞராகிவிடுவார் என்று அந்த நூலில் அற்புதச்சட்டம் எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி எந்த வசனத்திலிருந்து எந்த ஹதீஸ்லிருந்து இந்த அற்புதச்(?) சட்டத்தை வகுத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினோம்.
இதற்கான ஆதாரத்தை பிரிண்ட் அவுட்டாக தாருங்கள் என்று கேட்டனர். முதல் நாள் முதல் அமர்விலேயே இதற்கான பிரிண்ட் அவுட்டும் வழங்கப்பட்டது.
முன் பின் வாசகங்களை இருட்டடிப்புச் செய்து மறைத்துள்ளீர்கள். நாங்கள் அம்பலப்படுத்துவோம் என்று சொன்னார்கள். இது தமிழில் எழுதப்பட்டுள்ள நூல் தானே! உடனடியாக வாசித்துக் காண்பித்து நாங்கள் செய்த மோசடியை அம்பலப்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தோம்.
மஙானியிலிருந்து எடுத்துக்காட்டி இதை விளக்காமல் இங்கிருந்து போகமாட்டோம் என்று வீர வசனம் பேசியவர்கள் கடைசி வரைக்கும் இதற்கும் பதிலளிக்காமல் ஓட்டமெடுத்தனர்.
குறிப்பு : ஆபாச மத்ஹபு சட்டங்கள் குறித்த இந்த விவாத டிவிடிக்களை பார்ப்போர் கவனத்திற்கு..
மத்ஹப்கள் அனைத்தும் ஆபாசங்களே..! என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் திருக்குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய ஏராளமான ஆபாசமான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
அந்த ஆபாச மத்ஹப்களிலிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மத்ஹப் நூல்களில் காணப்படும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால், அருவருப்பான வார்த்தைகளை பேச தயங்கும் நாம்,
மத்ஹப்களின் ஆபாசங்களை விவாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்

குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 5

ஊமையானவன் தொழும் போது வியாபாரம் செய்தால் தொழுகை பாழாகாது!
- உளறல் சட்டம்!
குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 5
ஊமையாக இருப்பவன் தனது தொழுகையில் வியாபாரம் செய்தால் அவனது தொழுகை வீணாகாது என்று சொல்லி ஊமைகளுடைய தொழுகையை வீணடிக்கும் விதத்தில் சட்டம் இயற்றி வைத்துள்ளீர்களே! இதற்கு திருக்குர் ஆனின் எந்த வசனத்திலிருந்து அல்லது எந்த நபிமொழியிலிருந்து ஆதாரத்தை எடுத்தீர்கள் என்று நாம் கேட்டோம். கடைசி வரைக்கும் இது குறித்து வாய்திறக்காமல் ஓட்டமெடுத்தனர் போலி உலமாக்கள்.
இதன் மூலம் உளறல்களும், கிறுக்குத்தனங்களும், முஸ்லிம்களின் அமல்களை பாழாக்கும் விதத்திலான மோசமான சட்டங்களும் தான் மத்ஹபு நூல்களில் உள்ளன என்பது அம்பலமானது.குறிப்பு : ஆபாச மத்ஹபு சட்டங்கள் குறித்த இந்த விவாத டிவிடிக்களை பார்ப்போர் கவனத்திற்கு..
மத்ஹப்கள் அனைத்தும் ஆபாசங்களே..! என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் திருக்குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய ஏராளமான ஆபாசமான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
அந்த ஆபாச மத்ஹப்களிலிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மத்ஹப் நூல்களில் காணப்படும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால், அருவருப்பான வார்த்தைகளை பேச தயங்கும் நாம்,
மத்ஹப்களின் ஆபாசங்களை விவாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 4

மத்ஹபு சட்டங்களில் அசிங்கங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்ட போலி ஆலிம்கள்!
- போலி ஆலிம்களின் ஒப்புதல் வாக்குமூலம்!
குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 4
SYF போலி ஆலிம்கள்: மத்ஹபு என்பது ஒரு பூந்தோட்டம்; அதில் பன்றி நுழைந்தால் அதற்குள் உள்ள மலத்தை எப்படி தேடுமோ அதுபோலத்தான் தவ்ஹீத்வாதிகள் மத்ஹபு நூல்களில் உள்ள ஆபாச சட்டங்களையா தேடி தேடி எடுத்து விவாதிக்கின்றீர்கள்.
தவ்ஹீத் ஜமாஅத் : அப்படியானால் மத்ஹபு என்ற தோட்டத்திற்குள் மலம் போல ஆபாச சட்டங்கள் குவிந்துள்ளன என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி.குறிப்பு : ஆபாச மத்ஹபு சட்டங்கள் குறித்த இந்த விவாத டிவிடிக்களை பார்ப்போர் கவனத்திற்கு..
மத்ஹப்கள் அனைத்தும் ஆபாசங்களே..! என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் திருக்குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய ஏராளமான ஆபாசமான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
அந்த ஆபாச மத்ஹப்களிலிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மத்ஹப் நூல்களில் காணப்படும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால், அருவருப்பான வார்த்தைகளை பேச தயங்கும் நாம்,
மத்ஹப்களின் ஆபாசங்களை விவாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 3

பெண்ணுறுப்புக்குள் மிருகங்கள் நுழைந்தால் பெண்ணுக்கு குளிப்பு கடமையா இல்லையா?
- மத்ஹபு இமாம்களின் ஆபாச ஆய்வு(?)
குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 3
பெண்ணுறுப்புக்குள் மீன், பறவை, மிருகங்கள், ஜின்கள் நுழைந்தால் அந்த பெண்ணுக்கு குளிப்பு கடமையா இல்லையா என ஆபாச சட்டத்தை ஆபாச ஆய்வை மாபெரும் மார்க்கச் சட்ட கருவூலம் என்று போற்றப்படும் மஙானி என்ற நூலில் எழுதி வைத்துள்ளீர்களே! இது ஆபாசமில்லையா என்று நாம் கேள்வி எழுப்பினோம்.
எதையுமே எங்களது இமாம்கள் ஆய்வு செய்துதான் எழுதுவார்கள்; இதுவெல்லாம் ஆபாசமா? என்று அற்புதமான(?) கேள்விகளைக் கேட்டு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பரலேவி ஆலிம்களின் பதற வைக்கும் வீடியோ!
குறிப்பு : ஆபாச மத்ஹபு சட்டங்கள் குறித்த இந்த விவாத டிவிடிக்களை பார்ப்போர் கவனத்திற்கு..
மத்ஹப்கள் அனைத்தும் ஆபாசங்களே..! என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் திருக்குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய ஏராளமான ஆபாசமான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
அந்த ஆபாச மத்ஹப்களிலிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மத்ஹப் நூல்களில் காணப்படும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால், அருவருப்பான வார்த்தைகளை பேச தயங்கும் நாம்,
மத்ஹப்களின் ஆபாசங்களை விவாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.


Monday, August 1, 2016

குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 2

குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 2
நோன்பு வைத்துக் கொண்டு
செத்த பிணத்தோடு உடலுறவு கொண்டால் நோன்பு முறியாது;
குளிப்பும் கடமையாகாது; அவனது உளுவும் முறியாது.
நோன்பு வைத்துக் கொண்டு
விலங்கோடு உடலுறவு கொண்டால் நோன்பு முறியாது!
குளிப்பும் கடமையாகாது; அவனது உளுவும் முறியாது.
என்ற அற்புதமான(?) ஆபாச சட்டத்தை எழுதி வைத்துள்ளீர்களே!
என நாம் எழுப்பிய கேள்விக்கு
அவனது நோன்பு கூடுமா? கூடாதா?
அவனது உளு முறியுமா? முறியாதா?
அவனுக்கு குளிப்பு கடமையாகுமா ஆகாதா? என்று சட்டம் சொல்லி ஆக வேண்டுமல்லவா?
அதற்காகத்தான் அருமையான முறையில் எங்களது இமாம்கள் மகத்தான ஆய்வு(?) செய்து இந்த அற்புதமான சட்டங்களை எழுதியுள்ளார்கள். அமெரிக்காவில் பிணத்தோடு ஒருவன் உடலுறவு கொண்டுள்ளான் என்ற செய்தியை நாங்கள் ஆதாரமாக இங்கே கொண்டு வந்துள்ளோம் என்று ஒரு அற்புத(?) விளக்கமளித்தனர்.
இதன் மூலம் மத்ஹபு சட்டங்கள் என்ற பெயரில் எந்த அளவுக்கு ஆபாசமாக சட்டங்களை எழுதி வைத்து முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை இவர்கள் நாசமாக்கி வைத்துள்ளார்கள் என்பது அம்பலமானது.
இதோ இந்த அற்புத விளக்கங்களைக் காணுங்கள்.குறிப்பு : ஆபாச மத்ஹபு சட்டங்கள் குறித்த இந்த விவாத டிவிடிக்களை பார்ப்போர் கவனத்திற்கு..
மத்ஹப்கள் அனைத்தும் ஆபாசங்களே..! என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் திருக்குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய ஏராளமான ஆபாசமான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. அந்த ஆபாச மத்ஹப்களிலிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மத்ஹப் நூல்களில் காணப்படும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால், அருவருப்பான வார்த்தைகளை பேச தயங்கும் நாம்,
மத்ஹப்களின் ஆபாசங்களை விவாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை தெறிவித்துக்கொள்கிறோம்.