நாற்பது புதன் கிழமை தொடர்ந்து மொட்டையடித்தால் ஆலிம் ஆகிவிடலாம்:
- மத்ஹபு நூல் மஙானியின் அற்புத(?)ச் சட்டம்!
- மத்ஹபு நூல் மஙானியின் அற்புத(?)ச் சட்டம்!
குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 6
நாம் மார்க்கத்தில் தலை சிறந்த ஆலிம்சாவாக ஆகவேண்டுமென்றால் அதற்கு ஓர் அற்புதமான சட்டத்தை மஙானி என்ற மத்ஹபு நூலில் கூறியுள்ளார்கள்.
அதாவது யார் ஒருவர் 40 புதன் கிழமைகள் தொடர்ச்சியாக 40 தடவை மொட்டை அடிக்கின்றாரோ அவர் தலைசிறந்த மார்க்க அறிஞராகிவிடுவார் என்று அந்த நூலில் அற்புதச்சட்டம் எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி எந்த வசனத்திலிருந்து எந்த ஹதீஸ்லிருந்து இந்த அற்புதச்(?) சட்டத்தை வகுத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினோம்.
இதற்கான ஆதாரத்தை பிரிண்ட் அவுட்டாக தாருங்கள் என்று கேட்டனர். முதல் நாள் முதல் அமர்விலேயே இதற்கான பிரிண்ட் அவுட்டும் வழங்கப்பட்டது.
முன் பின் வாசகங்களை இருட்டடிப்புச் செய்து மறைத்துள்ளீர்கள். நாங்கள் அம்பலப்படுத்துவோம் என்று சொன்னார்கள். இது தமிழில் எழுதப்பட்டுள்ள நூல் தானே! உடனடியாக வாசித்துக் காண்பித்து நாங்கள் செய்த மோசடியை அம்பலப்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தோம்.
மஙானியிலிருந்து எடுத்துக்காட்டி இதை விளக்காமல் இங்கிருந்து போகமாட்டோம் என்று வீர வசனம் பேசியவர்கள் கடைசி வரைக்கும் இதற்கும் பதிலளிக்காமல் ஓட்டமெடுத்தனர்.
குறிப்பு : ஆபாச மத்ஹபு சட்டங்கள் குறித்த இந்த விவாத டிவிடிக்களை பார்ப்போர் கவனத்திற்கு..
மத்ஹப்கள் அனைத்தும் ஆபாசங்களே..! என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் திருக்குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய ஏராளமான ஆபாசமான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
மத்ஹப்கள் அனைத்தும் ஆபாசங்களே..! என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் திருக்குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய ஏராளமான ஆபாசமான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
அந்த ஆபாச மத்ஹப்களிலிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மத்ஹப் நூல்களில் காணப்படும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால், அருவருப்பான வார்த்தைகளை பேச தயங்கும் நாம்,
மத்ஹப்களின் ஆபாசங்களை விவாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்
மத்ஹப்களின் ஆபாசங்களை விவாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்
No comments:
Post a Comment