News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Thursday, October 11, 2018

மய்யத் வைக்கும் குளிர் பெட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுல்லாஹி வ பரக்காத்தஹு ,

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளையில் ,  மய்யத் வைக்கும் குளிர் பெட்டி வாங்கப்பட்டுள்ளது ,


Image may contain: 2 people, including Shek Sheek Goodu, people standing

தேவைப்படுவோர் பண்ணுருட்டி கிளை நிர்வாகிகளை தொடர்புகொள்ளவும் 

Thursday, May 17, 2018

பிறை அறிவிப்பு : ரமலான் பிறை தென்பட்டது 2018

பிறை அறிவிப்பு:
ரமலான் பிறை தென்பட்டது!

இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரமலான் முதல் பிறை தென்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

Image may contain: sky and text


Sunday, May 13, 2018

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி
ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி


Image may contain: text


துணைத்தலைவர் R.அப்துல் கரீம் அவர்கள் தலைவர் பொறுப்புவகிப்பார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பதவி வெற்றிடமானதால் ஜமாஅத்தின் பைலா விதிகளின்படி துணைத்தலைவர் R.அப்துல் கரீம் அவர்கள் தலைவர் பொறுப்புவகிப்பார் என அறிவிக்கப்படுகிறது
இப்படிக்கு
அப்துன்னாசர்
மேலாண்மைக்குழுத் தலைவர்

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு:
12.5.2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூடியது. அப்போது சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மீது புகார் வந்தது. அது குறித்து விசாரிக்கப்பட்டது. சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இனி எக்காலத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர இயலாத படி நீக்கி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது குறித்து முழு விளக்கம் எதிர்வரும் ரமளான் மாதத்திற்குப் பிறகு நடைபெறவுள்ள
மாநில பொதுக்குழுவில் விளக்கப்படும்.
இன்ஷா அல்லாஹ்...
இப்படிக்கு ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
உயர்நிலைக் குழு

Thursday, May 10, 2018

தமிழகத்திற்கான ரமலான் பிறை அறிவிப்புதமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :
ரமலான் மாதம்
கடந்த 17.4.18 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 16.5.18 புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.

அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு
7550277339
9952035444
9952056444
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்
Image may contain: text


பீஜே அவர்களின் புதிய கடிதம்!

பீஜே அவர்களின் புதிய கடிதம்!
உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கு பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆடியோ சம்மந்தமாக புகார் எதுவும் வராமல் நாமாக வலியச் சென்று விசாரிக்கும் நடைமுறை இல்லை என்பதால் எனது விலகலைத் திரும்பப் பெறுமாறு உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்து வருகிறார்கள்.
நீங்கள் விசாரணை நடத்தி நான் குற்றமற்றவன் என்று நிரூபித்தாலும் அதன் பின்னரும் நான் விலகலைத் திரும்பப் பெற வேண்டாம் என்பது தான் என் குடும்பத்தினரின் எண்ணமாக உள்ளது.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
என் மீது சுமத்தப்பட்டது போல் யார் மீது அவதூறு பரப்பப்பட்டாலும் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். நானும் பாதிக்கப்படுகிறேன். ஆனால் எனக்கு முன்பு போல் வலிமையான இதயம் இல்லை. இரு முறை அட்டாக் வந்து இரு தடவையும் ஆஞ்சயோ பண்ணியதால் என்னைப் பற்றிய கேவலமான விமர்சனங்கள் நூற்றுக் கணக்கான நபர்களால் பரப்பும் போது இதயம் மிகவும் பாதிக்கிறது.
மேலும் என்னுடன் பயணித்தவர்களே நம் ஜமாஅத்தை விட்டுப் போன பின் இது போல் அதிகம் பரப்புவதைக் காண்கிறேன். இதை நேற்று வரை பொய் என்று சொன்னவர்கள் இப்போது மெய் என்று வாதிடும் போது கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் என் மீது அன்பு கொண்ட மக்கள் எதிரிகளுக்குப் பதில் கொடுப்பதிலேயே தமது நேரங்களைச் செலவிடுகிறார்கள். ஆக்கப்பூர்வமான பணிகள் எதிலும் ஈடுபட முடியாமல் என்னைப் பற்றி எதிர்த்தும், ஆதரித்தும் எழுதுவது மட்டுமே முக நூலில் மலிந்து கிடக்கின்றது. இதுவும் என்னை மிகவும் பாதிக்கிறது.
அது மட்டுமில்லாமல் என் மீது கொண்ட அன்பின் காரணமாக எனக்கு எதிராக வதந்தி பரப்புவோரைத் தரக்குறைவாக விமர்சிப்பதையும், எதிரிகளின் குடும்பப் பெண்களைக் கேவலமாகப் பேசுவதையும் காண முடிகிறது. யார் என்ன செய்தாலும் அனைத்தும் நான் செய்வதாகவே பார்க்கப்படுகிறது. அதை ஒட்டியும் விமர்சனங்கள் நீள்கின்றன.
பல மாதங்களுக்குப் பின் நான் விலகல் அறிவிப்பு செய்த அன்று தான் நிம்மதியான தூக்கம் வந்தது. எல்லா பாரத்தையும் இறக்கி வைத்தது போல் அன்று தான் உணர்ந்தேன்.
இதை விட முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத் எதிரிகள் பீஜே தான் தவ்ஹீத் ஜமாஅத் என்று கருதுகிறார்கள். என்னை முடக்கினால் தவ்ஹீத் பிரச்சாரம் முடங்கி விடும் என்று கணக்கிடுகிறார்கள்.
தவ்ஹீத் சகோதார்களில் சிலரும் அந்த மன நிலையில் தான் உள்ளனர்.
இதை உடைத்து ஆக வேண்டும். மக்களால் அதிகம் அறியப்பட்ட ஒருவரால் தான் இந்த ஜமாஅத்தைக் கொண்டு செல்ல முடியும் என்பதைப் பொய்யாக்க வேண்டும்.
இந்த ஜமாஅத்தில் நல்ல ஆய்வுத் திறன் மிக்க அறிஞர்கள் பலர் உள்ளனர். தியாகமும்,அர்ப்பணிப்பும் செய்பவர்கள் உள்ளனர். அந்த நல்லறிஞர்களைக் கொண்டு இந்த ஜமாஅத்தைச்சிறப்பாக வழிநடத்த முடியும்.
இது கொள்கைக்கான ஜமாஅத் ஆகும். பீஜே இல்லாவிட்டாலும் கொள்கைக்காக இந்த ஜமாஅத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். வீரியமாக செயல்படுவார்கள்.
எனவே என்னை தயவு செய்து வற்புறுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். என் விலகலில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
பீ.ஜைனுல் ஆபிதீன்

மேலாண்மைக்குழுத் தலைவருக்கும், அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன்

அஸ்ஸலாமு அலைக்கும்.
மேலாண்மைக்குழுத் தலைவருக்கும்,
அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது.  
சவூதியில் இருந்து மேலாண்மைக் குழு சார்பில் மேலாண்மைக் குழுத் தலைவர் வெளியிட்ட அறிக்கை மூலம் நம் ஜமாஅத் ஆளுக்கு ஒரு நீதி வழங்கும் ஜமாஅத் அல்ல என்பதை நிலைநாட்டியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
யார் மீது புகார் சொல்லப்பட்டாலும் புகார் சொல்பவர் நிரூபிக்கும் பொறுப்பேற்று தலைமையை அணுகினால் தான் அது குறித்து ஜமாஅத் விசாரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு ஜமாஅத்தின் கடந்த கால நடைமுறைக்கு ஏற்பவே அமைந்துள்ளது.
காலம் காலமாக மக்களின் நம்பிக்கை மீது தான் இந்த ஜமாஅத் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை நாம் காலம் காலமாக காப்பாற்றி வருகிறோம்.
அந்த நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பு போதுமானதாக இல்லை என்று நான் கருதுகிறேன்.
ஆடியோ வெளியிட்டவர்கள் அந்தப் பெண் குறித்த சில விபரங்களையும் வெளியிட்டு உள்ளனர்.
எனவே மேலாண்மைக் குழு தானாக முன் வந்து அந்தக் குடும்பத்தினரையும் விசாரித்து உண்மையைக் கண்டறிந்து முடிவு செய்வது தான் நல்லது. ஜமாஅத்தின் கண்ணியத்துக்கு உகந்தது.
நிரூபிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது மட்டும் இதற்குப் போதுமானதாக இல்லை.
இந்த ஜமாஅத்தில் மெய்யாக நம்பிக்கை உள்ள ஒரே ஒரு சகோதரன் கூட அதிருப்தி அடையாத வகையில் தான் மேலாண்மைக் குழுவின் முடிவு அமைய வேண்டும்.
எந்த நபரின் மீதும் இந்த ஜமாஅத் கட்டமைக்கப்படவில்லை. கொள்கையின் மீதும் தார்மீக நெறிகள் மீதும் தான் இந்த ஜமாஅத் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஐயமற நிரூபிக்க இது அவசியம் என்று நான் கருதுகிறேன்.
எனவே அயல்நாட்டில் மேலாண்மைக்குழுத் தலைவர் இருந்தாலும் இது குறித்து விசாரணைக்குழு அமைத்து உண்மையைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை அனைத்துப் பணிகளில் இருந்தும் என்னை விடுவித்து விடுவதே ஜமாஅத்துக்கு நன்மையானதாகும்.
எதிரிகளின் விமர்சனம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜமாஅத் சரியாகவே செயல்படுகிறது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.
எனது கோரிக்கையை நான் அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தேன். அதை அனைவரும் நிராகரித்து விட்டீர்கள். எனவே தலைமையின் முக நூலில் இதை நானே பதிவிடுகிறேன்.
அனைத்துப் பணிகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
பி.ஜைனுல் ஆபிதீன்


Tuesday, May 1, 2018

பண்ணுருட்டி கிளை சார்பாக தினமும் குரான் ஓத பயிற்சிபண்ணுருட்டி கிளை சார்பாக தினமும் குரான் ஓத  பயிற்சி

அஸ்ஸலாமு  அலைக்கும்  ரஹமதுல்லாஹி வ பரக்காத்தஹு ,
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக பண்ருட்டி மர்கஸில் தினமும் பஜார் தொழகை முடிந்ததும் குர்ஆன் ஓத கற்று தரப்படுகிறது,

அல்ஹம்துலில்லாஹ் அதிகமான மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுகின்றார்கள் .


Image may contain: 4 people, people sitting and table

Sunday, April 15, 2018

ஆஷீபாவை படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளை கைது செய்து தூக்கிலிட கோரி ஜமாஅத் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் விவரம்

8 வயது ஆஷீபாவை கோவில் கருவறைக்குள் வைத்து கற்பழித்து படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளை கைது செய்து தூக்கிலிட கோரி தமிழகம் முழுவதும் , தமிழ் நமது தவ்ஹீது ஜமாஅத் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் விவரம் .

No automatic alt text available.


அனைத்து கிளைகள் மற்றும் மாவட்டங்கள் ஒட்ட வேண்டிய போஸ்டர் மாதிரி

அனைத்து கிளைகள் மற்றும் மாவட்டங்கள் ஒட்ட வேண்டிய போஸ்டர் மாதிரி
Image may contain: 1 person
Thursday, April 5, 2018

கடலூர் வடக்கு மாவட்ட வட்டார தர்பியா தலைமை சுற்றறிக்கை எண்:21/2018

ஏக இறைவனின் திருப்பெயரால்....

♻♻♻♻♻♻♻♻♻♻♻

மாவட்ட
தலைமை சுற்றறிக்கை
எண்:21/2018

 தேதி : 04 .04.2018

♻♻♻♻♻♻♻♻♻♻♻


கண்ணியத்திற்குரிய  கிளை தலைவர்,நிர்வாகிகளுக்கு....

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்கள் அனைவரையும் இந்த அறிவிப்பு பூரண உடல்நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையுடனும் சந்திகட்டுமாக....


         வட்டார தர்பியா

கடலூர் வடக்கு மாவட்டத்திலுள்ள கிளைகளை மூன்று வட்டாரங்களாக  பிரிக்கபட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தர்பியா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி நெய்வேலி கிளை, பண்ருட்டி கிளை ,
பக்கிரிபாளையம் கிளை , Cn பாளையம் கிளை ,
மேல்பட்டம்பாக்கம் கிளை
, நெல்லிகுப்பம் கிளை1,
நெல்லிகுப்பம்கிளை 2

இவற்றை உள்ளடக்கிய

 வட்டாரத்திற்கு தர்பியா

இன்ஷா அல்லாஹ்

 நாள்:08/04/2018. (ஞாயிற்று கிழமை ),

நேரம்:காலை 10 to 12

இடம்:TNTJ மர்கஸ்,பண்ருட்டி

சிறப்புரை:

  சகோ.இ.முகமது.
(மாநில செயலாளர்)

சகோ.CV.இம்ரான்
(மாநில செயலாளர்) வட்டார தர்பியா நடத்த திட்டமிட்டுள்ளபடியால்கிளை நிர்வாகிகள்,அணிச்செயலாளர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
 
♻♻♻♻♻♻♻♻♻♻♻

இப்படிக்கு...

மாவட்ட நிர்வாகம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கடலூர் வடக்கு மாவட்டம்

♻♻♻♻♻♻♻♻♻♻♻

Monday, April 2, 2018

அல்தாஃபி பிரச்சினையால் ஜமாஅத்தின் நன்மதிப்பு சிதைந்ததா?

அல்தாஃபி பிரச்சினையால் ஜமாஅத்தின் நன்மதிப்பு சிதைந்ததா?

யார் அந்த நாகைப் பெண்?

யார் அந்த நாகைப் பெண்?


அந்த பெண் குற்றச்சாட்டை வாபஸ் பெற்றதை ஏன் மறைத்தீர்கள்?

அந்த பெண் குற்றச்சாட்டை வாபஸ் பெற்றதை ஏன் மறைத்தீர்கள்?மூன்று பெண்கள் வாழ்க்கையை ஜமாஅத் நாசமாக்கியதா?

மூன்று பெண்கள் வாழ்க்கையை ஜமாஅத் நாசமாக்கியதா?

அல்தாஃபிக்கு ஒரு நியாயம்? ரஸாக்கிற்கு ஒரு நியாயமா?

அல்தாஃபிக்கு ஒரு நியாயம்?
ரஸாக்கிற்கு ஒரு நியாயமா?


அல்தாஃபி விசாரணை முழு வீடியோ எங்கே?

அல்தாஃபி விசாரணை முழு வீடியோ எங்கே?


பயான் செய்வது பெரிதா? நிர்வாகம் செய்வது பெரிதா?

பயான் செய்வது பெரிதா?  நிர்வாகம் செய்வது பெரிதா?விபச்சாரக் குற்றத்திற்கு மார்க்க தண்டனை வேறு நிர்வாக நடவடிக்கை வேறு

விபச்சாரக் குற்றத்திற்கு மார்க்க தண்டனை வேறு
நிர்வாக நடவடிக்கை வேறு


நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றத்தை மட்டும் சொல்லாமல் வேறு குற்றங்களையும் சில நிர்வாகிகள் பரப்பியது சரியா?

நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றத்தை மட்டும் சொல்லாமல் வேறு குற்றங்களையும் சில நிர்வாகிகள் பரப்பியது சரியா?

சையது இப்ராஹீமிற்கு அதிக சம்பளமா? செய்யாத வேலைக்கு சம்பளமா?

சையது இப்ராஹீமிற்கு அதிக சம்பளமா?
செய்யாத வேலைக்கு சம்பளமா?

சேப்பாக்கம் அப்துல்லாஹ்வை அசிங்கப்படுத்தியது ஏன்?

சேப்பாக்கம் அப்துல்லாஹ்வை அசிங்கப்படுத்தியது ஏன்?முபாஹலா ஐயமும் தெளிவும்

முபாஹலா ஐயமும் தெளிவும்


சையது இப்ராஹீம், கலீல் ரசூல், அப்துல் ரஹ்மான் முபாஹலாவிற்கு அழைத்தது நியாயமா?

சையது இப்ராஹீம், கலீல் ரசூல், அப்துல் ரஹ்மான் முபாஹலாவிற்கு அழைத்தது நியாயமா?

நிர்வாகிகள் தகுதியற்றவர்களா?

நிர்வாகிகள் தகுதியற்றவர்களா?

சத்தியத்தில் இருக்கும் வரை ஜமாஅத்தை அழிக்க முடியாது

சத்தியத்தில் இருக்கும் வரை ஜமாஅத்தை அழிக்க முடியாது


அல்தாஃபி பிரச்சனை முடிந்து விட்டது


அல்தாஃபி பிரச்சனை முடிந்து விட்டது


Tuesday, March 20, 2018

தமிழக அரசின் மதவெறிப் போக்கிற்கு டி.என்.டி.ஜே. கடும் கண்டனம்!தமிழக அரசின் மதவெறிப் போக்கிற்கு டி.என்.டி.ஜே. கடும் கண்டனம்!
பாபர் மசூதி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவரும் நிலையில் பாபர் மசூதி இடத்தில் ராமர் ஆலயம் எழுப்புவோம் என்ற கோரிக்கையுடன் காவி அமைப்புகள் ரத யாத்திரை நடத்துகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடத்தப்படும் இந்த ஊர்வலம் சட்ட விரோதமானதாகும்.
சட்டவிரோதமான ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து மத நல்லிணக்கத்தைச் சீரழிக்க துணை நிற்கும் தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் 144 தடை உத்தரவு பிறப்பித்தால் ஐந்து பேருக்கு மேல் அறவே கூடக்கூடாது. ஆனால் காவிகளுக்கு எதிராக கூடுபவர்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவை அமல்படுத்திவிட்டு, அவர்களை முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்துவிட்டு, காவிகள் மட்டும் ரத ஊர்வலம் வரலாம் என்றால் இதைவிட கோமாளித்தனம் ஏதுமிருக்க முடியாது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் ஊர்வலமும் அதில் அடங்கும்.
தமிழக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோத மதவெறி நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
Image may contain: one or more people and text
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்


Tuesday, March 13, 2018

Tuesday, March 6, 2018

ரவிசங்கர் பாபாவின் விஷமப் பேச்சிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

அயோத்தியா விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்காவிட்டால் இந்தியா சிரியாவாக மாறும்:
-ரவிசங்கர் பாபாவின் விஷமப் பேச்சிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் என்ற போர்வையில் பா.ஜ.க.வின் கள்ள ஏஜெண்டாக செயல்படுபவர் காவிச் சாமியார் ரவிசங்கர் பாபா.
பாபர் மஸ்ஜித் பிரச்சினையில் முஸ்லிம்களை காவிகளின் சூழ்ச்சி வலையில் விழவைப்பதற்காக பா.ஜ.க. நியமித்த கள்ள ஏஜெண்ட்தான் இந்த ரவிசங்கர் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறோம்.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சில முஸ்லிம் பெயர் தாங்கிகளைச் சந்தித்து இவர் நாடகங்களை அரங்கேற்றினார்.
இவரின் நஞ்சு உள்ளத்தை நன்கறிந்த முஸ்லிம்கள், இவரின் சூழ்ச்சிக்குப் பலியாகவில்லை.
இதனையடுத்து தற்போது விஷத்தை உமிழ தொடங்கியுள்ளார்.
Image may contain: 1 person, smiling, text

இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ”ராமர் கோவில் பிரச்சினையை விரைவாகத் தீர்க்காவிட்டால், இந்தியா வரும் காலத்தில் சிரியாவாக மாறிவிடும். சிரியா போர் சொல்வதெல்லாம், முஸ்லிம்கள் அயோத்தி விவகாரத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதாகும். நல்லெண்ண நோக்கில் அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கையை கைவிட வேண்டும்” என்று காவி விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாபர் பள்ளிவாசலில் நள்ளிரவில் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்து, அதை பிரச்சினையாக கிளப்பி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை ரத்த யாத்திரை நடத்தி இடித்துத் தள்ளியதே காவிகள்தான் என்பது உலகை விட்டு நீங்காத வரலாறு.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்காவிட்டால் சிரியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது போல் இந்தியாவிலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்று மறைமுகமாக மிரட்டுகிறார்.
உலக ஆசைகளுக்கு அடிபணிந்து, நாட்டைக் காட்டிக் கொடுத்த காவிகளைப் போல மிரட்டியவுடன் பணிந்துபோக முஸ்லிம்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.
படைத்த இறைவனைத் தவிர வேறு யாருக்கும் முஸ்லிம்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.
அதனால்தான் சிரியாவில் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று மிரட்டும் மனித மிருகங்களைக் கண்டு சிரியா முஸ்லிம்கள் அஞ்சவில்லை. இஸ்லாத்தை விட்டு ஓடிவிடவில்லை.
அதேபோல்தான் ஆட்சி அதிகாரம் நம் கையில் இருக்கிறது. காவல்துறை நம் கையில் இருக்கிறது. ராணுவம் இருக்கிறது. முஸ்லிம்களை மிரட்டி பணிய வைத்து விடலாம் என்று காவிகள் நினைப்பார்களேயானால் அவர்களைக் கண்டு கடுகளவு கூட முஸ்லிம்கள் பயப்பட மாட்டார்கள்.
முஸ்லிம்களின் மத உணர்வோடு தொடர்புடைய பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் ரவிசங்கர் காவி விசுவாசத்தைக் காட்டாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.
இவரின் விஷமப் பேச்சினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிப்பதுடன் இனிமேலும் இவர் இதேபோன்று பேசுவாரேயானால் தக்க முறையில் அவருக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.
நாட்டில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி கலவர விதை தூவும் பயங்கரவாதியான ரவி சங்கர் பாபாவை தேசிய பாதுகாப்புத் தடைச் சட்டத்தில் உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

Monday, March 5, 2018

#முகநூலில்_அக்கவுண்ட்_வைத்திருக்கும்_தவ்ஹீத்_ஜமாஅத்தின்_உறுப்பினர்கள்_கவனத்திற்கு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் தங்கள் பெயருடன் TNTJ என்பதையோ, TNTJ கொடியையோ போட்டு முகநூலில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
ஜமாஅத்தின் கொள்கையையும், நிலைப்பாட்டையும் மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாத சிலர் TNTJ என்று தங்கள் பெயருடன் சேர்த்தும், அல்லது TNTJ கொடியை இணைத்தும் ஜமாஅத்துக்கு எதிரான, ஜமாஅத்துக்கு சங்கடம் ஏற்படுத்தும் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
இதைத் தவிர்ப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் தமது பெயருடன் TNTJ அல்லது TNTJ கொடி போடுவதாக இருந்தால் தங்கள் பெயருடன் உறுப்பினர் எண்ணையும் சேர்த்து போடவும்.
ஏற்கனவே முகநூலில் இருப்பவர்களும் புதிதாக நுழைபவர்களும் இதைக் கடைப்பிடிக்கவும். இதன் மூலம் ஜமாஅத் பெயரில் குழப்பவாதிகள் ஊடுறுவுவதை தடுக்க முடியும்.
உறுப்பினர் எண்ணைக் குறிப்பிடாமல் பதிவிடுவோர் நம் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
இனி வரக்கூடிய காலங்களில் இதை கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

Tuesday, January 23, 2018

அவசர அறிக்கைஅவசர அறிக்கை
அன்புள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு...
தமிழக அரசு வரலாறு காணாத அளவிற்கு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதைக் கண்டித்து கிளை மாவட்டங்களுக்கு சக்தி இருந்தால் இந்த போஸ்டரை அடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
போஸ்டர் வாசகம்
No automatic alt text available.
தமிழக அரசே
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும்
பஸ் கட்டண உயர்வை
உடனே திரும்பப் பெறு
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ். சையது இப்ராஹீம்

https://www.facebook.com/ThouheedJamath/photos/a.340617859290568.86761.338454826173538/1814325125253160/?type=3&theater

இந்த வார உணர்வு (26.01.18 - 01.02.18)

இந்த வார  உணர்வு இதழில்
(26.01.18 - 01.02.18)


No automatic alt text available.

Tuesday, January 16, 2018

இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை

இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை:
- ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹஜ் யாத்திரைக்கான கொள்கைகளை வடிவமைப்பதற்கு, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜ் மானியம் ரத்துசெய்யப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களை மத்திய அரசு சுரண்டி கொள்ளையடிக்கின்றது என்பதே உண்மையாகும்.
சவூதி அரசாங்கம் இந்திய முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு விசா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதோ, அதில் எழுபது சதவிகிதம் பேரை ஹஜ் கமிட்டி மூலம் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. மீதி முப்பது சதவிகிதம் பயணிகள் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்வோர் அதற்கான கட்டணமாக 1.80,000 (ஒரு லட்சத்து என்பதாயிரம்) ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
சவூதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட ஹாஜிகளின் செலவுகளுக்காக 34 ஆயிரத்தை ஜித்தாவில் இறங்கிய உடன் ஹாஜிகளின் கையில் தருவார்கள்.
இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை 1,46,000 (ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம்) ரூபாய்கள்.
விமானத்திற்கான அதிகபட்சக் கட்டணம் : 25,000
மக்காவில் தங்கும் வாடகை : 50,000
மதீனாவில் தங்கும் கட்டணம் : 20,000
மக்காவில் ஹஜ் வழிகாட்டி கட்டணம், வாகனங்களில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லுதல் கட்டணம் வகைக்காக 25.000
ஆக ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் கமிட்டி மூலம் செலவிடும் தொகை 1,20,000 ரூபாய்கள்தான் ஆகிறது.
அதாவது ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் மத்திய அரசு அடிக்கும் கொள்ளை சுமார் 25 ஆயிரம் ரூபாய்கள். இது தவிர விமானக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் லாபம் வேறு உள்ளது.
இதில் அரசாங்கத்தின் மானியத்துக்கு எந்த வேலையும் இல்லை.
ஹஜ் பயணத்துக்கான அனுமதியை வழங்கிவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் 25 முதல் முப்பதாயிரம் ரூபாய்கள் மிச்சமாகும்.
அப்படியானால் மானியம் என்ற பிரச்சனை எப்படி வருகின்றது?
ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்பவர்கள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, சவூதி அரசுக்குச் சொந்தமான சவூதி ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமானங்களில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஏர் இந்தியாவிடம் போதிய விமானம் இல்லாவிட்டால் பிற நாட்டு விமானங்களை அடிமாட்டு கட்டணத்துக்கு ஏர் இந்தியா வாடகைக்கு எடுக்கும். அதை ஏர் இந்தியா பெயரில் இயக்கும். அதில் தான் பயணிக்க வேண்டும்.
ஹஜ் நேரத்தில் விமானக் கட்டணத்தை 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்துவார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்ற விமானங்களில் 20 ஆயிரமே கட்டணமாக இருக்கும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வானவர்கள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை.
அதாவது விமானக் கட்டணம் 25 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்துவதால் நம்மிடம் வாங்கிய தொகையில் மீதமிருந்த 25 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஹஜ் பயணிக்காகவும் ஏர் இந்தியாவுக்கு (அதாவது தனக்குத்தானே) அரசு ஐம்பதாயிரம் ரூபாய்களை மானியம் என்ற பெயரில் வழங்கும். ஹாஜிகளுக்கு வழங்காது.
மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான். அதைத்தான் ஹஜ் மானியத்துக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாத மக்களையும் ஒரே நேரத்தில் மூடர்களாக்கி வருகிறார்கள்.
ஏர் இந்தியாவின் வருமானத்தைப் பெருக்க ஒவ்வொரு ஹாஜியிடம் இருந்தும் கூடுதலாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்களை ஏமாற்றிப் பறித்துக் கொண்டு மானியம் வழங்குவதாகக் கூறுவது பச்சை அயோக்கியத்தனமாகும். மேலும் ஹஜ் பயணிகளில் பாதிப் பேர் ஏர் இந்தியா மூலம் பயணம் செய்தால் மீதிப் பேர் சவூதி ஏர் லைன்ஸ் மூலம் பயணிக்கிறார்கள். பாதி மானியத்தை சவூதி ஏர் லைன்ஸுக்கு வழங்க வேண்டுமல்லவா? அப்படி வழங்குவதில்லை. செய்யாத பயணத்துக்கான பொய்யான அந்த மானியத்தையும் ஏர் இந்தியாவே அதாவது இந்திய அரசே எடுத்துக் கொள்கிறது.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களிடம் இப்படி கொள்ளையடிக்கும் நாடுகள் உலகில் எங்குமே இருக்காது. கொள்ளையும் அடித்து விட்டு மானியம் அளிப்பதாகக் கூறும் நாடுகளும் உலகில் இருக்காது.
அனைத்து மக்களுக்குமான வரிப்பணத்தில் இருந்து இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையும் இல்லை என்பதை இதிலிருந்தே அறியலாம். இந்தக் கேடுகெட்ட மானியத்தை முஸ்லிம்கள் கேட்கவும் இல்லை. எனவே இந்தப் போலி ஹஜ் மானியத்தை ஒழித்துக் கட்டினால் அது முஸ்லிம்களுக்கு நன்மைதான்.
ஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்ற கொள்ளை அடிக்கும் கொள்கையைக் கைவிட்டு, ஹாஜிகள் தமக்கு விருப்பமான எந்த விமான சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மானியத்தை நிறுத்தட்டும். அப்படிச் செய்தால் முஸ்லிம்கள் அதைப் பெரிதும் வரவேற்பார்கள்.
டிரான்சிட் முறையில் பயணித்தால் 15 ஆயிரம் கட்டணத்தில் ஜித்தா போக முடியும். பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தால் இன்னும் குறைந்த கட்டணத்தில் புனிதப் பயணம் செய்து ஒவ்வொரு ஹாஜியும் முப்பதாயிரத்துக்கு மேல் மிச்சப்படுத்த முடியும்.
போலி ஹஜ் மானியம் ஒழிக்கப்படுவதோடு ஹாஜிகளின் பணத்தைக் கொல்லைப் புறமாக மத்திய அரசு சுரண்டுவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

Source : https://www.facebook.com/ThouheedJamath/posts/1806226829396323

Friday, January 12, 2018

TNTJ கொள்கை சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள்!

TNTJ கொள்கை சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள்!

1) Facebook, WhatsApp, Twitter போன்ற சமூக வலைதளங்களில் தனது உண்மை முகத்தை மறைத்து பெயர், ஊர், முகவரி, கைபேசி எண் இல்லாமல் கோழைத்தனமாக  "FAKE ID" யில் யாரேனும் நம் ஜமாஅத்தை [ TNTJயை ] எவ்வளவு கொச்சைப்படுத்தி எழுதினாலும் வாட்ஸ்அப் பில் எவ்வளவு தரம் தாழ்ந்து பேசினாலும் அங்கு சென்று எந்த COMMENTS ஸூம் செய்யாதீர்கள்!

2) அங்கு நீங்கள் சென்றால் முதலில் உங்களை விமர்சிக்க தொடங்கி பிறகு உங்கள் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சிப்பார்கள். பதிலுக்கு நீங்களும் கோபத்தில் அவர்களது குடும்பத்தை விமர்சிப்பீர்கள்.

3) உடனே நீங்கள் பேசியதை மட்டும் "SCREEN SHOT" எடுத்து பாருங்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தின்" லட்சணத்தை என்று FACEBOOK, What'sapp போன்ற வலைதளங்கள் முழுவதும் பரப்புவார்கள்.

4) இதனால் உங்களுடைய கண்ணியம் மட்டுமின்றி நம் "தவ்ஹீத் ஜமாஅத்தின்" கண்ணியமும் பாதிக்கப்படும்.

5) நம் ஜமாஅத்தில் 30 ஆண்டுகளாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது உழைப்பையும், தியாகத்தையும், பொருளாதாரத்தையும் களத்தில் செலவிட்டு வருவது தவ்ஹீதை சொல்வதற்காக

6) ஈடு இணையில்லா அந்த தியாகத்தை FACEBOOK, What'sapp, twitter ல் உங்களுடைய ஒரு COMMENT டினால் சீர்குலைத்து விடாதீர்கள்.

7) ஏகத்துவத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஏகத்துவ எதிரிகள் பித்து பிடித்தாற்போல் "தவ்ஹீத் ஜமாஅத்திற்கு" எதிராக பலவிதமான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவர்களின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி விடாதீர்கள்.

8) நம் ஜமாஅத் செய்யக்கூடிய இரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், அநாதை சிறுவர் ஆதரவு இல்லம், முதியோர் இல்லம், வெள்ள நிவாரண பணிகள், புயல் நிவாரண பணிகள் என்று நம் ஜமாஅத் சார்பில் எண்ணற்ற பணிகள் தினம் தினம் நடத்தப்பட்டு வருகிறது. அதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள்.

அதை காணக்கூடியவர்கள் தவ்ஹீதை சிந்திப்பதற்கு ஏதுவாக அமையும். பிறமத சகோதரர்கள் இஸ்லாத்தை காதலிப்பதற்கு உந்து சக்தியாக அமையும்.

சமூக வலைத்தளத்தை புத்திசாலித்தனத்துடனும், விழிப்புடனும், முன்எச்சரிக்கையுடனும் , கண்ணியம்தவறாமலும், சமூகத்திற்கு பயனுள்ள வகையிலும் அமைத்துக் கொள்ளுங்கள்.

சமூக வலைதளத்தின் மூலம் அறிவீனர்கள் நம் ஏகத்துவ சொந்தங்களை வீண்வம்பிற்கு அழைத்தால் கீழ்காணும் அல்லாஹ்வின் அறிவுரைகளை கடைபிடியுங்கள்:

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!

திருக்குர்ஆன்  7:199

وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள்.

திருக்குர்ஆன்  25:63

وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். "எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன்  28:55

மேலும்:

கொள்கை சொந்தங்களுக்கு முகவரி இல்லா கோழைகள் "குடைசல்" கொடுத்தால் கீழ்காணும் நபிகளாரின் போதனையை நினைவில் நிறுத்துங்கள்:

இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது'

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3.

கல்வியின் சிறப்பு

கொள்கை சொந்தங்களுக்கு அல்லாஹ் வின் ஆறுதல் வார்த்தைகள்:

*وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْ

நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.

அல்குர்ஆன் : 3:139

*وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُو*
َ‏ 
நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும்.ni எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.

அல்குர்ஆன் : 3:104

Wednesday, January 3, 2018

இந்த வார உணர்வு - 22-20இந்த வார உணர்வு (05.01.18 - 11.01.18) இதழில்... (குரல் 22 : 20)