TNTJ கொள்கை சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள்!
1) Facebook, WhatsApp, Twitter போன்ற சமூக வலைதளங்களில் தனது உண்மை முகத்தை மறைத்து பெயர், ஊர், முகவரி, கைபேசி எண் இல்லாமல் கோழைத்தனமாக "FAKE ID" யில் யாரேனும் நம் ஜமாஅத்தை [ TNTJயை ] எவ்வளவு கொச்சைப்படுத்தி எழுதினாலும் வாட்ஸ்அப் பில் எவ்வளவு தரம் தாழ்ந்து பேசினாலும் அங்கு சென்று எந்த COMMENTS ஸூம் செய்யாதீர்கள்!
2) அங்கு நீங்கள் சென்றால் முதலில் உங்களை விமர்சிக்க தொடங்கி பிறகு உங்கள் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சிப்பார்கள். பதிலுக்கு நீங்களும் கோபத்தில் அவர்களது குடும்பத்தை விமர்சிப்பீர்கள்.
3) உடனே நீங்கள் பேசியதை மட்டும் "SCREEN SHOT" எடுத்து பாருங்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தின்" லட்சணத்தை என்று FACEBOOK, What'sapp போன்ற வலைதளங்கள் முழுவதும் பரப்புவார்கள்.
4) இதனால் உங்களுடைய கண்ணியம் மட்டுமின்றி நம் "தவ்ஹீத் ஜமாஅத்தின்" கண்ணியமும் பாதிக்கப்படும்.
5) நம் ஜமாஅத்தில் 30 ஆண்டுகளாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது உழைப்பையும், தியாகத்தையும், பொருளாதாரத்தையும் களத்தில் செலவிட்டு வருவது தவ்ஹீதை சொல்வதற்காக
6) ஈடு இணையில்லா அந்த தியாகத்தை FACEBOOK, What'sapp, twitter ல் உங்களுடைய ஒரு COMMENT டினால் சீர்குலைத்து விடாதீர்கள்.
7) ஏகத்துவத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஏகத்துவ எதிரிகள் பித்து பிடித்தாற்போல் "தவ்ஹீத் ஜமாஅத்திற்கு" எதிராக பலவிதமான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவர்களின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி விடாதீர்கள்.
8) நம் ஜமாஅத் செய்யக்கூடிய இரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், அநாதை சிறுவர் ஆதரவு இல்லம், முதியோர் இல்லம், வெள்ள நிவாரண பணிகள், புயல் நிவாரண பணிகள் என்று நம் ஜமாஅத் சார்பில் எண்ணற்ற பணிகள் தினம் தினம் நடத்தப்பட்டு வருகிறது. அதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள்.
அதை காணக்கூடியவர்கள் தவ்ஹீதை சிந்திப்பதற்கு ஏதுவாக அமையும். பிறமத சகோதரர்கள் இஸ்லாத்தை காதலிப்பதற்கு உந்து சக்தியாக அமையும்.
சமூக வலைத்தளத்தை புத்திசாலித்தனத்துடனும், விழிப்புடனும், முன்எச்சரிக்கையுடனும் , கண்ணியம்தவறாமலும், சமூகத்திற்கு பயனுள்ள வகையிலும் அமைத்துக் கொள்ளுங்கள்.
சமூக வலைதளத்தின் மூலம் அறிவீனர்கள் நம் ஏகத்துவ சொந்தங்களை வீண்வம்பிற்கு அழைத்தால் கீழ்காணும் அல்லாஹ்வின் அறிவுரைகளை கடைபிடியுங்கள்:
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ
பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!
திருக்குர்ஆன் 7:199
وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள்.
திருக்குர்ஆன் 25:63
وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். "எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 28:55
மேலும்:
கொள்கை சொந்தங்களுக்கு முகவரி இல்லா கோழைகள் "குடைசல்" கொடுத்தால் கீழ்காணும் நபிகளாரின் போதனையை நினைவில் நிறுத்துங்கள்:
இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது'
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3.
கல்வியின் சிறப்பு
கொள்கை சொந்தங்களுக்கு அல்லாஹ் வின் ஆறுதல் வார்த்தைகள்:
*وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْ
நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.
அல்குர்ஆன் : 3:139
*وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُو*
َ
நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும்.ni எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.
அல்குர்ஆன் : 3:104
No comments:
Post a Comment