News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, March 6, 2018

ரவிசங்கர் பாபாவின் விஷமப் பேச்சிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

அயோத்தியா விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்காவிட்டால் இந்தியா சிரியாவாக மாறும்:
-ரவிசங்கர் பாபாவின் விஷமப் பேச்சிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் என்ற போர்வையில் பா.ஜ.க.வின் கள்ள ஏஜெண்டாக செயல்படுபவர் காவிச் சாமியார் ரவிசங்கர் பாபா.
பாபர் மஸ்ஜித் பிரச்சினையில் முஸ்லிம்களை காவிகளின் சூழ்ச்சி வலையில் விழவைப்பதற்காக பா.ஜ.க. நியமித்த கள்ள ஏஜெண்ட்தான் இந்த ரவிசங்கர் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறோம்.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சில முஸ்லிம் பெயர் தாங்கிகளைச் சந்தித்து இவர் நாடகங்களை அரங்கேற்றினார்.
இவரின் நஞ்சு உள்ளத்தை நன்கறிந்த முஸ்லிம்கள், இவரின் சூழ்ச்சிக்குப் பலியாகவில்லை.
இதனையடுத்து தற்போது விஷத்தை உமிழ தொடங்கியுள்ளார்.
Image may contain: 1 person, smiling, text

இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ”ராமர் கோவில் பிரச்சினையை விரைவாகத் தீர்க்காவிட்டால், இந்தியா வரும் காலத்தில் சிரியாவாக மாறிவிடும். சிரியா போர் சொல்வதெல்லாம், முஸ்லிம்கள் அயோத்தி விவகாரத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதாகும். நல்லெண்ண நோக்கில் அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கையை கைவிட வேண்டும்” என்று காவி விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாபர் பள்ளிவாசலில் நள்ளிரவில் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்து, அதை பிரச்சினையாக கிளப்பி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை ரத்த யாத்திரை நடத்தி இடித்துத் தள்ளியதே காவிகள்தான் என்பது உலகை விட்டு நீங்காத வரலாறு.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்காவிட்டால் சிரியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது போல் இந்தியாவிலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்று மறைமுகமாக மிரட்டுகிறார்.
உலக ஆசைகளுக்கு அடிபணிந்து, நாட்டைக் காட்டிக் கொடுத்த காவிகளைப் போல மிரட்டியவுடன் பணிந்துபோக முஸ்லிம்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.
படைத்த இறைவனைத் தவிர வேறு யாருக்கும் முஸ்லிம்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.
அதனால்தான் சிரியாவில் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று மிரட்டும் மனித மிருகங்களைக் கண்டு சிரியா முஸ்லிம்கள் அஞ்சவில்லை. இஸ்லாத்தை விட்டு ஓடிவிடவில்லை.
அதேபோல்தான் ஆட்சி அதிகாரம் நம் கையில் இருக்கிறது. காவல்துறை நம் கையில் இருக்கிறது. ராணுவம் இருக்கிறது. முஸ்லிம்களை மிரட்டி பணிய வைத்து விடலாம் என்று காவிகள் நினைப்பார்களேயானால் அவர்களைக் கண்டு கடுகளவு கூட முஸ்லிம்கள் பயப்பட மாட்டார்கள்.
முஸ்லிம்களின் மத உணர்வோடு தொடர்புடைய பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் ரவிசங்கர் காவி விசுவாசத்தைக் காட்டாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.
இவரின் விஷமப் பேச்சினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிப்பதுடன் இனிமேலும் இவர் இதேபோன்று பேசுவாரேயானால் தக்க முறையில் அவருக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.
நாட்டில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி கலவர விதை தூவும் பயங்கரவாதியான ரவி சங்கர் பாபாவை தேசிய பாதுகாப்புத் தடைச் சட்டத்தில் உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

No comments:

Post a Comment