News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Thursday, March 19, 2015

வருமுன் உரைத்த இஸ்லாம் - பகுதி 7

26 தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது

'மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
திருக்குர்ஆன் 16:68,69
இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர்.
உண்மை என்னவென்றால்
மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளூக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிருந்து வெளிப்படுகின்ற ஒரு கழிவு தான் தேன்.
இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன் 'தேனீக்கள் தேனை உணவாகச் சாப்பிடுகின்றன' எனக் கூறுகிறது. 'நீ சாப்பிடு!' என்ற கட்டளையிருந்து இதனை விளங்கலாம்.
சாப்பிட்ட பிறகு அதன் வாயிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், 'அதன் வயிறுகளிருந்து தேன் வெளிப்படுகிறது' என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த மனிதனாலும் கூறுவதற்குச் சாத்தியமில்லை.

அத்துடன் தேனீக்கள் தேனைத் தேடுவதற்காக மிக எளிதாகச் சென்று விட்டு, எளிதாகத் தங்கள் கூட்டுக்கு வந்து சேர்ந்து விடுகின்றன என்ற அறிவியல் உண்மையும் இணைத்துச் சொல்லப்படுகிறது.
தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். அதுவும் இவ்வசனத்தில் கூறப்படுகிறது. இவை மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

27 நவீன வாகனங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் குதிரை ஒட்டகம் ஆகிய உயிரினங்களையே மனிதன் வாகனமாகப் பயன்படுத்தி வந்தான். இன்று நாம் பயன்படுத்தும் நவீன வாகனங்கள் பற்றி மனிதன் கற்பனை கூட செய்திருக்க முடியாது. இதற்கான எந்த அறிகுறியும் அப்போது இருக்கவில்லை.
இத்தகைய காலகட்டத்தில் தான் நவீன வாகனங்கள் இனி மேல் கண்டுபிடிக்கப்படும் என்று தெளிவான வார்த்தைகளால் திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்தது.
கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள். மாலையில் ஓட்டிச் செல்லும் போதும், காலையில் ஓட்டிச் செல்லும் போதும், அதில் உங்களுக்கு அந்தஸ்து இருக்கிறது. பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுள்ளவன். குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான்.
திருக்குர்ஆன் : 16:5,6,7,8
மனிதர்கள் அன்றைக்குப் பயன்படுத்தி வந்த குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகிய வாகனங்களைக் குறிப்பிட்டு விட்டு, 'நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்' என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் எத்தனையோ விதமான வாகனங்கள் படைக்கப்படவிருப்பதை முன் கூட்டியே அறிவிப்பதாக இது அமைந்துள்ளது.

28 பெருங்கவலை போக்கும் அரு மருந்து

உஹதுப் போரில் வெற்றி நழுவிப் போனதுடன் உயிரிழப்புகளும், காயங்களும் முஸ்ம்களுக்கு அதிக அளவில் ஏற்பட்டன.

இதனால் முஸ்லிம்கள் மனச் சோர்வு அடைந்து தளர்ந்து போயிருந்த நேரத்தில் அதை விடப் பெருங் கவலையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வதந்தி அமைந்தது.
முஸ்ம்களுக்கு ஏற்பட்ட அந்தக் கவலைகள் இதனால் மறைந்தன. நபிகள் நாயகம் கொல்லப்பட்டு விட்டார்களே என்ற ஒரே கவலை தான் அப்போது இருந்தது.
அந்தக் கவலையைப் போக்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ள செய்தி கிடைத்தவுடன் நபித்தோழர்கள் பெரும் உத்வேகம் பெற்றனர். மீண்டும் வெற்றி வாகை சூடினார்கள்.
மனோதத்துவ ரீதியாக இது போன்ற நடவடிக்கைகளால் தான் கவலையை மறக்கடிக்கச் செய்ய இயலும் என்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதைக் கண்டு பிடிப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் இந்த வழிமுறையைக் கற்றுத் தருகிறது.
உங்களுக்குப் பின்னால் இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் போது எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலை மேல்) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான்.
திருக்குர்ஆன் :3:153, 154
உங்களுக்கு வெற்றி தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான் என்ற வாசகம் சிந்திக்கத் தக்கது.
]மனக் கவலையில் ஆழ்ந்திருப்பவர்களையும், மன நோய்க்கு ஆளானவர்களையும் குணப்படுத்த அதை விடப் பெரும் கவலையை அவர்களுக்கு கற்பனையாக ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பெரும் கவலையை ஏற்படுத்தியவுடன் ஏற்கனவே இருந்த சிறிய கவலைகள் மறைந்து விடும். பெரும் கவலை மட்டுமே முழு உள்ளத்தையும் ஆக்ரமித்துக் கொள்ளும். கற்பனையாக ஏற்படுத்திய கவலையை கற்பனை எனப் புரிய வைத்தால் அனைத்துக் கவலைகளிருந்தும் அவர் விடுபடுவார்.

மனோதத்துவ நிபுணர்கள் கையாளும் இந்த வழி முறையைக் காரண காரியத்துடன் குர்ஆனும் விளக்குகின்றது.
தூக்கத்தைக் கொடுத்தது மேலும் பயன் தந்ததாக இதைத் தொடர்ந்து திருக்குர்ஆன் கூறுகிறது.
பெரும் கவலையை ஏற்படுத்தி, தூக்கத்தையும் ஏற்படுத்தி பெரும் கவலையை நீக்கினால் எல்லா விதமான கவலைகளும் பறந்து போய் விடும்.
20ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஆய்வுகளுக்குப் பின் கண்டறியப்பட்ட இந்த வழி முறையை 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் கூறுகிறார்கள் என்றால் நிச்சயம் இது இறைவன் புறத்திருந்து கிடைத்த செய்தியாகத் தான் இருக்க வேண்டும்.

29 வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்

மறுமை நாள் எனும் நியாயத் தீர்ப்பு நாளில் தீயவர்கள் நரக நெருப்பினால் வேதனை செய்யப்படுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதைக் கூறும் போது நரகவாசிகளின் தோல்கள் கருகும் போது உடனே வேறு தோலை மாற்றுவோம் என்று இறைவன் கூறுகிறான். வேறு தோலை ஏன் மாற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அதைத் தொடர்ந்து இறைவன் குறிப்பிடுகிறான்.
நமது வசனங்களை மறுப்போரை நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:56
வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோல் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு.
இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.
அது போல் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது நபிக்கு இது எப்படித் தெரியும்? 'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்' என்று கூறாமல் 'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்' என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment