News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, July 25, 2017

வந்தேமாதரம் கட்டாயம் - தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கண்டனம்

வந்தேமாதரம் கட்டாயம்
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கண்டனம்.
பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒருமுறையும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மாதம் ஒருமுறையும் கட்டாயமாக வந்தேமாதரம் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வந்தேமாதரத்தை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உயர்நீதிமன்றம் வந்தேமாதரத்தை தமிழிலும் மொழிபெயர்த்துப் பாடிக்கொள்ளலாம் என்றும், வந்தேமாதரத்தைப் பாட விருப்பமில்லாதவர்களை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளது.
மதநல்லிணக்கம் ஆலமரமாக வேர் விட்டுள்ள தமிழகத்தில் ஒரு மதத்தின் கடவுளை உருவகப்படுத்தியுள்ள வந்தேமாதரம் பாடலை பாடச்சொல்லி கட்டாயப்படுத்துவது மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.
விருப்பமில்லாதவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பது நடுநிலையான உத்தரவு போல் தோன்றினாலும், வந்தேமாதரம் பாடாதவர்களை தேசபற்று இல்லதவர்கள் போல் பார்க்கும் நிலை ஏற்படும்.
எனவே சமூக நீதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இப்படிக்கு,
M. முஹம்மது யூசுஃப்
பொதுச்செயலாளர்


Monday, July 17, 2017

2017 -இன்ஜினியரிங் கவுன்சிலிங் , செய்ய வேண்டியது என்ன ?

இன்ஜினியரிங் கவுன்சிலிங் , செய்ய வேண்டியது  என்ன

Source : http://wp.me/ppzkn-1jw

கவுன்சிலிங் கலந்துகொள்ளும் மாணவர்கள் , டெபாசிட் தொகையாக ரூ 5000  செலுத்த வேண்டும் , ( ST/SC/SCA வகுப்பை சார்ந்தவர்கள் [தமிழ்நாடு மட்டும்]  ரூ 1000 செலுத்தினால் போதும் ) 
பணமாகவோ அல்லது வங்கிக்காசோலையாக இருப்பின் “The Secretary, Tamil Nadu Engineering Admissions, Anna University,” payable at Chennai என்று இருக்க வேண்டும் , 17.07.2017  காசோலையாக இருத்தல் வேண்டும் .
இந்த வைப்புத்தொகை , கல்லூரி கட்டணத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும் .

வைப்புத்தொகை போக மீதமுள்ள கல்லூரி கட்டணத்தை கல்லூரியில் நேரடியாக செலுத்திவிடவும் ,
கல்லூரி மற்றும் பாடப்பிரிவு , தங்களுடைய cutoff ரேங்க் அடிப்படையில் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் , மற்றும் மீதமிருக்கும் சீட்டுகள் அடிப்படையில் , கலந்தாய்வில்   தேர்ந்து எடுத்துட்டு கொள்ளலாம் .
கல்லூரி  மற்றும் படைப்பிரிவு தேர்ந்து எடுப்பது மாணவரின் முழுப்பொறுப்பு , தேர்ந்து எடுத்த பின் மீண்டும் மாற்றுவது இயலாது என்பதனை மனதில் வைத்துக்கொண்டு , கல்லூரி  மற்றும் பாடப்பிரிவை தேர்ந்துஎடுக்கவும் .

அரசு ஆணை (Ms.) No. 160 HE (J2) Dept. dt: 22.05.2008யின்படி ஏற்கனவே கவுன்சிலிங் மூலம் M.B.B.S. / B.D.S சீட்டு  பெற்றவர்கள் , இன்ஜினியரிங் சேர விரும்பினால் ஏற்கனவே பெற சீட்டை (M.B.B.S. / B.D.S) surrender செய்ய வேண்டும் .
மறுகூட்டல் / மறு மதிப்பெண் ஆய்வு (re-totalling/revaluation) மூலம் மதிப்பெண் மாறி  இருப்பின் , கால் லெட்டரில்  பழைய மதிப்பெண் அடிப்படையில் cutoff  கொண்டு அதில் ஒரு தேதி நேரம் இருந்தாலும் ,  மாற்றப்பட்ட மதிப்பெண் cutoff அடிப்படையில் அதற்கு தகுந்தாற்போல தேதியில் நேரத்தில்  கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் .
Source : http://wp.me/ppzkn-1jw
மாணவன்/மாணவிகள்  ஏற்கனவே ஒரு கல்லூரியில் சேர்ந்து விட்ட நிலையில் , அசல் மதிப்பெண் பட்டியல் சான்று (ORIGIANL MARKSHEET ) , மற்றும் அசல் சான்றிதழ்கள்(ORIGINAL CERTIFICATES ) அந்த கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டு இருப்பின் , அந்த கல்லூரி தலைமை பொறுப்பாளரிடம்(  Head of the Institution) , உண்மை சான்றிதழ் (BONAFIDE LETTER ) , மற்றும் உங்கள் மதிப்பெண் பட்டியல் சான்று மற்றும் சான்றிதழ்களில்  அட்டெஸ்ட்(ATTEST ) செய்து வரும் பட்சத்தில் ஏற்கப்படும்.
இருப்பினும் அசல் சான்றிதகள் சமர்ப்பிக்கும் வரை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் துறைக்கான இடம் , நிறுத்துவைக்கப்படும் (உங்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது ).
தங்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங் கல்லூரி ஒதுக்கீடு உத்தரவு கிடைக்கும் வரை மாற்றுதல் சான்றிதழ் வேண்டி ஏற்கனவே படிக்கும் கல்லூரியில் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது .
சில பிரிவுவுகள் / வகுப்பை சார்ந்தவர்களுக்கு , தங்களுக்கு கவுன்சிலிங் குறிப்பிட்ட தேதியில் சீட்டுக்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதால் ,  சீட்டுக்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ள கீழ் காணும் இணையதளத்தில் https://www.tnea.ac.in எவ்வளவு சீட்டுக்கள் இருக்கின்றதை தெரிந்துகொண்டு கவுன்சிலிங் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள் .

கல்லூரி பற்றிய குறிப்பேடு [Information about Colleges] , இந்த  கையேட்டில் இருக்கும் விடயங்கள் மாறுபடலாம் எனவே கவுன்சிலிங்  மையத்தில் இருக்கும் ஒளிபரப்பு திரையை அல்லது https://www.tnea.ac.in என்ற இணையத்தை பார்த்து , கல்லூரிகள் மற்றும் இருக்கும் சீட்டுக்கள் நிலவரம் பற்றி அறிந்துகொள்ளலாம் .
Source : http://wp.me/ppzkn-1jw
தவிர்க்க முடியாத சில காரணங்களால் , மாணவர்/மனைவி கவுன்சிலிங் குறிப்பிட்ட தேதிக்கு வரமுடியாமல் போகும் பட்சத்தில் :
1. தங்களின் பெற்றோர்களை தங்கள் சார்பாக கலந்துகொள்ள மாணவ /மனைவியின்  கூடிய  அங்கீகாரம் கடிதம் கொடுத்து அனுப்பலாம். அங்கீகார கடிதத்துடன் வரும் பெற்றோர் பின் வரும் அடையாள அட்டைகள் (ஓட்டுநர்  உரிமம் , பான் அட்டை , பாஸ்போர்ட் , வாக்காளர் அட்டை ,ஆதார் அட்டை [driving license, PAN card, Passport, Voter ID, Aadhar ID]  ஒன்றேனும் எடுத்து வர வேண்டும் ,இந்நிலையில்  பெற்றோர் எடுக்கும் முடிவு மாணவர் எடுத்ததாக கருதப்படும்.
அல்லது 
2. மாணவ /மாணவி அடுத்து வரும் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொள்ளலாம் , ஆனால் கலந்துகொள்ளும் நாளில் இருக்கும் சீட்டைதான் தேர்வு செய்ய முடியும் , உங்களுடைய அசல் ரேங்க் படி சேட்டை கோர இயலாது .

அல்லது 
3. மாணவ /மனைவி  கவுன்சிலிங் உங்கள் செலவில் கலந்துகொள்ள வேண்டும் .
3. The candidate has to attend the counselling at his/her own cost.
கவுன்சிலிங்  அழைப்பு கடிதம் பார்க்க :  https://www.tnea.ac.in/tharam2017.php

Source : http://wp.me/ppzkn-1jw

Wednesday, June 28, 2017

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் என்ற பதிவை போட்டு இருந்தோம், 

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாகச் சிலர் ஆறு நோன்பு குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட்டு சில வாதங்களையும் முன்வைக்கிறார்கள். 
அந்த ஹதீஸ் இதுதான்:
 حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ ثَابِتٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ
யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி)
நூற்கள்: முஸ்லிம்திர்மிதீஅபூதாவூத்இப்னுமாஜாஅஹ்மத்,
பைஹகீயின் சுனன் ஸகீர்தப்ரானியின் முஃஜம் ஸகீர்தாரிமி இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) கூறியதாக உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் அறிவிக்கிறார்.
உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்பார் அறிவிக்கின்றார்.
ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்ற இந்த அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் விமர்சனம் செய்கின்றனர்.
ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல்இப்னு மயீன் ஆகியோர் கூறுகிறார்கள். இவர் பலமானவர் அல்ல என்று நஸாயீ கூறுகிறார். இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்கள் குறை கூறியுள்ளதாக திர்மிதீ கூறுகிறார். இவரை ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.
இப்னு அதீஅஜலீஇப்னு ஸஅத் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
பொதுவாக ஒரு அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு அபிப்பிராயங்கள் கூறப்பட்டால் குறை பற்றிய விமர்சனத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.
ஆயினும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது பற்றிய நம்பகமான வேறு அறிவிப்புகளும் உள்ளன.
அவற்றையும் கவனத்தில் கொண்டால் ஆறு நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் மற்றொரு அறிவிப்பில்வேறொரு அறிவிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ وَسَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي أَيُّوبَ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ
அபூதாவூத் 2078, நஸயீஇப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் இடம் பெற்று இந்த அறிவிப்பில்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்.
அபூ அய்யூப் அல்அன்ஸாரி கூறியதாக உமர் பின் ஸாபித் அறிவிக்கிறார்.
உமர் பின் ஸாபித் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் என்பாரும்ஸஃப்வான் பின் ஸுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
அதாவது உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து மேற்கண்ட ஹதீஸை ஸஅத் பின் ஸயீத் மட்டும் செவியுறவில்லை. அவருடன் ஸஃப்வான் என்பாரும் செவியுற்று அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் ஸைத் என்ற அறிவிப்பாளர் பலவீனமாக இருந்தாலும், அதே உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து ஸஃப்வான் பின் சுலைம் என்பாரும் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர் அல்லர் என்பதால் இது சரியான ஹதீஸாகும்.
ஸஃப்வான் பின் ஸுலைம் என்பார் நம்பகமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல்அலீ பின் மதீனீமுஹம்மத் பின் ஸஅத்அஜலீஅபூஹாத்தம் ராஸீநஸயீ மற்றும் பலர் கூறியுள்ளனர்.
உமர் பின் ஸாபிதும்அவரிடமிருந்து அறிவிக்கும் ஸஃப்வான் ஆகிய இருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் ஸஃப்வானிடமிருந்து நூலாசிரியர் அபூதாவூத் வரையுள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் தாமாஎன்ற சந்தேகம் இந்த இடத்தில் தோன்றலாம்.
ஸஃப்வான் கூறியதாக அறிவிப்பவர் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆவார்.
இவர் நம்பகமானவர்ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸாயீ கூறுகிறார். மாலிக்அஜலீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
இவர் நம்பகமானவர்சில நேரம் தவறு செய்து விடுவார் என்று இப்னு ஹிப்பான்இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகிறார்கள். (நம்பகமான பெரும்பாலான அறிவிப்பாளர் பற்றிசில நேரம் தவறு செய்து விடுவார் என்று கூறப்படுவதுண்டு)
அப்துல் அஸீஸிடமிருந்து இதை அறிவிப்பவர் நுபைலீ என்பார் ஆவார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ. இவர் நம்பகமானவர் என்று நஸாயீ கூறுகிறார். இவரை விட நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூதாவூத் கூறுகிறார். இவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்று அபூஹாத்தம் ராஸீ கூறுகிறார். தாரகுத்னீஇப்னு ஹிப்பான்இப்னு கானிவு ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர்.
இவரிடமிருந்து அபூதாவூத் கேட்டுதமது நூலில் இதைப் பதிவு செய்துள்ளனர். எனவே முஸ்லிம் நூலில் உள்ள அறிவிப்பில் குறை இருந்தாலும் அபூதாவூதில் இடம் பெற்ற அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்க தகுதியில் அமைந்துள்ளது.
மேலும் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி ஆதாரப்பூர்வமான வேறு செய்திகளும் உள்ளன.
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذِّمَارِيُّ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صِيَامُ شَهْرٍ بِعَشَرَةِ أَشْهُرٍ وَسِتَّةِ أَيَّامٍ بَعْدَهُنَّ بِشَهْرَيْنِ فَذَلِكَ تَمَامُ سَنَةٍ يَعْنِي شَهْرَ رَمَضَانَ وَسِتَّةَ أَيَّامٍ بَعْدَهُ
ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானதுஅதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி)
நூல்: தாரிமி 1690
ஸஃப்வான் வழியாக இதை அம்ர் பின் மிர்ஸத் என்பார் அறிவிக்கிறார். இவர் நம்பகமான அறிவிப்பாளர்.
அம்ர் பின் மிர்ஸத் வழியாக இதை யஹ்யா பின் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
யஹ்யா பின் ஹாரிஸ் வழியாக யஹ்யா பின் ஹம்ஸா என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
யஹ்யா பின் ஹம்ஸா வழியாக யஹ்யா பின் ஹஸ்ஸான் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
இதே ஹதீஸ் இப்னுமாஜா 1705, அஹ்மத் 21378 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருநாள் முடிந்து மறு நாளே நோன்பை ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை நோற்க வேண்டுமாஅல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமாஎன்ற கேள்விக்கு இந்த அறிவிப்பில் விடை உள்ளது.
அதாவது எல்லா நன்மைகளும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ரமளானில் நோற்ற 30 நோன்புகளும் பத்து மாதத்திற்குச் சமமாகி விடுகின்றது. ஆறு நோன்பு அறுபது நோன்புக்குச் சமமாகி விடுகின்றது.
இதனால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஒன்றுக்குப் பத்து என்ற நன்மையை அடைவது தான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்வாலில் எந்த ஆறு நாட்களில் நோற்றாலும் இந்த நன்மை கிடைத்து விடும்.

மீள் பதிவு :http://onlinepj.com/aayvukal/aru_nonbu_atharamatratha/#.WVNnWmiGNPY

குறிப்பு : 
பெருநாளைக்கு மறுநாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்க வேண்டும் எனும் போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அந்த நன்மையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள்

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாமா?
அக்பர், திருநெல்வேலி
யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி),
நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"தொடர்ந்து'' என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான வாதமாகும். ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.
தொடர்வது என்பதற்கு "அத்பஅஹு'' என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு "முததாபிஐன்'' என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும்.
உதாரணமாக திருக்குர்ஆனில், மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர் அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறப்படுகின்றது.
(அடிமைகளை) பெற்றுக் கொள்ளாதவர், அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் சக்தி பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
திருக்குர்ஆன் 58:4
இந்த வசனத்தில் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு "முததாபிஐன்'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வாசகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் ஆறு நோன்பு தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறு கூறப்படவில்லை.
ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.
எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறுநாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.
முப்பது நோன்பும் ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றது. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.
ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம்பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்

Source : https://www.facebook.com/ThouheedJamath/posts/1588308274521514

Monday, June 26, 2017

நோன்பு பெருநாள் திடல் தொழுகை 26-06-2017

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி  கிளை  சார்பாக 26-6-2017 இன்று 

நபி(ஸல்) காட்டித்தந்த வழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

அதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கொள்கை சொந்தங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

🌸அல்ஹம்துலில்லாஹ்🌸...