News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, March 20, 2018

தமிழக அரசின் மதவெறிப் போக்கிற்கு டி.என்.டி.ஜே. கடும் கண்டனம்!தமிழக அரசின் மதவெறிப் போக்கிற்கு டி.என்.டி.ஜே. கடும் கண்டனம்!
பாபர் மசூதி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவரும் நிலையில் பாபர் மசூதி இடத்தில் ராமர் ஆலயம் எழுப்புவோம் என்ற கோரிக்கையுடன் காவி அமைப்புகள் ரத யாத்திரை நடத்துகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடத்தப்படும் இந்த ஊர்வலம் சட்ட விரோதமானதாகும்.
சட்டவிரோதமான ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து மத நல்லிணக்கத்தைச் சீரழிக்க துணை நிற்கும் தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் 144 தடை உத்தரவு பிறப்பித்தால் ஐந்து பேருக்கு மேல் அறவே கூடக்கூடாது. ஆனால் காவிகளுக்கு எதிராக கூடுபவர்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவை அமல்படுத்திவிட்டு, அவர்களை முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்துவிட்டு, காவிகள் மட்டும் ரத ஊர்வலம் வரலாம் என்றால் இதைவிட கோமாளித்தனம் ஏதுமிருக்க முடியாது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் ஊர்வலமும் அதில் அடங்கும்.
தமிழக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோத மதவெறி நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
Image may contain: one or more people and text
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்


Tuesday, March 6, 2018

ரவிசங்கர் பாபாவின் விஷமப் பேச்சிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

அயோத்தியா விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்காவிட்டால் இந்தியா சிரியாவாக மாறும்:
-ரவிசங்கர் பாபாவின் விஷமப் பேச்சிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் என்ற போர்வையில் பா.ஜ.க.வின் கள்ள ஏஜெண்டாக செயல்படுபவர் காவிச் சாமியார் ரவிசங்கர் பாபா.
பாபர் மஸ்ஜித் பிரச்சினையில் முஸ்லிம்களை காவிகளின் சூழ்ச்சி வலையில் விழவைப்பதற்காக பா.ஜ.க. நியமித்த கள்ள ஏஜெண்ட்தான் இந்த ரவிசங்கர் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறோம்.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சில முஸ்லிம் பெயர் தாங்கிகளைச் சந்தித்து இவர் நாடகங்களை அரங்கேற்றினார்.
இவரின் நஞ்சு உள்ளத்தை நன்கறிந்த முஸ்லிம்கள், இவரின் சூழ்ச்சிக்குப் பலியாகவில்லை.
இதனையடுத்து தற்போது விஷத்தை உமிழ தொடங்கியுள்ளார்.
Image may contain: 1 person, smiling, text

இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ”ராமர் கோவில் பிரச்சினையை விரைவாகத் தீர்க்காவிட்டால், இந்தியா வரும் காலத்தில் சிரியாவாக மாறிவிடும். சிரியா போர் சொல்வதெல்லாம், முஸ்லிம்கள் அயோத்தி விவகாரத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதாகும். நல்லெண்ண நோக்கில் அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கையை கைவிட வேண்டும்” என்று காவி விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாபர் பள்ளிவாசலில் நள்ளிரவில் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்து, அதை பிரச்சினையாக கிளப்பி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை ரத்த யாத்திரை நடத்தி இடித்துத் தள்ளியதே காவிகள்தான் என்பது உலகை விட்டு நீங்காத வரலாறு.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்காவிட்டால் சிரியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது போல் இந்தியாவிலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்று மறைமுகமாக மிரட்டுகிறார்.
உலக ஆசைகளுக்கு அடிபணிந்து, நாட்டைக் காட்டிக் கொடுத்த காவிகளைப் போல மிரட்டியவுடன் பணிந்துபோக முஸ்லிம்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.
படைத்த இறைவனைத் தவிர வேறு யாருக்கும் முஸ்லிம்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.
அதனால்தான் சிரியாவில் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று மிரட்டும் மனித மிருகங்களைக் கண்டு சிரியா முஸ்லிம்கள் அஞ்சவில்லை. இஸ்லாத்தை விட்டு ஓடிவிடவில்லை.
அதேபோல்தான் ஆட்சி அதிகாரம் நம் கையில் இருக்கிறது. காவல்துறை நம் கையில் இருக்கிறது. ராணுவம் இருக்கிறது. முஸ்லிம்களை மிரட்டி பணிய வைத்து விடலாம் என்று காவிகள் நினைப்பார்களேயானால் அவர்களைக் கண்டு கடுகளவு கூட முஸ்லிம்கள் பயப்பட மாட்டார்கள்.
முஸ்லிம்களின் மத உணர்வோடு தொடர்புடைய பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் ரவிசங்கர் காவி விசுவாசத்தைக் காட்டாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.
இவரின் விஷமப் பேச்சினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிப்பதுடன் இனிமேலும் இவர் இதேபோன்று பேசுவாரேயானால் தக்க முறையில் அவருக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.
நாட்டில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி கலவர விதை தூவும் பயங்கரவாதியான ரவி சங்கர் பாபாவை தேசிய பாதுகாப்புத் தடைச் சட்டத்தில் உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

Monday, March 5, 2018

#முகநூலில்_அக்கவுண்ட்_வைத்திருக்கும்_தவ்ஹீத்_ஜமாஅத்தின்_உறுப்பினர்கள்_கவனத்திற்கு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் தங்கள் பெயருடன் TNTJ என்பதையோ, TNTJ கொடியையோ போட்டு முகநூலில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
ஜமாஅத்தின் கொள்கையையும், நிலைப்பாட்டையும் மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாத சிலர் TNTJ என்று தங்கள் பெயருடன் சேர்த்தும், அல்லது TNTJ கொடியை இணைத்தும் ஜமாஅத்துக்கு எதிரான, ஜமாஅத்துக்கு சங்கடம் ஏற்படுத்தும் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
இதைத் தவிர்ப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் தமது பெயருடன் TNTJ அல்லது TNTJ கொடி போடுவதாக இருந்தால் தங்கள் பெயருடன் உறுப்பினர் எண்ணையும் சேர்த்து போடவும்.
ஏற்கனவே முகநூலில் இருப்பவர்களும் புதிதாக நுழைபவர்களும் இதைக் கடைப்பிடிக்கவும். இதன் மூலம் ஜமாஅத் பெயரில் குழப்பவாதிகள் ஊடுறுவுவதை தடுக்க முடியும்.
உறுப்பினர் எண்ணைக் குறிப்பிடாமல் பதிவிடுவோர் நம் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
இனி வரக்கூடிய காலங்களில் இதை கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்