குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் மு. முஹம்மது யூசுஃப் அவர்கள் வெளியிடும் அறிக்கை:
கடந்த வாரம் குஜராத்தில் இறந்து போன மாட்டின் தோலை உரித்ததாக கூறி தலித் இளைஞர்கள் சங்பரிவார கும்பலால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு நடந்த வன்முறையிலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் சமூக வலைத் தளங்களில் பரவியதை அடுத்து, நாடெங்கும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தலித் அமைப்பைச் சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்யவும் முயன்றனர். நாட்டில் சங்கபரிவார பயங்கரவாதிகளால் முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்துவருகிறது.
குஜராத்தில் நடந்த இந்த காட்டுமிராண்டி செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
மோடியின் மாநிலமான குஜராத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் மாட்டை வைத்து மனிதர்களைக் படுகொலை செய்வதும், கொடூரமான முறையில் தாக்குவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இந்த பயங்கரவாதத்தை செய்பவர்கள் தங்களை பசு பாதுகாப்பு இயக்கம் என்று சொல்லிக் கொண்டு இந்த அராஜத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரிகள் முதல் ஆட்சியில் இருப்பவர்கள் வரை ஆதரவாக செயல்படுவது அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நிலை நாட்ட தவறினால், மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படும் .
பாஜக ஆட்சிக்கு வந்த பின் சகிப்புத்தன்மை என்பது கேள்வி குறியாக மாறியுள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் உலக அரங்கில் நம் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் என்பதை எச்சரிக்கையோடு சொல்லி கொள்ள விரும்புகிறோம்.
இச் சம்பவத்தை கண்டித்து திருச்சியில் திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடை பெரும். இவ்வாறு மு.முஹம்மது யூசூப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசுப்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஊடக பொறுப்பு.. 9789030302

No comments:
Post a Comment