தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரூ 33 கோடிக்கு மனிதநேய உதவி - வரவு செலவு கணக்கு சமர்பிப்பு
2015 டிசம்பரில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளானதை அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரூ 33 கோடிக்கு மனிதநேய உதவிகளை செய்தது. 35 ஆயிரம் தொண்டர்கள் களப்பணியாற்றினார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி முன்பே அறிவித்தது போல் ரூ 33 கோடிக்கான வரவு செலவு கணக்குகளை தங்களது இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வார இதழான உணர்வு பத்திரிக்கையில் வெளியிட்டு மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்து விட்டனர்.
TNTJ தொண்டர்கள் பல்வேறு ஊர்களில் இன்று ஜும்ஆ தொழுகை முடிந்த பின் உணர்வு பத்திரிக்கையை இலவசமாகவே விநியோகம் செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஓர் திறந்த புத்தகம் என்பதையும் பொருளாதார விசயத்தில் தூய்மையை மிக உறுதியாக கடைபிடிக்கும் அமைப்பு என்பதை மக்கள் மன்றத்தில் இந்த முறையும் நிரூபித்து விட்டனர்.
No comments:
Post a Comment