News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்
Showing posts with label பிறை. Show all posts
Showing posts with label பிறை. Show all posts

Monday, February 27, 2017

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு
ஜமாஅத்துல் ஆகிா் மாதம்
கடந்த 29 .1.17 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாஅத்துல் அவ்வல் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 27.2.17 திங்கள் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
அன்று பிறை தென்பட்டால் ஜமாஅத்துல் ஆகிா் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாஅத்துல் அவ்வல் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு
9952035444
9952035222
9952056444
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்.

Saturday, June 4, 2016

பிறை பார்த்துத் தான் நோன்பு நோற்க வேண்டும் :ஜாக் தலைமைக்கு பாராட்டு

ஜாக் தலைமை தன்னுடைய தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு பிறை பார்த்துத் தான் நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலைபாட்டை தனது அதிகாரப் பூர்வமான அல்ஜன்னத் பத்திரிகையில் அறிவித்துள்ளது.
தவறு என்று தெரிந்த பின் மனிதர்களின் விமர்சனத்துக்கு அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையைப் பகிரங்கமாக அறிவித்த ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனி அவர்களை மனம் திறந்து பாராட்டுகிறோம்.





தமிழகத்தில் ஒவ்வொரு ரமலான் மாதம் ஆரம்பிக்கும் போதும் இரண்டு பெருநாட்களின் போதும் ஜாக் இயக்கத்தின் குழப்பமான நிலைபாடு அந்த இயக்கத்தினருக்கே மன் உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
ஒரே நாளில் பெரு நாள் கொண்டாட வேண்டும் என்று கூறியவர்கள் இரண்டு நாட்கள் பெருநாள் கொண்டாடும் நிலை ஏற்பட்டது தான் இதனால் ஏற்பட்ட விளைவு.