ஜாக் தலைமை தன்னுடைய தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு பிறை பார்த்துத் தான் நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலைபாட்டை தனது அதிகாரப் பூர்வமான அல்ஜன்னத் பத்திரிகையில் அறிவித்துள்ளது.
தவறு என்று தெரிந்த பின் மனிதர்களின் விமர்சனத்துக்கு அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையைப் பகிரங்கமாக அறிவித்த ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனி அவர்களை மனம் திறந்து பாராட்டுகிறோம்.

தவறு என்று தெரிந்த பின் மனிதர்களின் விமர்சனத்துக்கு அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையைப் பகிரங்கமாக அறிவித்த ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனி அவர்களை மனம் திறந்து பாராட்டுகிறோம்.

தமிழகத்தில் ஒவ்வொரு ரமலான் மாதம் ஆரம்பிக்கும் போதும் இரண்டு பெருநாட்களின் போதும் ஜாக் இயக்கத்தின் குழப்பமான நிலைபாடு அந்த இயக்கத்தினருக்கே மன் உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
ஒரே நாளில் பெரு நாள் கொண்டாட வேண்டும் என்று கூறியவர்கள் இரண்டு நாட்கள் பெருநாள் கொண்டாடும் நிலை ஏற்பட்டது தான் இதனால் ஏற்பட்ட விளைவு.