News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Thursday, May 17, 2018

பிறை அறிவிப்பு : ரமலான் பிறை தென்பட்டது 2018

பிறை அறிவிப்பு:
ரமலான் பிறை தென்பட்டது!

இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரமலான் முதல் பிறை தென்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

Image may contain: sky and text


Sunday, May 13, 2018

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி
ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி


Image may contain: text


துணைத்தலைவர் R.அப்துல் கரீம் அவர்கள் தலைவர் பொறுப்புவகிப்பார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பதவி வெற்றிடமானதால் ஜமாஅத்தின் பைலா விதிகளின்படி துணைத்தலைவர் R.அப்துல் கரீம் அவர்கள் தலைவர் பொறுப்புவகிப்பார் என அறிவிக்கப்படுகிறது
இப்படிக்கு
அப்துன்னாசர்
மேலாண்மைக்குழுத் தலைவர்

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு:
12.5.2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூடியது. அப்போது சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மீது புகார் வந்தது. அது குறித்து விசாரிக்கப்பட்டது. சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இனி எக்காலத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர இயலாத படி நீக்கி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது குறித்து முழு விளக்கம் எதிர்வரும் ரமளான் மாதத்திற்குப் பிறகு நடைபெறவுள்ள
மாநில பொதுக்குழுவில் விளக்கப்படும்.
இன்ஷா அல்லாஹ்...
இப்படிக்கு ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
உயர்நிலைக் குழு

Thursday, May 10, 2018

தமிழகத்திற்கான ரமலான் பிறை அறிவிப்புதமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :
ரமலான் மாதம்
கடந்த 17.4.18 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 16.5.18 புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.

அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு
7550277339
9952035444
9952056444
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்
Image may contain: text


பீஜே அவர்களின் புதிய கடிதம்!

பீஜே அவர்களின் புதிய கடிதம்!
உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கு பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆடியோ சம்மந்தமாக புகார் எதுவும் வராமல் நாமாக வலியச் சென்று விசாரிக்கும் நடைமுறை இல்லை என்பதால் எனது விலகலைத் திரும்பப் பெறுமாறு உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்து வருகிறார்கள்.
நீங்கள் விசாரணை நடத்தி நான் குற்றமற்றவன் என்று நிரூபித்தாலும் அதன் பின்னரும் நான் விலகலைத் திரும்பப் பெற வேண்டாம் என்பது தான் என் குடும்பத்தினரின் எண்ணமாக உள்ளது.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
என் மீது சுமத்தப்பட்டது போல் யார் மீது அவதூறு பரப்பப்பட்டாலும் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். நானும் பாதிக்கப்படுகிறேன். ஆனால் எனக்கு முன்பு போல் வலிமையான இதயம் இல்லை. இரு முறை அட்டாக் வந்து இரு தடவையும் ஆஞ்சயோ பண்ணியதால் என்னைப் பற்றிய கேவலமான விமர்சனங்கள் நூற்றுக் கணக்கான நபர்களால் பரப்பும் போது இதயம் மிகவும் பாதிக்கிறது.
மேலும் என்னுடன் பயணித்தவர்களே நம் ஜமாஅத்தை விட்டுப் போன பின் இது போல் அதிகம் பரப்புவதைக் காண்கிறேன். இதை நேற்று வரை பொய் என்று சொன்னவர்கள் இப்போது மெய் என்று வாதிடும் போது கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் என் மீது அன்பு கொண்ட மக்கள் எதிரிகளுக்குப் பதில் கொடுப்பதிலேயே தமது நேரங்களைச் செலவிடுகிறார்கள். ஆக்கப்பூர்வமான பணிகள் எதிலும் ஈடுபட முடியாமல் என்னைப் பற்றி எதிர்த்தும், ஆதரித்தும் எழுதுவது மட்டுமே முக நூலில் மலிந்து கிடக்கின்றது. இதுவும் என்னை மிகவும் பாதிக்கிறது.
அது மட்டுமில்லாமல் என் மீது கொண்ட அன்பின் காரணமாக எனக்கு எதிராக வதந்தி பரப்புவோரைத் தரக்குறைவாக விமர்சிப்பதையும், எதிரிகளின் குடும்பப் பெண்களைக் கேவலமாகப் பேசுவதையும் காண முடிகிறது. யார் என்ன செய்தாலும் அனைத்தும் நான் செய்வதாகவே பார்க்கப்படுகிறது. அதை ஒட்டியும் விமர்சனங்கள் நீள்கின்றன.
பல மாதங்களுக்குப் பின் நான் விலகல் அறிவிப்பு செய்த அன்று தான் நிம்மதியான தூக்கம் வந்தது. எல்லா பாரத்தையும் இறக்கி வைத்தது போல் அன்று தான் உணர்ந்தேன்.
இதை விட முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத் எதிரிகள் பீஜே தான் தவ்ஹீத் ஜமாஅத் என்று கருதுகிறார்கள். என்னை முடக்கினால் தவ்ஹீத் பிரச்சாரம் முடங்கி விடும் என்று கணக்கிடுகிறார்கள்.
தவ்ஹீத் சகோதார்களில் சிலரும் அந்த மன நிலையில் தான் உள்ளனர்.
இதை உடைத்து ஆக வேண்டும். மக்களால் அதிகம் அறியப்பட்ட ஒருவரால் தான் இந்த ஜமாஅத்தைக் கொண்டு செல்ல முடியும் என்பதைப் பொய்யாக்க வேண்டும்.
இந்த ஜமாஅத்தில் நல்ல ஆய்வுத் திறன் மிக்க அறிஞர்கள் பலர் உள்ளனர். தியாகமும்,அர்ப்பணிப்பும் செய்பவர்கள் உள்ளனர். அந்த நல்லறிஞர்களைக் கொண்டு இந்த ஜமாஅத்தைச்சிறப்பாக வழிநடத்த முடியும்.
இது கொள்கைக்கான ஜமாஅத் ஆகும். பீஜே இல்லாவிட்டாலும் கொள்கைக்காக இந்த ஜமாஅத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். வீரியமாக செயல்படுவார்கள்.
எனவே என்னை தயவு செய்து வற்புறுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். என் விலகலில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
பீ.ஜைனுல் ஆபிதீன்

மேலாண்மைக்குழுத் தலைவருக்கும், அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன்

அஸ்ஸலாமு அலைக்கும்.
மேலாண்மைக்குழுத் தலைவருக்கும்,
அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது.  
சவூதியில் இருந்து மேலாண்மைக் குழு சார்பில் மேலாண்மைக் குழுத் தலைவர் வெளியிட்ட அறிக்கை மூலம் நம் ஜமாஅத் ஆளுக்கு ஒரு நீதி வழங்கும் ஜமாஅத் அல்ல என்பதை நிலைநாட்டியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
யார் மீது புகார் சொல்லப்பட்டாலும் புகார் சொல்பவர் நிரூபிக்கும் பொறுப்பேற்று தலைமையை அணுகினால் தான் அது குறித்து ஜமாஅத் விசாரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு ஜமாஅத்தின் கடந்த கால நடைமுறைக்கு ஏற்பவே அமைந்துள்ளது.
காலம் காலமாக மக்களின் நம்பிக்கை மீது தான் இந்த ஜமாஅத் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை நாம் காலம் காலமாக காப்பாற்றி வருகிறோம்.
அந்த நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பு போதுமானதாக இல்லை என்று நான் கருதுகிறேன்.
ஆடியோ வெளியிட்டவர்கள் அந்தப் பெண் குறித்த சில விபரங்களையும் வெளியிட்டு உள்ளனர்.
எனவே மேலாண்மைக் குழு தானாக முன் வந்து அந்தக் குடும்பத்தினரையும் விசாரித்து உண்மையைக் கண்டறிந்து முடிவு செய்வது தான் நல்லது. ஜமாஅத்தின் கண்ணியத்துக்கு உகந்தது.
நிரூபிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது மட்டும் இதற்குப் போதுமானதாக இல்லை.
இந்த ஜமாஅத்தில் மெய்யாக நம்பிக்கை உள்ள ஒரே ஒரு சகோதரன் கூட அதிருப்தி அடையாத வகையில் தான் மேலாண்மைக் குழுவின் முடிவு அமைய வேண்டும்.
எந்த நபரின் மீதும் இந்த ஜமாஅத் கட்டமைக்கப்படவில்லை. கொள்கையின் மீதும் தார்மீக நெறிகள் மீதும் தான் இந்த ஜமாஅத் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஐயமற நிரூபிக்க இது அவசியம் என்று நான் கருதுகிறேன்.
எனவே அயல்நாட்டில் மேலாண்மைக்குழுத் தலைவர் இருந்தாலும் இது குறித்து விசாரணைக்குழு அமைத்து உண்மையைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை அனைத்துப் பணிகளில் இருந்தும் என்னை விடுவித்து விடுவதே ஜமாஅத்துக்கு நன்மையானதாகும்.
எதிரிகளின் விமர்சனம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜமாஅத் சரியாகவே செயல்படுகிறது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.
எனது கோரிக்கையை நான் அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தேன். அதை அனைவரும் நிராகரித்து விட்டீர்கள். எனவே தலைமையின் முக நூலில் இதை நானே பதிவிடுகிறேன்.
அனைத்துப் பணிகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
பி.ஜைனுல் ஆபிதீன்


Tuesday, May 1, 2018

பண்ணுருட்டி கிளை சார்பாக தினமும் குரான் ஓத பயிற்சிபண்ணுருட்டி கிளை சார்பாக தினமும் குரான் ஓத  பயிற்சி

அஸ்ஸலாமு  அலைக்கும்  ரஹமதுல்லாஹி வ பரக்காத்தஹு ,
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக பண்ருட்டி மர்கஸில் தினமும் பஜார் தொழகை முடிந்ததும் குர்ஆன் ஓத கற்று தரப்படுகிறது,

அல்ஹம்துலில்லாஹ் அதிகமான மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுகின்றார்கள் .


Image may contain: 4 people, people sitting and table