News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, April 10, 2017

மாட்டிற்காக மனித உயிர்கள் வேட்டையாடப்படுவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுச் செயலாளர் மு.முஹமது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து  சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், எழுத்தாளர்கள் மற்றும்
மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மதசார்பின்மையை குழிதோண்டி புதைக்கும் விதமாக சங்பரிவாரத்தின் சதிகள் அரங்கேற்றப்படுகின்றன.

மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனக் கூறி உத்திரபிரதேசத்தில் அக்லாக் என்ற முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
இதுப்போல் குஜராத்திலும் மாட்டின் பெயரால் தலித் இளைஞர்கள் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுப்போன்ற சம்பவங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்ற குரல் வலுப்பெரும் வேளையில் மற்றொரு கொடூர தாக்குதல் நடந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பெஹ்லுகான்  என்ற முதியவர்  மாட்டை ஏற்றி வந்ததற்காக அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அவரோடு வந்த மற்றவர்களும் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாட்டிற்காக மனித உயிர்கள் வேட்டையாடப்படுவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் தொடர்ந்து நடைபெறும் இதுப்போன்ற வன்முறைகளை வேடிக்கைப் பார்க்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து
வரும் செவ்வாய்க் கிழமை இறைவன் நாடினால் (11,12,13,04.17) சென்னை, நெல்லை (மேற்கு தென்காசி),(கோவை, திருவாரூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
மு.முஹமது யூசுப்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

ஊடக தொடர்புக்கு
9789030302 சென்னை

No comments:

Post a Comment