சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்ட முதல் நாளிலிருந்தே மக்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். அந்த அமைப்பின் 3000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் களத்தில் ...
யார் இவர்கள் ? இந்த தௌஹீது முஸ்லிம் தோழர்கள் , இவர்களுக்கு என்ன லாபம்?
மழை வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உயிரையும் குடுத்து , ஏன் காப்பாற்ற வேண்டும் ?
அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் எதற்கு செய்ய வேண்டும்.?
அரசியல்வாதி உதவி செய்தால், ஓட்டுகளை கவர வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும், அரசியல்வாதி நோக்கம் ஓட்டு .
இவர்களிடம் ,ஒட்டு போடுறோம் , எங்கள் ஒட்டு உங்களுக்கு தான் என்று சொன்னால் ,
TNTJ பனியன் போட்ட பாய்மார்கள் ... அவசரமாக .....அப்படி பேசாதீர்கள், நாங்கள் எந்த தேர்தலிலும் எந்த பதவிக்கும் நிற்க மாட்டோம் என்கிறார்கள் ....
சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, (இல்லை இல்லை.... உதவி என்று சிறிய வார்த்தையால் சுருக்கிவிட முடியாது ..)
- சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் சிக்கி சிதைந்து போனது மக்களின் வாழ்க்கை. யாரிடம் போய் உதவி கேட்பது என்று கூட தெரியாமல் மக்கள் கலங்கிப் போய் தவித்தனர். எந்த "இயந்திரமும்" தங்களுக்காக ஓடி வராத நிலையில்,இந்த அமைப்பினர் ஆங்காங்கே சமையல் பாத்திரங்களை வைத்து மொத்தமாக சமைத்து வண்டிகளில் வைத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் தெருத் தெருவாக சென்று வீடு வீடாக பாக்கெட் உணவைக் கொடுத்து வந்தனர். தண்ணீர் பாட்டில், அடிப்படை மருந்துகள், பிஸ்கட் போன்றவற்றையும் கொடுத்தனர்.
- பசியாலும் தாகத்தாலும் சிக்கி தவித்தவர்களுக்கு , உண்ண உணவு, நல்ல நீர் , குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் பெண்களுக்கு தேவையான உபகரணங்கள் , அனைத்தும் ராணுவம் வரதயங்கிய இடங்களுகேல்லாம் நீந்தி வந்து கொடுத்துவிட்டு சென்றார்கள்
- இறந்த பாட்டியின் உடல் ,வீட்டில் துர்நாற்றம் , கழுத்தளவு தண்ணீர்.. உதவிக்கு வராத கவுன்சிலர் ,தகவல் அறிந்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் விரைந்து வந்து பாட்டி உடலை மீட்டு அடக்கம் செய்துள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட ஜமாத்தின் நிர்வாகி அப்துல் ரஹ்மான் கூறுகையில், அந்தப் பகுதி முழுவதும் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்திருந்ததால் உடலை மாடியில் இருந்து இறக்க முடியவில்லை. இதனால் வீட்டில் துர்வாடை வீசியது. அந்த உடலோடு உறவினர்கள் பரிதவித்து நின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர், போலீஸ் என யாருமே உதவவில்லை. ஃபிரிசர் பாக்ஸைக்கூட அங்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்து உடலைத் துணியால் சுற்றி வெளியே கொண்டு வந்து நல்லடக்கம் செய்தோம் என்றார்.
- மீட்டவர்களை தங்கள் பள்ளிவாசல்களிலும், அலுவலகங்களிலும் தங்க வைத்து , உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை குடுத்து உதவினார்கள்
- பள்ளிவாசல்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்தனர்.அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்து என சகலமும் செய்து தந்துள்ளனர் இஸ்லாமியர்கள். வேளச்சேரி பள்ளிவாசலில் தங்கியிருந்த மக்களை தொந்தரவு செய்யாமல் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை, சாலையில் வைத்து நடத்தியுள்ளனர்.
- மழை வெள்ளம் நீர் வடிய தொடங்கி உடன் , மழை வெள்ளத்தால் சேர்ந்த குப்பைகள் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விடுமென அஞ்சி , எங்கள் உள்ள குப்பை கழிவுகளை எல்லாம் முகம் சுளிக்காமல், அசராமல் ( அவர்களின் உடல் நலம் கேட்டு விடுமே என்ற பயம் இல்லாமல்) அனைத்து கழிவுகளையும் அகற்றி சீர்பாடுதினார்கள் ....
- பல பகுதிகளில் சேறும் சகதியுமாக இருந்ததைப் பார்த்த அவர்கள் சொந்த செலவில் ஜேசிபியை வரவழைத்து அவர்களே முன்னின்று குப்பைகளையும், சேறு சகதிகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
- ஆனால் ஜேசிபி வாகனம் வர முடியாத பகுதிகளில் அவர்களே கையில் பாலிதீன் பைகளை மாட்டிக் கொண்டு சேறு, சகதியை அள்ளி அங்குள்ள மக்களை நெகிழ வைத்தனர். இவர்களைப் பார்த்து அப்பகுதி மக்களும் தெருக்களை சுத்தப்படுத்தும் பணியில் குதித்தனர்.
- கோட்டூர்புரம் பகுதியில் ஒரு கோவிலைச் சுற்றிலும் சேர்நது கிடந்த சேறு சகதியை ஒரு முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் படை சேர்ந்து சுத்தப்படுத்திய செயல் அனைவரையும் நெகிழ வைத்தது......
- 5. அடுத்த கட்டமாக , மருத்துவ முகாம்களையும் அமைத்து மருத்துவம் பார்த்து கொண்டிருகின்றார்கள்...
இவர்களெல்லாம் யார் பெத்த பிள்ளைகளோ .... தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து இங்கு வந்து இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை , கொஞ்சமும் அசராமல் தேவையான நேரத்தில் தேவையான உதவிகளை , அடுக்கடுக்காக செய்து கொண்டிருகின்றார்களே !!!!
இதுவரை 347 உயிர் இழப்பு ஏற்படுத்திய மழைவெள்ளம் ,
இந்த மழையில் பாய்மார்கள் வராவிட்டால் அப்பப்பா , நினைத்து பார்க்க முடியவில்லை ....
இவர்கள் வந்திருக்காவிட்டால் மேலும் எதனை மேலும் உயிர்பலி ... இறைவன் தான் இவர்களை அனுப்பி வைத்து இருகின்றான் .
சரி , சுகாதார சீர்கேடு ஏற்பட கூடாது என்று இவர்கள் மழை விட்டு சென்ற கழிவுகளையும் , மனித கழிவுகளையும் அகற்றாமல் இருந்திருந்தால் , நோய் தாக்கி எத்தனை பேரழிவு ஏற்பட்டிருக்கும் .
இந்த பேரழிவிலிருந்தும் காக்க, இவர்கள் , அருவருக்க நாற்றம் தாங்கமுடியாத , கழிவுகளை , இஸ்லாமியர்கள் , குறிப்பாக தௌஹீது ஜமாஅத் சகோதரர்கள் தங்கள் உயரை பணயம் வைத்து கழிவுகளை அகற்றி , சுத்தபடுத்தி ப்லீசிங் பவுடர் தெளித்து,
மருத்துவ முகாம்களையும் நடத்தி , அப்பப்பா ...........
எதற்காக செய்கிறார்கள்...
உதவி பெறுபவர்களில் பணக்காரன் ஏழை என்று வித்தியாசம் இல்லை ,
பணம் கொடுத்தாலும் வாங்க மாறுகின்றார்கள் , பின் எதற்காக அனைத்தையும் செய்கிறார்கள் ?
அதை தவ்ஹீத் சகோதர்கள் , எவரிடம் கேட்டாலும் ,
அனைவரும் சொல்லும் ஒரே பதில் ....
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவர்
இஸ்லாதில் , எங்களின் வழிகாட்டி முஹம்மது நபி சல்லாஹு வலைவசல்லாம் , அவைகள் எங்களுக்கு கற்று தந்த வழிமுறை தான் ....
-அல்குரான் 5:32
இந்த போதனையின் படி தான், இஸ்லாமியர்கள் அனைத்து உதவிகளையும் செய்தோம்.
ஒன்று மட்டும் புரிந்தது .....
இவர்களை தவறாக புரிந்து (பத்திரிக்கைகள் இவர்களை தவறாக சித்தரித்து ), வைத்துருந்த விசயத்துக்காக வருந்துகிறோம் ....
ஒற்றுமை என்றால் என்ன மனித நேயம் என்றால் என்ன என்று புரிய வைத்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு , நன்றி என்று ஒரு வார்த்தையில் நிறுத்திவிட முடியாது ,
இவர்களை தவறாக புரிந்து (பத்திரிக்கைகள் இவர்களை தவறாக சித்தரித்து ), வைத்துருந்த விசயத்துக்காக வருந்துகிறோம் ....
ஒற்றுமை என்றால் என்ன மனித நேயம் என்றால் என்ன என்று புரிய வைத்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு , நன்றி என்று ஒரு வார்த்தையில் நிறுத்திவிட முடியாது ,
இனிமேலும் ஒற்றுமையை சீர்குலைக்க இந்துத்துவா சக்திகள் முயற்சி செய்தாலும் , மண்ணை கவ்வ வைப்போம்.
நன்றி : தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு முதியவர்.
வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் இப்படி மதம் பாராமல் முகம் பாராமல், மனிதத்தை மட்டுமே பார்த்து செய்த உதவிகளைப் பார்த்து வெள்ளமே கூட வெட்கப்பட்டுப் போயிருக்கக் கூடும். இந்த மனிதம் மேலும் மேலும் வலுப்பெற வேண்டும், என்றென்றும் தழைத்தோங்க வேண்டும்.
வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் இப்படி மதம் பாராமல் முகம் பாராமல், மனிதத்தை மட்டுமே பார்த்து செய்த உதவிகளைப் பார்த்து வெள்ளமே கூட வெட்கப்பட்டுப் போயிருக்கக் கூடும். இந்த மனிதம் மேலும் மேலும் வலுப்பெற வேண்டும், என்றென்றும் தழைத்தோங்க வேண்டும்.
No comments:
Post a Comment