8 ஒட்டகப் போர் பற்றி முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே போர் நடக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு வழிகளில் முன்னறிவிப்புச் செய்தனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தலை நகரமான மதீனா நகரில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட பின் இக்கொலைப் பழி அலீ (ரலி) அவர்கள் மீது விழுகிறது. தான் ஆட்சிக்கு வருவதற்காக அலீ தான் உஸ்மானைக் கொல்லத் திட்டம் தீட்டினார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்தனர்.
மற்றும் சிலர் அலீ (ரலி) அவர்களுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லாவிட்டாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்றும் அவர்களைக் காப்பாற்ற முனைகிறார் என்றும் பிரச்சாரம் செய்தனர்.
உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு நியாயம் கேட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் படை திரட்டினார்கள். அலீ (ரலி) அவர்களுக்கும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே பெரிய அளவில் போர் மூண்டது. இப்போரில் ஆயிஷா (ரலி) அவர்கள் வீற்றிருந்த ஒட்டகத்தின் கால்கள் வெட்டப்பட்டன. அவர்கள் கீழே விழுந்ததும் அவர்களின் படையினர் நிலை குலைந்து தோற்றுப் போனார்கள். இதன் காரணமாக இப்போர் ஒட்டகப் போர்' என்று குறிப்பிடப்படுகிறது.
ஒட்டகப் போருக்காக ஆயிஷா (ரலி) அவர்கள் புறப்பட்ட போது வழயில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அந்த இடத்தில் நாய்கள் குரைத்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் 'இந்த இடத்தின் பெயரென்ன' என்று கேட்டார்கள். அவர்களின் சகாக்கள் ஹவ்அப்' என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டனர். தோழர்கள் காரணம் கேட்ட போது '(என் மனைவியராகிய) உங்களில் ஒருவருக்கு எதிராக ஹவ்அப்' என்ற இடத்தில் நாய்கள் குரைக்கும். அப்போது அவரது நிலை மோசமானதாக இருக்கும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார்கள்.
நூல் : அஹ்மத் 24758
நூல் : அஹ்மத் 24758
ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி தமது நிலை தவறு என்று புரிந்து கொண்டாலும் அவர்களின் சகாக்கள் செய்த நிர்பந்தத்தால் அவர்கள் போருக்குச் செல்லும் முடிவை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
தமது மனைவிக்கு மட்டுமின்றி மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
தமது மனைவிக்கு மட்டுமின்றி மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
'அலீயே உனக்கும் என் மனைவி ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் 'உங்கள் மனைவிக்கும், எனக்கும் இடையே சண்டை ஏற்படுமா? அப்படி நடந்தால் என்னைவிட துர்பாக்கியசாலி இருக்க முடியாது' என்று கூறினார்கள். 'அந்தச் சம்பவம் நிகழும் போது ஆயிஷாவைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மத் 25943
நூல் : அஹ்மத் 25943
இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் அப்படியே முழுமையாக நிறைவேறின. அலீ (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி)அவர்களைக் கன்னியமான முறையில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.
9 ஹஸன் (ரலி) மூலம் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை
நான்காவது ஜனாதிபதியான அலீ (ரலி) அவர்கள் இப்னு முல்ஜிம் என்பவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பின் அவர்களின் மூத்த மகன் ஹஸன் (ரலி அவர்களை மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டனர்.
'இஸ்லாமிய அரசை இரண்டாகக் கூறு போட்டு விட்டார்' என்று முஆவியா (ரலி) அவர்கள் மீது கோபமாக இருந்த மக்கள் முஆவியாவுக்கு எதிராகப் போர் செய்யுமாறு ஹஸன் (ரலி) அவர்களை வலியுறுத்தி வந்தனர். ஆரம்பத்தில் இதற்கு உடன்படாத ஹஸன் (ரலி) அவர்கள் வேறு வழியின்றி முஆவியா (ரலி) அவர்களுடன் போருக்குத் தயாரானார்கள்.
போருக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் ஹஸன் (ரலி) அவர்கள் தமது படையினருடன் தங்கினார்கள். அப்போது ஹஸன் (ரலி) அவர்களின் வலது கரமாக விளங்கிய கைஸ் என்பார் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் ஹஸன் (ரலி) அவர்களின் படையினர் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. ஹஸன் (ரலி) அவர்களும் காயமடைந்தனர்.
போருக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் ஹஸன் (ரலி) அவர்கள் தமது படையினருடன் தங்கினார்கள். அப்போது ஹஸன் (ரலி) அவர்களின் வலது கரமாக விளங்கிய கைஸ் என்பார் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் ஹஸன் (ரலி) அவர்களின் படையினர் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. ஹஸன் (ரலி) அவர்களும் காயமடைந்தனர்.
கட்டுப்பாடு அற்ற இந்தப் படையை வைத்துப் போர் செய்வதை விட முஆவியா (ரலி) அவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதே சிறந்தது என்று கருதி முஆவியா (ரலி) அவர்களுக்கு ஹஸன் (ரலி) அவர்கள் மடல் எழுதினார்கள்.
தமக்குத் தேவையான மாணியத்தைப் பெற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டு தமது கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சியை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். பிரிந்து கிடந்த இஸ்லாமிய அரசு ஒரே அரசாக இதன் மூலம் வலிமை பெற்றது. முஸ்லிம்கள் தமக்கிடையே இரத்தம் சிந்துவது இதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஹிஜ்ரி 41ஆம் ஆண்டு ரபிய்யுல் அவ்வல் மாதம் பிறை 5ல் நடந்த இந்தச் சமாதான உடன்படிக்கை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் மீது இருந்தார்கள். அவர்களின் அருகில் ஹஸன் (ரலி) அவர்கள் இருந்தனர். 'எனது இந்தப் பேரப்பிள்ளை மூலமாக முஸ்லிம்களின் இருபெரும் அணிகளிடையே அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்துவான்' என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் புகாரி 2704
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்அறிவிப்புச் செய்தவாறு இது நிறைவேறியது.
10 வழிப்பறிக் கொள்ளைகள் தடுக்கப்படும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து வழிப்பறிக் கொள்ளை பற்றி முறையீடு செய்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் 'ஹீரா என்ற ஊர் உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'கேள்விப்பட்டிருக்கிறேன்' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'கஃபாவை வலம் வருவதற்காக ஒரு பெண் ஹீரா எனும் ஊரிலிருந்து ஒட்டகத்தில் பயணம் செய்து வருவாள். அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டாள். உன் வாழ்நாள் அதிகரித்தால் நீ இதைக் காண்பாய்' என்று என்னிடம் கூறினார்கள். 'வழிப்பறிக் கொள்ளை செய்வதில் வல்லவரான தய்யி கோத்திரத்தார் அப்போது எங்கே சென்றிருப்பார்கள்?' என்று எனக்குள் நான் கூறிக் கொண்டேன் என்று அதீ பின் ஹாதிம் (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரி 3595
நூல் : புகாரி 3595
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறும் போது ஹீரா என்ற ஊருக்கும், மக்காவுக்கும் இடையே வாழ்ந்த தய்யி எனும் கோத்திரத்தார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் கூட்டம் ஒடுக்கப்படும் என்றும், ஹீரா முதல் மக்கா வரை உள்ள பகுதிகள் முஸ்லிம்களின் கைவசம் வரும் என்றும், மிகச் சீக்கிரத்தில் இது ஏற்படும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹீரா எனும் பகுதியும் தய்யி கூட்டத்தர் வாழ்ந்த பகுதியும் முஸ்லிம்கள் கைவசம் வந்தன. கொள்ளைக் கூட்டம் ஒடுக்கப்பட்டது. எவ்வித அச்சமுமின்றி தன்னந்தனியாக ஒரு பெண் ஹீராவிலிருந்து மக்கா வரை எவ்வித அச்சமுமின்றி வந்து செல்லும் உன்னதமான நிலை ஏற்பட்டது. அதீ பின் ஹாதிம் (ரலி) வாழ்நாளிலேயே இது நிறைவேறியது.
11 பாரசீகம் மற்றும் ரோமப் பேரரசின் வீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு சக்திகள் உலகின் பல நாடுகளைக் கைப்பற்றி மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகத் திகழ்ந்தன.
இத்தாலியைத் தலைமையாகக் கொண்ட ரோமப் பேரரசு உலகின் பல நாடுகளைத் தனக்குக் கீழ் அடிமைப்படுத்தி மிகப் பெரும் சாம்ராஜ்யமாக விளங்கியது.
இது போல் ஈரானைத் தலைமையிடமாகக் கொண்ட பாரசீகப் பேரரசு பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தி மற்றொரு சாம்ராஜ்யமாக விளங்கியது.
ரோமப் பேரரசின் மன்னர் கைஸர் என்று அழைக்கப்பட்டார்.
பாரசீகப் பேரரசின் மன்னர் கிஸ்ரா என அழைக்கப்பட்டார்.
உலகின் இருபெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்த பாரசீகப் பேரரசு பற்றியும், ரோமப் பேரரசு பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தர்கள்.
கிஸ்ரா வீழ்ந்து விட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். கைஸர் வீழ்ந்து விட்டால் அவருக்குப் பின் கைஸர் எவரும் இருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
நூல் : புகாரி 3618
நூல் : புகாரி 3618
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பாரசீகம் முஸ்ம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை பாரசீகம் எனும் ஈரான் முஸ்லிம்கள் வசமே இருந்து வருகிறது. அதன் பின்னர் கிஸ்ரா எவரும் வர முடியவில்லை.
அது போல் ரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பல நாடுகள் முஸ்லிம்களின் கைவசம் வந்தன. ரோமப் பேரரசு இத்தாயாகச் சுருங்கியது. இதன் பின்னர் இரண்டாவது கைஸர் யாரும் வர முடியவில்லை. இன்றளவும் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
12 யமன் வெற்றிகொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த ஆரம்ப காலத்தில் மகிப் பெரும் துன்பங்களை எதிர் கொண்டனர். நபிகள் நாயகத்தை நம்பி ஏற்றுக் கொண்ட மக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சித்திரவதை தாங்காமல் நபிகள் நாயகத்தின் தோழர்கள் முறையீடு செய்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட முன்னறிவிப்பை வெளியிட்டார்கள்.
'அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப்படுத்துவான். யமனில் உள்ள ஒருவர் 'ஹள்ரமவ்த்'என்றும் ஊரிலிருந்து ஸன்ஆ' எனும் ஊர் வரை அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் பயணம் செய்வார். தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாய்கள் பற்றி அஞ்சுவதைத் தவிர (கொலை கொள்ளை போன்ற) அச்சம் எதுவும் அவருக்கு இருக்காது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 3612
நூல் : புகாரி 3612
உயிர் வாழ்வதே கேள்விக் குறியாக இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றிக்கான எந்த அறிகுறியும் தென்படாத காலத்தில் யமன் நாடு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் பிரகடனம் செய்தது போலவே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் யமன் நாடு முஸ்லிம்களின் கீழ் வந்தது. இஸ்லாத்தின் கடுமையான குற்றவியல் சட்டம் காரணமாக ஹள்ரமவ்த்திலிருந்து ஸன்ஆ வரை அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் பொற்காலமும் வந்தது.
13 பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ரோமப் பேரரசின் கீழ் தான் பைத்துல் முகத்தஸ் என்ற புனிதத் தலம் இருந்தது. முஸ்லிம்களின் மூன்று புனிதப் பள்ளிவாசல்களில் ஒன்றான இப்பள்ளியிலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்துக்கு இறைவனால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
'உலகம் அழிவதற்கு முன் ஆறு நிகழ்வுகள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்' என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலாவதாக தமது மரணத்தைக் குறிப்பிட்டார்கள். இரண்டாவது பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 3176
நூல் : புகாரி 3176
ஜெருசலம் நகரமும், அதில் உள்ள பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி கிறித்தவர்களுக்கும் யூதர்களுக்கும் புனிதத் தலங்களாக இருந்தன. ரோமப் பேரரசின் கீழ் இருந்த நாடுகளில் ஜெருசலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்கள் கைவசம் வந்தது.
முஸ்ம்களில் எழுச்சியைக் கண்டு திகைத்த கிறித்தவ பாதிரிமார்கள் எவ்வித எதிர்ப்புமின்றி உமர் (ரலி) அவர்களிடம் ஜெரூசலத்தை ஒப்படைத்தார்கள்.
முஸ்ம்களில் எழுச்சியைக் கண்டு திகைத்த கிறித்தவ பாதிரிமார்கள் எவ்வித எதிர்ப்புமின்றி உமர் (ரலி) அவர்களிடம் ஜெரூசலத்தை ஒப்படைத்தார்கள்.
14 எகிப்து வெற்றி கொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு
உலகின் பழமையான நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்து ரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது.
எகிப்தை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
நூல் : முஸ்லிம்
எகிப்தை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
நூல் : முஸ்லிம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து பத்து ஆண்டுகளில் உன்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர்.
நபிகள் நாயகத்தின் இந்த முன்னறிவிப்பும் நிறைவேறி அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை நிரூபித்தது.
15 போலி இறைத்தூதர்கள் பற்றிய எச்சரிக்கை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று தம்மை அறிமுகம் செய்தார்கள். அதற்கான சான்றுகளையும் முன் வைத்தார்கள்.
இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு அதிகரித்து மாபெரும் தலைவராக உருவெடுத்தார்கள். இதைக் கண்ட போலிகள் சிலர் தம்மையும் இறைத்தூதர்கள் என்று அறிவித்துக் கொண்டனர். இதனால் நபிகள் நாயகத்தைப் போலவே தாங்களும் தனிப் பெரும் தலைவர்களாக உருவெடுக்கலாம் என்று எண்ணத் தலைப்பட்டனர்.
இதில் முக்கியமானவன் முஸைலாமா என்பவன். யமாமா என்ற பகுதியைச் சேர்ந்த இவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மதீனா வந்து நபிகள் நாயகத்தைச் சந்தித்தான். 'உங்களுக்குப் பின் நான் ஒரு நபி என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களை நபி என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்' என்று நபிகள் நாயகத்திடம் பேரம் பேசினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவனை எச்சரித்து அனுப்பினார்கள்.
நூல் : புகாரி 3620
இவனைப் போலவே அஸ்வத் அல் அன்ஸீ' என்பவனும் தன்னை நபியெனப் பிரகடனப்படுத்தி யமன் மக்களை வழி கெடுத்தான். இவ்விரு போ நபிகளின் பிரச்சினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியது. மக்களை வழி கெடுக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனாலும் இவர்கள் தோல்வியடைவார்கள் என்று இறைவன் அறிவித்துக் கொடுத்தான். அதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவிப்புச் செய்தார்கள்.
'நான் தூங்கிக் கொண்டிருந்த போது என் கைகளில் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை எனக்குப் பாரமாக இருந்தன. அதை ஊதி விடுவீராக' என்று எனக்குக் கூறப்பட்டது. நான் ஊதியவுடன் அவை பறந்து விட்டன. இந்தக் கனவு அஸ்வத் மற்றும் யமாமாவின் முஸைலமா ஆகிய போலி நபிகள் பற்றியது என்று விளங்கிக் கொண்டேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 3621, 4374, 4375, 4379
நூல் : புகாரி 3621, 4374, 4375, 4379
இவ்விருவரும் வெளித் தோற்றத்தில் வலிமை மிக்கவர்களாகக் காட்சி தந்தாலும் உண்மையில் அவர்களின் வாதம் அழிந்து போகும் என்று இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே இவ்விருவரின் கதையும் முடிந்தது.
யமாமாவில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த முஸைலமாவை ஒழிக்க படை ஒன்றை அபூபக்கர் (ரலி) அவர்கள் அவர்கள் தமது ஆட்சியின் போது அனுப்பினார்கள். இப்போரில் முஸைலமா கொல்லப்பட்டான். உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி அவர்கள் தான் அவர்கள் தான் இவனைக் கொன்றார்கள்.
பிற்காலத்தில் இது பற்றி வஹ்ஷி (ரலி) அவர்கள் கூறும் போது 'மனிதர்களில் மிகவும் சிறந்தவரை (ஹம்ஸாவை) நான் தான் கொன்றேன். மிக மோசமான மனிதனையும் (முஸைலமாவை) நான் தான் கொன்றேன்' என்று குறிப்பிட்டார்கள். இது போலவே யமன் நாட்டில் தன்னை நபியென வாதிட்டு மக்களை வழி கெடுத்த அஸ்வத் அல் அன்ஸியும் பைரோஸ் என்பவரால் கொல்லப்பட்டான்.
இவ்விருவராலும் போலியான இரண்டு மதங்கள் தோன்றி நிலைத்து விடுமோ என்று ஆரம்பத்தில் நபிகள் நாயகம் அஞ்சினாலும் பின்னர் இறைவனின் அறிவிப்பால் அந்த அச்சம் விலகியது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின் எந்த இறைத்தூதரும் வரமுடியாது. வருவதற்கான எந்த அவசியமும் இல்லை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
அவர்களுக்கு அருளப்பட்ட இஸ்லாம் முழுமையாக்கப்பட்டதாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் உள்ளதால் எந்தத் தூதரும் வரவேண்டிய தேவை இல்லை.
தனக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் அறிவித்துள்ளனர். திருக்குர்ஆனிலும் இதற்கு ஏரளமான சான்றுகள் உள்ளன.
ஆனாலும் இறைத்தூதர் என்று ஒருவரை மக்கள் நம்பினால் எவ்விதக் கேள்வியும் ஆதாரமும் கேட்காமல் மக்கள் அவரைப் பின்பற்றுவார்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் பலர் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டார்கள். இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள்.
எனக்குப் பின் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை நபியெனக் கூறிக் கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனக்குப் பின் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை நபியெனக் கூறிக் கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 7121
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போலவே தலீஹா, முக்தார் சில ஆண்டுகளுக்கு முன் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் உள்ளிட்ட பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பொய்யர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.
No comments:
Post a Comment