
ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன்
கடந்த 2003.ஆம் ஆண்டு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புக்கள் என்ற தலைப்பில் ரமளான் முழுவதும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
அந்த உரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் துதர் தாம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் அமைந்தது. தனியார் தொலைக்காட்சியிலும் சஹர் நேரத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
அந்த உரையில் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதை விட முக்கியமான அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகள் பற்றிய முன்னறிவிப்புகளும் திருக்குர்ஆனில் ஏராளம் உள்ளன. எனவே அவற்றையும் தொகுத்து நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புடன் இணைத்து வெளியிட்டுள்ளோம்.
இஸ்லாம் இறைவன வழங்கிய மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக திருக்குர் ஆனும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிப்புக்களும் அமைந்துள்ளன என்பதை பின் வரும் தலைப்புகளில் இந்நூல் தெளிவுபடுத்துகிறது
இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்று முஸ்லிமல்லாதவர்கள் சிலர் கருதுகிறார்கள்.
ஆனால், இஸ்லாம் மார்க்கம் அகில உலகையும் படைத்த இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியாக வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர்.
முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இவ்வாறு நம்புவதில்லை. தக்க காரணங்களின் அடிப்படையில் தான் இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்று நம்புகின்றனர்.
இந்த மார்க்கத்தை நிச்சயம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து உருவாக்கியிருக்க முடியாது என்பதற்கு திருக்குர்ஆன் முதன்மையான சான்றாக உள்ளது.
எதிர்காலத்தில் நிகழவுள்ள பல செய்திகளைத் திருக்குர்ஆன் முன் கூட்டியே அறிவித்திருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் கூறியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள்.
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ள பல நிகழ்ச்சிகளை முன்னரே அறிவித்துள்ளனர். அவர்கள் அறிவித்தவாறு அவை அப்படியே நிறைவேறி வருவதை சிந்திப்பவர்கள் - இதை இறைவன் புறத்திலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள்.
இதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் வருமுன் உரைத்த இஸ்லாம் எனும் இந்நூலைத் தொகுத்துள்ளேன் இந்நூலை வாசிப்பவர்கள் இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் என்பதை அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment