News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........உணர்வு - ..ஏகத்துவம் - .........தீன் குலப் பெண்மணி - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Sunday, August 31, 2014

நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 1) - முன்னுரை

அஸ்ஸலாமு அலைக்கும்  ரஹமதுல்லாஹி வ பாரக்காதஹு , பகுதி 1

சகோதரர் பி ஜே எழுதிய நபிவழியில் நம் ஹஜ் என்ற நூலில் இருந்து இங்கே நமக்கு கட்டுரை வாயிலாக தருகிறோம் .

நபிவழியில் நம் ஹஜ்
நூலின் பெயர்: நபிவழியில் நம் ஹஜ்
ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்
பக்கங்கள்: 72

விலை ரூபாய்: 14.00
நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்என்ற உணர்வுடன் கூடும் உலக மகா மாநாடு ஹஜ்.
வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையைப் பறை சாற்ற வேண்டிய புனித மிக்க ஆலயத்தில் கூட சிலர் அறியாமையின் காரணமாக வேறுபட்டு நிற்கும் கொடுமையைக் காண்கிறோம். மத்ஹபுகளின் பெயரால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஹஜ் செய்யும் நிலையையும் காண்கிறோம்.
அணிகின்ற ஆடைகள் கூட ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய இடத்தில் வணக்க வழிபாடுகளில் வித்தியாசப்படுவதை விடக் கொடுமை என்ன இருக்க முடியும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் செய்வது என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்(முஸ்லிம் 2286) என்று கூறியதுடன் செய்து காட்டி விட்டும் சென்றுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு மூன்று தடவை ஹஜ் செய்து ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாக நடந்திருந்தால் வித்தியாசங்கள் ஏற்பட சிறிதளவாவது நியாயம் இருக்கலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ ஒரு தடவை தான் ஹஜ் செய்தனர். அந்த ஹஜ்ஜை அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அந்த ஒரே விதமாகத் தான் நாம் அனைவரும் செய்தாக வேண்டும். அந்தப் புண்ணிய பூமியிலாவது ஒரே விதமாக வணக்கங்கள் புரிய வேண்டும்.
இந்த நன்னோக்கத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் செய்தனர் என்பதைத் தக்க சான்றுகளுடன் வெளியிட்டுள்ளோம்.
பின் வரும் தலைப்புக்களில் ஹஜ்ஜின் அனைத்துச் சட்டங்களையும் தெளிவுபட எடுத்துக் கூறும் நூல்......
  • பகுதி வாரியாக பார்க்க......
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 1) - முன்னுரை(இந்த பகுதி )
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 2) - பெண்கள் மஹ்ரம் தக்க துணை அவசியம்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 3) - சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா?
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 4) - இஹ்ராம், தல்பியா
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 5) - இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 6) - இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 7) - தவாஃப்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 8) - ஸஃபா, மர்வா
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 9) - மினா,அரஃபா மற்றும் முஸ்தலிஃபாவுக்குச் செல்வது
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 10) - ஷைத்தான் மீது கல் எறிதல்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 11) - தலை மழித்தல்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 12) - இதர கவனிக்க பட வேண்டிய அமல்கள்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 13) - ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டுதல்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 14) - பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 15) - குர்பானி கொடுத்தல்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 16) - பிறருக்காக ஹஜ் செய்தல், ஜம் ஜம்
நபிவழியில் நம் ஹஜ் (பகுதி 17) - மதீனாவுக்குச் செல்வது

No comments:

Post a Comment