News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, December 19, 2017

Wednesday, December 13, 2017

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு : ரபீவுல் ஆகிர் மாதம்

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :
ரபீவுல் ஆகிர் மாதம்
கடந்த 20.11.17 திங்கள் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீயுல் அவ்வல் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய
19.12.17 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
அன்று பிறை தென்பட்டால் ரபீவுல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரபீவுல் அவ்வல் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும்.
பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு : 75502 77339, 99520 35444, 99520 56444
-தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்

Tuesday, November 28, 2017

திருமணத்தில் வீண் விரயம் எது?


நபிவழித் திருமணத்தில் தடுமாற்றம்?

தமிழ்நாடு தவ்ஹீத்மா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும்  தாயீகள் சிலர், அவர்களின்  இல்லத்தில் நடைபெறும் நபிவழித் திருமணத்தில்  தடுமாற்றம் அடைகிறார்கள். அதற்கு TNTJ கடினமான நிபந்தனைகள் காரணமா.?
- புரைதா N ஷாஹீர்,  தஞ்சை

மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பித்அத்தான காரியங்கள் நடக்கும் திருமணங்கள் விஷயத்தில் எந்தத் தடுமாற்றமும், குழப்பமும் யாருக்கும் இல்லை.

ஆனால் குறைந்த செலவில் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே சிலருக்கு தடுமாற்றம் உள்ளது. குறைந்த செலவு எது என்பதிலும் மிகச் சிலருக்கு குழப்பம் இருப்பதை நாம் அறிகிறோம். இதைக் கவனத்தில் கொண்டு எல்லா மாவட்டங்களிலும் இது குறித்த கருத்துக்களை கேட்டுள்ளோம். பல மாவட்டங்களில் கருத்துக்கள் அனுப்பி உள்ளார்கள்.

அக்கருத்துக்க்ளைத் தொகுத்து அறிஞர் குழுவில் விவாதித்து யாருக்கும் குழப்பம் வராத வகையிலும் மார்க்கத்தில் கடுகளவும் சமரசம்  செய்யாத வகையிலும் எத்தகைய முடிவை எடுப்பது என்று முடிவு செய்து விரைவில் அறிவிப்போம். இன்ஷா அல்லாஹ்

நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மை தான். அதிகமான மக்கள் கடும் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு நடந்தாலும் சிலர் தடுமாற்றம் அடைகிறார்கள்

-உணர்வு வார இதழ்

Monday, November 13, 2017

மாவட்டத்திற்கு வரும் கடிதங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு…
தனி நபர்களும், கிளைகளும் தங்களது கோரிக்கையைக் கடிதங்களாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புகிறார்கள்.
அவற்றில் மாநிலத் தலைமையின் கவனத்திற்குக் கொண்டுவரத் தக்க கடிதங்களை எக்காரணத்தைக் கொண்டும் தாமதிக்கக் கூடாது.
சில கடிதங்களை ஒரு சில மாவட்டங்கள் பல வாரங்கள் அளவில் கூட “பாதுகாத்து” வைத்திருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன.
மாவட்டத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டி வரும் மனுக்களைப் பரிந்துரை செய்து மாநில நிர்வாகத்திற்கு அனுப்பாமல் இருக்கும் மாவட்டங்கள் உடனே அவைகளையும் அனுப்பி வைக்கவும்.
பரிந்துரை செய்ய விருப்பமில்லை என்றால் இந்த மனுக்களைப் பரிந்துரை செய்ய விரும்பவில்லை என்று சொல்லித் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டுமேயொழிய எக்காரணம் கொண்டும் அந்த மனுக்களை மாவட்ட நிர்வாகிகளே வைத்திருப்பதை ஏற்க இயலாது.
எனவே இனிவரும் காலங்களில் அவ்வாறு எந்த மாவட்டமும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஏதேனும் மாநிலத்தலைமைக்கு அனுப்பாமல் மாவட்டங்கள் நிலுவையில் வைத்திருந்தால் வரும் 13.11.17 திங்கட்கிழமைக்குள் அந்த மனுக்களை மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
M.S. சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

SOURCE : TNTJ.NET

மாவட்ட பேச்சாளர் பயிற்சி குறித்த முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நமது ஜமாஅத்தின் தஃவா பணியை செம்மைப்படுத்த வேண்டுமெனில் ஜமாஅத்தின் முக்கிய அங்கங்களாக திகழும் பேச்சாளர்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட பேச்சாளர் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எனினும் சில மாவட்டங்கள் தன்னிச்சையாக தங்களிடம் உள்ள தாயிக்களை கொண்டே மாவட்ட பேச்சாளர் பயிற்சியை நடத்தி கொள்வதாக அறிகிறோம். அது குறைந்த பலனையே தருவதால் இனி மாவட்டங்கள் அவ்வாறு நடத்தக் கூடாது என்று தலைமை அறிவுறுத்துகிறது.
மாவட்ட தாயி பயிற்சி என்பது தலைமை அனுப்பும் தாயிக்களை கொண்டு தான் நடத்தப்பட வேண்டும்.
மேலும் மாவட்ட பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்தும் வகையில்
முப்பது பேச்சாளர்களுக்கும் அதிகமாக உள்ள மாவட்டங்கள் முறைப்படி தலைமையிலிருந்து தாயிக்களை பெற்று பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம்.
முப்பது பேச்சாளர்களுக்கும் குறைவாக இருக்கும் மாவட்டங்கள் தனியாக பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தாமல் அவர்களது பயிற்சி குறித்து மாநிலத் தலைமைக்கு தெரிவித்து அனுமதி கோரினால் அருகாமையில் உள்ள நான்கைந்து மாவட்டங்களை தேவைக்கேற்ப ஒன்றிணைத்து தகுந்த முறையில் பிற மாவட்டங்களுடன் இணைந்து அந்நிகழ்ச்சியை நடத்த மாநிலத் தலைமையகம் வாயிலாக அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என்பதையும், அதுவே நிகழ்ச்சியின் நோக்கம் பரிபூரண வகையில் நிறைவேற வழிவகுக்கும் என்பதை அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனி பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தும் மாவட்டங்கள் மேற்கண்ட ஒழுங்குமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M.S. சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Source : tntj.net

Tuesday, October 24, 2017

மாநிலத் தலைவர் பீ.ஜே. அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பு (SMS மட்டுமே)

மாநிலத் தலைவர் பீ.ஜே. அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பு (SMS மட்டுமே)
---------------------------------------------------------------------------

தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு நீங்கள் அனுப்பும் கடிதங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தாமதமாவது போல நீங்கள் உணர்ந்தால் உங்களது புகார்களை, மாநிலத் தலைவர் பீ.ஜே.அவர்களின் 99520 35111 என்ற தொலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் நீங்கள் தெரிவிக்கலாம் அல்லது tntjreport@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என்று நாம் அறிவித்து இருந்தோம்.
ஆனால் ஒரு சிலர் பீஜே அவர்களின் 99520 35111 என்ற இந்த நம்பருக்கு SMS வழியாக அனுப்புவதற்கு பதிலாக , போன் செய்கின்றார்கள். அதனை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
SMS வழியாகவோ அல்லது மெயில் வழியாகவோ மட்டுமே உங்கள் புகார்களை அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M.S. சைய்யது இப்ராஹீம்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

விஸ்வரூபம் திரைப்படத்தை முஸ்லிம்கள் எதிர்த்ததற்கும், இப்போது வெளியாகியுள்ள மெர்சல் படத்தை பாஜகவினர் எதிர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?



No automatic alt text available.

விஸ்வரூபம் திரைப்படத்தை முஸ்லிம்கள் எதிர்த்ததற்கும், இப்போது வெளியாகியுள்ள மெர்சல் படத்தை பாஜகவினர் எதிர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
- ஆரோக்கியநாதன், தாம்பரம்.

இரண்டுமே கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
கருத்து சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது என்பது உண்மைதான். ஆனால் கருத்து சுதந்திரம் என்பது எல்லைக்கு உட்பட்டதாகும்.
ஆள்வோர் வகுக்கும் சட்டங்கள், அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றைக் கண்டிப்பது கருத்து சுதந்திரம் என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசின் உண்மையான உரிமையாளர்கள் மக்கள் தான். இதனால் அரசு நாசகார திட்டங்கள் போட்டாலோ, நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்றாலோ அதைத் தட்டிக் கேட்க உண்மை எஜமானர்களான மக்களுக்கு உரிமை உண்டு. இது தான் கருத்து சுதந்திரம் என்பது.
அதுபோல் விபச்சாரம், மது, சூதாட்டம் போன்ற தீமைகளை தக்க சான்றுகளுடன் மக்களுக்கு விளக்கி வாதங்களை வைத்தால் அது கருத்து சுதந்திரம் எனலாம். மக்கள் செய்யத் தவறிய நன்மைகளை எடுத்துக் காட்டி ஆர்வமூட்டும் வாதங்களை முன்வைத்தால் அது கருத்து சுதந்திரம் எனலாம்.
ஆனால் ஒரு மதம் குறித்தும், அந்த மதத்தினர் புனிதமாகக் கருதுபவை குறித்தும், அவர்களின் நம்பிக்கை குறித்தும், அவர்களின் வரலாறு குறித்தும், அந்த மதத்தின் புனிதர்களைக் குறித்தும் மற்றவர்கள் தவறாக செய்யும் விமர்சனம் கருத்து சுதந்திரத்தில் வராது. அது போல் ஒரு சாதியினரை இழிவாகச் சித்தரிக்கும் வகையில் மற்ற சாதியினர் செய்யும் விமர்சனமும் கருத்து சுதந்திரத்தில் வராது.
அப்படி கருத்து சொல்வதாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்களின் மனம் புண்படாமல் கண்ணியமான முறையில் கேள்விகள் எழுப்பலாம்.
இந்த அடிப்படையில் தான் மெர்சல் படத்துக்கான எதிர்ப்பையும், விஸ்வரூபம் படத்துக்கான எதிர்ப்பையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
இதைச் சில உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
பாஜகவை எதிர்த்து மற்ற கட்சிகள் பொதுக்கூட்டம் போட அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி வழங்கும். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கூட்டம் போட அனுமதி கேட்டால்கூட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். தரக்குறைவான முறையில் கருத்தைச் சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்படும்.
ஆனால் இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்த போகிறோம்; அதற்கு அனுமதி வேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்டால், இஸ்லாம் மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்தப் போகிறோம் அதற்கு அனுமதி வேண்டும் என்று இந்துக்கள் அனுமதி கேட்டால் அனுமதி தர மாட்டார்கள்.
பிரதமரையே கண்டித்து நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்து விட்டு, ஒரு மதத்தினரைப் புண்படுத்தும் கூட்டத்துக்கு அனுமதி மறுக்க என்ன காரணம்?
முந்தையது கருத்து சுதந்திரம் தொடர்பானது; மற்றொன்று கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்திலானது என்பதுதான் இதற்குக் காரணம்.
அரசியல் ரீதியாகச் சொல்லும் கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு ஏற்படாது.
குறிப்பிட்ட மதத்தையும், மதத்தினரையும், சாதியினரையும் இழிவுபடுத்தும் விதமாகச் சித்தரிப்பது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும்.
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றி சிறிய விமர்சனம் இடம் பெற்றுள்ளது. இது அரசுக்கு எதிராகக் குடிமகன் செய்யும் விமர்சனத்தில் சேரும். இதைவிட அதிகமாக பொதுக்கூட்டங்களில் ஜிஎஸ்டி வரியை எதிர்த்து பல தலைவர்கள் கருத்துக் கூறியுள்ளனர். பாஜக பெருந்தலைகளே கருத்துக் கூறியுள்ளனர். பொதுக்கூட்டத்திலும் கூட காரசாரமாக விமர்சனம் செய்யப்படுகிறது. அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உள்ள இந்த விஷயம் சினிமாக்காரர்களுக்கு மட்டும் மறுக்கப்பட முடியாது.
ஆனால் விஸ்வரூபம் படம் இந்த வகையான கருத்துச் சுதந்திரத்தில் அடங்குமா? நிச்சயம் அடங்காது.
தமிழகத்தில் விஜயகாந்த், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்கள் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகத் தொடர்ந்து சித்தரித்து வந்தனர். முஸ்லிமல்லாத மக்கள் துவக்கத்தில் கதையாக இதை எடுத்துக் கொண்டனர். இது போல் தொடர்ந்து எடுக்கப்பட்ட எல்லாப் படங்களிலும் இதே கருத்தை மையப்படுத்திய போது கதை என்ற நிலையைத் தாண்டி முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், தேசவிரோதிகள் என்ற கருத்து படிப்படியாக முஸ்லிமல்லாதவர்களின் உள்ளங்களில் பதிய ஆரம்பித்தது.
இதனால் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. முஸ்லிமல்லாதவர்களின் நிறுவனத்தில் வேலைகள் கிடைப்பதில்லை. பள்ளிக் கூடத்தில் பயிலும் முஸ்லிம் சிறுவர் சிறுமிகள் கூட அவர்களின் மதம் காரணமாக ஒதுக்கப்பட்டனர். மனதால் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை உண்டாக்குவதே இவர்களின் நோக்கம் என்பது உறுதியானது. இது எல்லை மீறிப்போன போது இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உள்ளுக்குள் குமுறினார்கள். இந்த நேரத்தில் தான் விஸ்வரூபம் திரைப்படம் வந்தது.
இப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியது மட்டுமின்றி இஸ்லாம் மதமும் கேலிக்கூத்தாக்கப்பட்டது.
முல்லா உமர் பாத்திரத்தில் நடித்தவன் கோவை, மதுரை ஆகிய ஊர்களில் தங்கி இருந்ததாகப் பேசும் வசனம் அமைத்தார்கள். தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் தாலிபான்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். அவர்களுடன் தமிழக முஸ்லிம்களுக்கு தொடர்பு உண்டு என்ற பொய்யை இது விதைத்தது. இது கருத்து சுதந்திரமா?
குர்ஆனை ஓதிவிட்டு கழுத்தை அறுப்பதும், குண்டு வைப்பதற்கு முன்னரும், அறுத்த பின்னரும் தொழுவதாகக் காட்டுவதும், முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுங்கள் என்ற வசனத்தை ஓட விடுவதும் இஸ்லாம் மதத்தின் நம்பிக்கையைப் புண்படுத்துவதா? கருத்து சுதந்திரமா?
இரண்டு லட்சம் பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்க ராணுவம் கொன்று குவித்ததை உலகமே அறியும். ஆனால் ஒரு குழந்தையைத் தவறுதலாகக் கொலை செய்து விட்டு அதற்காக அமெரிக்க ராணுவ வீரன் வருந்துவது போல் காட்டுவதும், அமெரிக்க ராணுவம் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் என்று நற்சான்று அளிப்பதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுமா, கருத்து சுதந்திரமா?
இவர்கள் படம் எடுத்து பணம் பார்த்து விட்டு அடுத்த படம் தயாரிக்கும் வேளையில் இறங்கி விடுவார்கள். ஆனால் இதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ரணத்துக்கு என்ன பதில்?
திரும்பத் திரும்ப இந்த நச்சுக் கருத்தை விதைத்து அதிகமான இந்துக்களை முஸ்லிம்களுக்குப் பகைவர்களாக்கினார்கள். இதனால் கொதித்துப் போன முஸ்லிம்கள் விஸ்வரூபம் படத்தை எதிர்த்தார்கள்.
இதுவும் மெர்சல் படத்துக்கான எதிர்ப்பும் ஒன்றா?
இது கமலஹாசனுக்கு மட்டுமான எதிர்ப்பு அல்ல. தொடர்ந்து இது போன்ற கருத்தை விதைத்து முஸ்லிம்களை தேச விரோதிகளாக சித்தரித்த விஜயகாந்த், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரானதே அந்த எதிர்ப்பு.
ஒரு தடவை திருடும் போது சாதாரணமாக எச்சரிப்பார்கள். இரண்டாம் முறையும் திருடும் போது இலேசாகத் தட்டுவார்கள். மூன்றாம் முறை திருடும் போது இழுத்துப் போட்டு சாத்துவார்கள். இந்த அடி மூன்றாவது திருட்டுக்கு மட்டுமானது அல்ல. மூன்றுக்கும் சேர்த்து அளிக்கப்பட்ட பதிலடி தான். முஸ்லிம்களின் உணர்வுகளைத் தொடர்ந்து காயப்படுத்தி வரும் அனைத்து கூத்தாடிகளுக்கும் எதிரானதே விஸ்வரூபம் படத்துக்கான எதிர்ப்பு.
முஸ்லிம்கள் இதனால் எப்படியெல்லாம் பாதிக்கப் படுகிறார்கள், தனிமைப்படுத்தப் படுகிறார்கள் என்பதை முஸ்லிம்களின் உணர்வுகளின் அடிப்படையில் புரிந்து கொண்ட இயக்குனர் மணிவண்ணன் கூட அழுத்தமாகப் பதிவு செய்தார்.
துப்பாக்கி என்ற படத்தில் பெட்டிக்கடைக்காரன், ஸ்திரீ போடுபவன், சைக்கிள் பஞ்சர் பார்ப்பவன் உள்ளிட்ட முஸ்லிம்களைக் கூட நம்பாதீர்கள்! அவர்கள் ஸ்லீப்பர் செல்கள் என்று நடிகர் விஜய் பதிய வைத்தார். ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் சந்தேகப்படுங்கள் என்று அவர் துப்பாக்கி படத்தில் சித்தரித்த போது கடும் கண்டனத்தை முஸ்லிம்கள் பதிவு செய்தனர். அது ஆறுவதற்குள் விஸ்வரூபம் வேறு வகையில் முஸ்லிம்களை இழிவுபடுத்தியதால்தான் கடும் எதிர்ப்பைக் காட்டியாக வேண்டும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டார்கள்.
விஸ்வரூபம் உள்ளிட்ட பல திரைப்படங்களால் சிறுபான்மைச் சமுதாயமான முஸ்லிம்கள் முற்றிலும் ஒரங்கட்டப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதை உணராமல் கருத்து சுதந்திரப் போராளிகள் முஸ்லிம்களைத் திட்டித் தீர்த்தார்கள். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான போக்கு என்று வசைபாடினார்கள்.
ஆனால் மெய்யாகவே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக மெர்சல் படக்குழுவினரை பாஜக மிரட்டும் போது கருத்து சுதந்திரப் போராளிகள் பலரைக் காணவில்லை. பாரதிராஜா உள்ளிட்டவர்களும் மதவெறியின் காரணமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை அப்போது எடுத்தார்கள்; கருத்து சுதந்திரத்துக்காக அல்ல என்பது இப்போது அம்பலமாகி விட்டது.
ஒரு விஷமக் கருத்தால் பாதிக்கப்படும் போது முஸ்லிம்கள் மட்டும் எதிர் வினையாற்றவில்லை. இப்படி தன்னைப் பாதிக்கும் வகையில் விஷமக் கருத்தை விதைத்த போது ஒவ்வொரு சமுதாயமும் எதிர்வினையாற்றினார்கள். அப்போதெல்லாம் கருத்துச் சுதந்திரப் போராளிகள் வாய் திறக்க மாட்டார்கள்.
நாடார் சமுதாயம், தேவர் சமுதாயம், வன்னிய சமுதாயம், தலித் சமுதாயம், நரிக்குறவர் சமுதாயம், கிறித்தவ சமுதாயம் உள்ளிட்ட பலரும் மண்டைக் கனம் கொண்ட பேனா பிடித்தவர்களால் பாதிக்கப்பட்டார்கள். அதற்காகக் கொந்தளித்தும் உள்ளனர்.
பல திரைப்படங்கள் அவர்களின் போராட்டம் காரணமாக பணிந்த வரலாறு உண்டு.
நான் எதையும் கொளுத்திப் போடுவேன் என்ற மமதை கொண்ட விரல் விட்டு எண்ணும் சிலர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கலவரம் உண்டாக்க முயல்வது கருத்து சுதந்திரத்தில் அடங்காது.
நாட்டில் உள்ள அனைவரும் ஆடை அணியாமல் நிர்வாணமாகத் திரியுங்கள் என்று ஒருவன் கருத்து சொன்னால் அது கருத்து சுதந்திரமா? அனைவரும் சின்ன வீடு வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒருவன் பிரச்சாரம் செய்தால் மானமுள்ள மக்கள் அடித்து உதைக்கத்தான் செய்வார்கள். பொது அமைதிக்கு எதிராகக் கூறப்படும் எதுவும் கருத்து சுதந்திரமாகாது. இதுதான் கருத்து சுதந்திரம் என்றால் இழுத்துப்போட்டு அடிப்பது, அடிப்பவனின் சுதந்திரம் என்று ஆகிவிடும்.
கருத்து சுதந்திரம் வேறு! கலவரம் உண்டாக்குவது வேறு! நாலு கிறுக்கன்கள் நினைத்ததையெல்லாம் எழுதுவேன்; படமாக்குவேன் என்று துணிந்தால் அது எந்த சமுதாயத்துக்கு எதிராக இருந்தாலும் அவர்களை அடக்கி வைக்க வேண்டும். நாலு பேரை விட சமுதாய நலன் முக்கியம் என்பதை உணரவேண்டும்.
குறிப்பு:
கருத்துச் சுதந்திரம் பற்றி மனநல மருத்துவர் திருநாவுக்கரசு அவர்கள் தினமணி நாளேட்டில் அளித்த இலக்கணத்தைக் கீழே தருகிறோம்
ஒரு நிகழ்வு அல்லது நபர் பற்றிய எண்ணம், அபிப்ராயம் மற்றும் மதிப்பீடு ஆகியவைகளைத் தான், கருத்து என்று சொல்கிறோம். ஒருவரைப்பற்றி எந்தவிதமான கருத்தையும் மனதில் கொள்ள, அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரம், அக்கருத்தை பகிர்ந்து கொள்ள, வெளிப்படுத்த உரிமை உண்டா என்று கேட்டால், முழு உரிமை இல்லை.
ஆனால், கருத்தை தெரிவிக்க, வெளிப்படுத்த, விமர்சிக்க, கட்டுப்பாடற்ற உரிமை இல்லை. இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்றாலும் அல்லது வேறு எந்த வகை சுதந்திரம் என்றாலும், அதற்கு எல்லையும் கட்டுப்பாடும் உண்டு.
ஒருவரது கருத்தால், உடல் பொருள் அல்லது மானம் மரியாதைக்கோ பங்கம் ஏற்பட்டால், அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல.
இதுதான் நல்லது, இதுதான் கெட்டது என்று கூறி, அதற்கான வாதங்களை எடுத்து வைத்தால், அது கருத்து சுதந்திரம் எனலாம்.
தனிப்பட்ட எந்த ஒரு கருத்தையும், தம் மனதில் வைத்துக் கொள்ள எப்படி உரிமை உள்ளதோ, அதுபோல் மாறுபட்ட கருத்தை வைத்துக் கொள்ள அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. அதேசமயம், விமர்சிக்கும்போதும், வெளிப்படுத்தும்போதும், அதனால் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த விதமான விபரீதங்களையும், சங்கடங்களையும் தனி நபருக்கோ, சமுதாயத்திற்கோ ஏற்படுத்தக் கூடாது. எனவே, கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரம் என்றுமே, யாருக்குமே கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
அதேசமயம், மாற்றங்கள் ஏற்பட, தீர்வுகள் உறுதிபட, விமர்சனங்கள் அவசியம் தேவை. எனவே பொறுப்பான கருத்துச் சுதந்திரம் அவசியம் தேவை; பொறுப்பற்ற கருத்துச் சுதந்திரம் தேவையில்லை.
- மா. திருநாவுக்கரசு,
மனநல மருத்துவர்,
மனநலம் கிளினிக், சென்னை.

SOURCE: https://www.facebook.com/ThouheedJamath/posts/1713153975370276

உறுப்பினர் அட்டை பற்றிய அறிவிப்பு , தலைமை சுற்றறிக்கை எண் :143/2017 . தேதி :24.10.2017

தலைமை சுற்றறிக்கை எண் :143/2017 .  தேதி :24.10.2017

கண்ணியத்திற்குரிய மாவட்டத் தலைவர்  &  நிர்வாகிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

உறுப்பினர் அட்டை பற்றிய அறிவிப்பு:

அஸ்ஸலாமு அலைக்கும்
உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உறுப்பினர் அட்டையில் சில மாற்றங்களைச் செய்ய உள்ளோம்.

இன்று அரசு நிறுவனங்களும், பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் தமது அடையாள அட்டைகளை QR கோடு உடன் .

அதை ஸ்கேன் செய்வதன் மூலம் உறுப்பினர் பற்றிய விபரங்களை கணிணியில் பார்த்து உறுதி செய்ய முடியும். இதில் இன்னும் பல நன்மைகள் உள்ளன.

நமது உறுப்பினர் அட்டையும் இனிமேல் QR கோடு உடன் இப்போது உள்ளதை விட சிறந்த தரத்துடனும் வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் நடைமுறையும் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒருவருக்கு ஜனவரியிலும், இன்னொருவருக்கு பிப்ரவரியிலும் இப்படி பல்வேறு மாதங்களில் உறுப்பினர் அட்டை காலாவதியாகும் நிலை உள்ளது.

தமது உறுப்பினர் அட்டை எப்போது முடிகிறது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் வைக்க முடியாத நிலை உள்ளது.

இனிமேல் அனைத்து உறுப்பினர் அட்டைகளும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும்.

உறுப்பினராக விண்ணப்பம் செய்பவர் ஜனவரி முதல் ஜூன் மாதத்துக்குள் விண்ணப்பித்தால் அந்த ஆண்டு டிசம்பர் 31 உடன் அட்டை காலாவதியாகும்.

ஜூன் மாதத்துக்குப் பின் விண்ணப்பம் செய்தால் அவர்களின் அட்டை அடுத்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி காலாவதியாகும்.

அனைவருக்கும் ஒரே நாளில் உறுப்பினர் அட்டை முடிவடைவதாக இருந்தால்  அவர்கள் அனைவரும் அல்லது பெருவாரியான மக்கள் ஒரே நாளில் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

 பல வகையில் ஜமாஅத்திற்கும் இந்நடைமுறை நன்மையாக அமையும் என்று கருதி இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது.

தற்போது உறுப்பினராக உள்ள அனைவரின் கார்டுகளும் டிசம்பருடன் காலாவதியாகும் என்பதால் பழைய உறுப்பினர்களும் உடனே புதிப்பித்து  கியூ ஆர் கோடுடன் கூடிய புதிய கார்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பழைய அட்டையை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்

Tuesday, September 26, 2017

திருக்குர்ஆன் மாநில மாநாடு குறித்து முக்கிய அறிவிப்பு!




மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்
மாநில மாநாடு குறித்து பொதுக்குழுவில்
மாநிலத் தலைவர் பீஜே அவர்களின் முக்கிய அறிவிப்பு!



Tuesday, September 19, 2017

ரோஹிங்கிய முஸ்லீம் இன படுகொலை எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்

அஸ்ஸலாமு அலைக்கும்  ரஹமத்துல்லாஹி  வ பரக்காத்தஹு ,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் (வடக்கு) மாவட்டம் பண்ருட்டி நகரம் சார்பாக 19/9/2017 இன்று நடைபெற்ற ரோஹிங்கிய முஸ்லீம் இன படுகொலைக்கு எதிராக நடந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்....

அல்ஹம்துலில்லாஹ்...! 





Sunday, September 17, 2017

ரோஹிங்யா முஸ்லீம்களை இன படுகொலை செய்யும் மியான்மர் அரசை கண்டித்து

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்...

சகோதர!  சகோதரிகளே! உங்கள்  மீது  ஏக இறைவனின்  சாந்தியும்  சமாதானமும்  உண்டாகட்டுமாக!

அல்லாஹ் நமக்கு  விட்ட கட்டளைகளை மறந்து நாம் நிம்மதியாக காலத்தை கடக்கிறோம்.

நான் கேட்கும் கேள்வி இதுதான்

1. நீங்கள்  உங்கள்  வேலையில்  விடுமுறை  எடுப்பது வாய்ப்பு  இல்லை  ஆனால்  உங்கள் வீட்டில்   ஒருவர்  இறந்து  விட்டால் ?

அப்போது  நீங்கள்  விடுமுறை  எடுக்க மாட்டீர்களா ?

உங்கள்  குழந்தைக்கு உடல் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போது  விடுமுறை  எடுக்க மாட்டீர்களா ?

ஆனால்  இதைவிட உங்கள்  கண்ணெதிரே மியான்மர்  முஸ்லிம்கள் பெண்கள்  அவர்கள்  அப்பா முன்பு அல்லது  அவர்கள்  சகோதரர்  முன்னால் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார்கள்.

இப்போது  உங்களுக்கு  இதே நிலைமை ஏற்ப்பட்டால் நீங்கள்  அமைதியாக உங்கள்  வேலையை பார்த்துக்  கொண்டு  போவீர்களா ?

2. உண்மையான  ஒரு முஸ்லிம் இது போன்ற  சம்பவங்கள் நடக்கும் போது  அவனால்  நிம்மதியாக  தூங்க  முடியாது.

3. மியான்மர்  முஸ்லிம்கள் ஆண்கள் மற்றும்  பெண்கள் தினமும்  தங்கள்  வாழ்க்கையை  ஆபத்தாகவே  கழிக்கிறார்கள்!

உங்கள்  கண்களில்  கண்ணீர்  வரவில்லையா ?

தயவுசெய்து  நீங்கள்  இறப்பதற்க்கு முன்பு அல்லாஹ்வுக்கு  அஞ்சி  நடந்து கொள்ளுங்கள்.

குறைந்த  அளவுக்கு,அல்லாஹ்விடம் கையேந்தி  அழுது  மியான்மர்  முஸ்லிம்களுக்காக துஆ செய்யுங்கள்.

அப்பாவி ரோஹிங்யா முஸ்லீம்களை  இன படுகொலை செய்யும் மியான்மர் அரசை கண்டித்து...
Image may contain: 3 people, people smiling


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

பண்ருட்டி கிளை சார்பாக

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்ஷா அல்லாஹ்...

நாள் : 19.09.2017  செவ்வாய்க்கிழமை அன்று

நேரம் : மாலை 4 : 00
மணியளவில்

இடம் : பேருந்து நிலையம் பின்புறம் பண்ருட்டி

கண்டன உரை : குல்ஜார்

அநீதிக்கு எதிராக...

அணி திரண்டு வரும்படி...

அனைவரையும் குடும்பத்துடன் ஆர்ப்பரிக்க அழைக்கிறது...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நெய்வேலி கிளை

கடலூர் வடக்கு மாவட்டம்

-JAFARDEEN

தொழுகை சட்டங்கள் PDF


Saturday, September 2, 2017

நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை 2017



அஸலாமு  அலைக்கும் ரஹமதுல்லாஹி வ பரக்காத்தஹு ,

கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக , நபிவழியில்  ஹஜ் பெருநாள் தொழுகை  நல்லமுறையில் நடைபெற்றது ,  அல்ஹம்துலில்லாஹ் !!!!




Thursday, August 24, 2017

நிரூபிக்க அழைக்கிறோம்!

கடந்த சில நாட்களாக ஒரு பெண்ணுடன் சகோதரர் பீஜே அவர்கள் தொலைபேசியில் உரையாடுவது போலவும், அந்த உரையாடலில் மார்க்கம் தடுத்த ஆபாச பேச்சுக்கள் பேசப்பட்டிருப்பது போலவும் சகோதரர் பீஜே அவர்களின் குரல் போல அந்த உரையாடல் வடிவமைக்கப்பட்டு ஏகத்துவ எதிரிகளால் அது பரப்பப்பட்டு வருகின்றது.
பொதுவாக சகோதரர் பீஜே அவர்களின் 30 ஆண்டுகால ஏகத்துவப் பிரச்சார வரலாற்றில் அவர் மீது சொல்லப்படாத அவதூறுகளே இல்லை என்னும் அளவிற்கு இதுவரைக்கும் அவதூறுகளை ஏகத்துவ எதிரிகள் பரப்பி வந்துள்ளனர்; இன்னும் பரப்பியும் வருகின்றனர்.
இதை பரப்பி வருபவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்க வருமாறு இதைப் பரப்பியவரகளை அழைக்கிறோம்.
தொலைபேசி உரையாடல் என்ற பெயரில் தான் இது பரப்பப்படுகிறது.
தொலைபேசி உரையாடல் என்றால்
எந்த நம்பரில் இருந்து போன் செய்யப்பட்டது?
அது யாருடையது?
எந்த நம்பருக்கு போன் செய்யப்பட்டது? அவர் யார்?
எந்த தேதியில் பேசப்பட்டது?
கால் ஹிஸ்டரி எனும் சம்மரி ஆதாரத்துடன்
சம்மந்தப்பட்ட பெண்ணை அழைத்து வந்து நிரூபிக்க முன் வாருங்கள்!
ஆதாரங்களை நேரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் கொண்டு வந்து சமர்ப்பித்தால் அதை உரிய வகையில் விசாரித்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமேயானால் பீஜே மீது நடவடிக்கை எடுத்து அவரை இந்த ஜமாஅத்தின் பிரச்சாரகர் உள்ளிட்ட அனைத்து நிலைகளில் இருந்தும் தூக்கி எறிய இந்த ஜமாஅத் தயாராக உள்ளது என்பதை அறிவிக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் விசாரணையை யாரும் சந்தேகிக்க தேவையில்லை.
எவ்வளவு பெரிய பொறுப்பில் யார் இருந்தாலும் அவர்கள் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஜமாஅத் துளியளவும் தயக்கம் காட்டாது.
என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவளது கையை வெட்டுவேன் என்ற நபிகளாரின் வழி வந்த தவ்ஹீத் ஜமாஅத்தில் எளியவன் - வலியவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
எனவே பீஜே அவர்கள் மீதான அவதூறை பரப்புவோர் யாராக இருந்தாலும் அதை நான் நிரூபிக்கப் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்ற உத்தரவாதத்தோடு வரக்கூடிய 03.09.17 திங்கட் கிழமைக்குள் தக்க ஆதாரங்களுடன் நான் நிரூபிக்கத்தயார் என்று சொல்லி நிரூபிக்க முன்வரட்டும்.
இதற்கு இடைப்பட்ட நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தேதியை அவர்கள் தேர்ந்தெடுத்தால் அந்த தேதிக்கு ஒரு நாளைக்கு முன்னதாக எந்த நாளில் எந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு அதற்கான ஆதாரங்களுடன் தாங்கள் வருகின்றோம் என்பதை அவர்கள் முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிப்பார்களேயானால் அந்த குறிப்பிட்ட நாளில் அவர்கள் கொண்டு வரும் ஆதாரங்களுடன், குற்றம் சுமத்தப்பட்ட சகோதரர் பீஜே அவர்களையும் நேரில் வைத்து இந்த விசாரணையை தவ்ஹீத் ஜமாஅத் நடத்த தயாராக உள்ளது.
இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டு முன் வந்தால் அந்த விசாரணைக்கு உடன்படுவதற்கு தான் தயார் என்றும், எப்படி வேண்டுமானாலும் என்னை விசாரிக்கலாம் என்றும் சகோதரர் பீஜே அவர்கள் கூறியுள்ளார்.
இந்த
குற்றச்சாட்டை நிரூபிக்க பொறுப்பேற்று தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு வருவதற்கு யாருக்கும் எந்த தயக்கமும் தேவையில்லை.
யார் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க பொறுப்பேற்று தலைமையகம் வருகின்றாரோ அவர் திரும்பி செல்லும் வரைக்கும்,
அவரது உயிருக்கும், உடமைக்கும் எந்த பாதிப்பும் வராது என்பதற்கும் இந்த அறிவிப்பின் வாயிலாகவே உறுதி கூறுகின்றோம்.
பேஸ்புக்கில் அவதூறு பரப்புவோர் இதை நிரூபிக்க பொறுப்பேற்று நேரில் வர மறுத்தால் இதிலிருந்தே இது பச்சை அவதூறு என்பதும், மிக துல்லியமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கைதேர்ந்த தொண்டை தொழிலாளிகளை வைத்து, செய்த செட்டிங் என்றும் மக்கள் அறிந்து கொள்வார்கள்.
கவுண்டவுன் ஸ்டார்ட்.
இன்னும் 10 நாட்களே உள்ளன;
இன்னும் 242 மணி நேரங்களே உள்ளன.
உங்களுக்கு துணிவிருந்தால் இந்த பகிரங்க அறைகூவலை ஏற்க முன்வாருங்கள்!
இப்படிக்கு,
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குறிப்பு
அவதூறு பரப்போவோருக்கு அறிவுப்பூர்வமாக மட்டும் பதில் கொடுங்கள். ஆபாசமாக எதிரிகள் குடும்ப பெண்களை இழிவுபடுத்தும் எந்த பதிவையும் போட வேண்டாம். இதில் ஜமாஅத்துக்கு உடன்பாடு இல்லை என்பதை கொள்கைச் சகோதரர்களுக்கு அறிவித்துக் கொள்கிறோம்

https://www.facebook.com/ThouheedJamath/posts/1651704278181913

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?


துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 / 167)
قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ ».
துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),
நூல்: முஸ்லிம் (2151)

முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிப்பதற்கு காரணமாக இருக்கும் இந்த அரஃபா நோன்பு இந்த வருடம் வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது முந்தைய ஒரு நாள் அல்லது பிந்தைய ஒரு நாள் சேர்த்து வைக்க வேண்டுமா? என்று ஐயம் பின்வரும் நபிமொழிகளை பார்க்கும் போது எழலாம்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 54)
1985- حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الأَعْمَشُ ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلاَّ يَوْمًا قَبْلَهُ ، أَوْ بَعْدَه.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்!

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),
நூல்கள் புகாரி (1985), முஸ்லிம் (2102)


صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 54)
1986- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ شُعْبَةَ (ح) وَحَدَّثَنِي مُحَمَّدٌ ، حَدَّثَنَا غُنْدَرٌ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَبِي أَيُّوبَ ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهْيَ صَائِمَةٌ فَقَالَ أَصُمْتِ أَمْسِ قَالَتْ لاَ قَالَ تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا قَالَت لاَ قَالَ فَأَفْطِرِي.

நபி (ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருந்த போது என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை! என்றேன். நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கும் இல்லை! என்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் நோன்பை முறித்துவிடு! என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்துவிட்டேன்! என்று ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்: ஜுவைரியா (ரலி), நூல்: புகாரி (1986)

இது போன்ற நபிமொழிகள் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக் கூடாது என்று அறிவிப்பது. நாமாக தேர்வு செய்து வைக்கும் உபரியான நோன்பை பற்றியதுதான். ஒருவர் உபரியான நோன்பு நோற்க நாடி வெள்ளிக்கிழமையை மட்டும் தேர்வு செய்யக்கூடாது. ஒன்று வியாழன், வெள்ளி நோன்பு நோற்க வேண்டும். அல்லது வெள்ளி,சனி நோன்பு நோற்க வேண்டும்.
நாமாக தேர்வு செய்து வைக்கும் உபரியான நோன்புக்குத்தான் இந்த தடவை பொருந்தும்.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 / 154)
وَحَدَّثَنِى أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا حُسَيْنٌ - يَعْنِى الْجُعْفِىَّ - عَنْ زَائِدَةَ عَنْ هِشَامٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه - عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِى وَلاَ تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الأَيَّامِ إِلاَّ أَنْ يَكُونَ فِى صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந் தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),
நூல் முஸ்லிம் (2103)


“தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்” என்ற நபிகளாரின் கட்டளை, நாம் தேர்வு செய்து வைக்கும் உபரியான நோன்பைத் தான் குறிக்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது. அரஃபா நோன்பு வைக்க நாம் வெள்ளிக்கிழமையை தேர்வு செய்யவில்லை. பிறை 9 வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டது. எனவே இந்த தடவை நமக்கு பொருந்தாது.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 35)
1914- حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا هِشَامٌ ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : لاَ يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ ، أَوْ يَوْمَيْنِ إِلاَّ أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாளில் நோன்பு நோற்கலாம்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),
நூல்கள் புகாரி (1914), முஸ்லிம் (1976)


இந்த நபிமொழியும் நாம் சொன்ன கருத்தையே தருகிறது.
ஒருவர் திங்கள் நோன்பு நோற்பவராக இருந்து ரமலான் ஒரு நாளுக்கு முன்பாக திங்கள் வந்துவிட்டால் இந்த நபிமொழியில் உள்ள ரமலான் ஒருநாள்,இரண்டு நாள் முன்பாக நோன்பு நோற்கக்கூடாது என்ற தடை வராது. ஏனெனில் இவராக அந்த நாளை தேர்வு செய்யவில்லை. எதார்த்தமான ரமலான் மாதத்திற்கு முந்தைய நாளாக அமைந்துவிடுகிறது. எனவே இவர் நோன்பு வைத்தால் தடையை மீறியவராகமாட்டார்.
எனவே அரஃபா நோன்பை வெள்ளிக்கிழமை மட்டும் நோற்கலாம். எந்த தடையும் இல்லை

https://www.facebook.com/ThouheedJamath/posts/1650744638277877

Thursday, August 17, 2017

துல்ஹஜ் 2017 -தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :துல்ஹஜ் மாதம்

கடந்த 24.7.17 திங்கட் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்காதா மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் ,
வரக்கூடிய 22.8.17செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
அன்று பிறை தென்பட்டால் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்காதா மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு
9952035444
9952035222
9952056444
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Tuesday, July 25, 2017

வந்தேமாதரம் கட்டாயம் - தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கண்டனம்

வந்தேமாதரம் கட்டாயம்
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கண்டனம்.
பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒருமுறையும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மாதம் ஒருமுறையும் கட்டாயமாக வந்தேமாதரம் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வந்தேமாதரத்தை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உயர்நீதிமன்றம் வந்தேமாதரத்தை தமிழிலும் மொழிபெயர்த்துப் பாடிக்கொள்ளலாம் என்றும், வந்தேமாதரத்தைப் பாட விருப்பமில்லாதவர்களை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளது.
மதநல்லிணக்கம் ஆலமரமாக வேர் விட்டுள்ள தமிழகத்தில் ஒரு மதத்தின் கடவுளை உருவகப்படுத்தியுள்ள வந்தேமாதரம் பாடலை பாடச்சொல்லி கட்டாயப்படுத்துவது மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.
விருப்பமில்லாதவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பது நடுநிலையான உத்தரவு போல் தோன்றினாலும், வந்தேமாதரம் பாடாதவர்களை தேசபற்று இல்லதவர்கள் போல் பார்க்கும் நிலை ஏற்படும்.
எனவே சமூக நீதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இப்படிக்கு,
M. முஹம்மது யூசுஃப்
பொதுச்செயலாளர்


Monday, July 17, 2017

2017 -இன்ஜினியரிங் கவுன்சிலிங் , செய்ய வேண்டியது என்ன ?

இன்ஜினியரிங் கவுன்சிலிங் , செய்ய வேண்டியது  என்ன

Source : http://wp.me/ppzkn-1jw

கவுன்சிலிங் கலந்துகொள்ளும் மாணவர்கள் , டெபாசிட் தொகையாக ரூ 5000  செலுத்த வேண்டும் , ( ST/SC/SCA வகுப்பை சார்ந்தவர்கள் [தமிழ்நாடு மட்டும்]  ரூ 1000 செலுத்தினால் போதும் ) 
பணமாகவோ அல்லது வங்கிக்காசோலையாக இருப்பின் “The Secretary, Tamil Nadu Engineering Admissions, Anna University,” payable at Chennai என்று இருக்க வேண்டும் , 17.07.2017  காசோலையாக இருத்தல் வேண்டும் .
இந்த வைப்புத்தொகை , கல்லூரி கட்டணத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும் .

வைப்புத்தொகை போக மீதமுள்ள கல்லூரி கட்டணத்தை கல்லூரியில் நேரடியாக செலுத்திவிடவும் ,
கல்லூரி மற்றும் பாடப்பிரிவு , தங்களுடைய cutoff ரேங்க் அடிப்படையில் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் , மற்றும் மீதமிருக்கும் சீட்டுகள் அடிப்படையில் , கலந்தாய்வில்   தேர்ந்து எடுத்துட்டு கொள்ளலாம் .
கல்லூரி  மற்றும் படைப்பிரிவு தேர்ந்து எடுப்பது மாணவரின் முழுப்பொறுப்பு , தேர்ந்து எடுத்த பின் மீண்டும் மாற்றுவது இயலாது என்பதனை மனதில் வைத்துக்கொண்டு , கல்லூரி  மற்றும் பாடப்பிரிவை தேர்ந்துஎடுக்கவும் .

அரசு ஆணை (Ms.) No. 160 HE (J2) Dept. dt: 22.05.2008யின்படி ஏற்கனவே கவுன்சிலிங் மூலம் M.B.B.S. / B.D.S சீட்டு  பெற்றவர்கள் , இன்ஜினியரிங் சேர விரும்பினால் ஏற்கனவே பெற சீட்டை (M.B.B.S. / B.D.S) surrender செய்ய வேண்டும் .
மறுகூட்டல் / மறு மதிப்பெண் ஆய்வு (re-totalling/revaluation) மூலம் மதிப்பெண் மாறி  இருப்பின் , கால் லெட்டரில்  பழைய மதிப்பெண் அடிப்படையில் cutoff  கொண்டு அதில் ஒரு தேதி நேரம் இருந்தாலும் ,  மாற்றப்பட்ட மதிப்பெண் cutoff அடிப்படையில் அதற்கு தகுந்தாற்போல தேதியில் நேரத்தில்  கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் .
Source : http://wp.me/ppzkn-1jw
மாணவன்/மாணவிகள்  ஏற்கனவே ஒரு கல்லூரியில் சேர்ந்து விட்ட நிலையில் , அசல் மதிப்பெண் பட்டியல் சான்று (ORIGIANL MARKSHEET ) , மற்றும் அசல் சான்றிதழ்கள்(ORIGINAL CERTIFICATES ) அந்த கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டு இருப்பின் , அந்த கல்லூரி தலைமை பொறுப்பாளரிடம்(  Head of the Institution) , உண்மை சான்றிதழ் (BONAFIDE LETTER ) , மற்றும் உங்கள் மதிப்பெண் பட்டியல் சான்று மற்றும் சான்றிதழ்களில்  அட்டெஸ்ட்(ATTEST ) செய்து வரும் பட்சத்தில் ஏற்கப்படும்.
இருப்பினும் அசல் சான்றிதகள் சமர்ப்பிக்கும் வரை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் துறைக்கான இடம் , நிறுத்துவைக்கப்படும் (உங்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது ).
தங்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங் கல்லூரி ஒதுக்கீடு உத்தரவு கிடைக்கும் வரை மாற்றுதல் சான்றிதழ் வேண்டி ஏற்கனவே படிக்கும் கல்லூரியில் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது .
சில பிரிவுவுகள் / வகுப்பை சார்ந்தவர்களுக்கு , தங்களுக்கு கவுன்சிலிங் குறிப்பிட்ட தேதியில் சீட்டுக்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதால் ,  சீட்டுக்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ள கீழ் காணும் இணையதளத்தில் https://www.tnea.ac.in எவ்வளவு சீட்டுக்கள் இருக்கின்றதை தெரிந்துகொண்டு கவுன்சிலிங் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள் .

கல்லூரி பற்றிய குறிப்பேடு [Information about Colleges] , இந்த  கையேட்டில் இருக்கும் விடயங்கள் மாறுபடலாம் எனவே கவுன்சிலிங்  மையத்தில் இருக்கும் ஒளிபரப்பு திரையை அல்லது https://www.tnea.ac.in என்ற இணையத்தை பார்த்து , கல்லூரிகள் மற்றும் இருக்கும் சீட்டுக்கள் நிலவரம் பற்றி அறிந்துகொள்ளலாம் .
Source : http://wp.me/ppzkn-1jw
தவிர்க்க முடியாத சில காரணங்களால் , மாணவர்/மனைவி கவுன்சிலிங் குறிப்பிட்ட தேதிக்கு வரமுடியாமல் போகும் பட்சத்தில் :
1. தங்களின் பெற்றோர்களை தங்கள் சார்பாக கலந்துகொள்ள மாணவ /மனைவியின்  கூடிய  அங்கீகாரம் கடிதம் கொடுத்து அனுப்பலாம். அங்கீகார கடிதத்துடன் வரும் பெற்றோர் பின் வரும் அடையாள அட்டைகள் (ஓட்டுநர்  உரிமம் , பான் அட்டை , பாஸ்போர்ட் , வாக்காளர் அட்டை ,ஆதார் அட்டை [driving license, PAN card, Passport, Voter ID, Aadhar ID]  ஒன்றேனும் எடுத்து வர வேண்டும் ,இந்நிலையில்  பெற்றோர் எடுக்கும் முடிவு மாணவர் எடுத்ததாக கருதப்படும்.
அல்லது 
2. மாணவ /மாணவி அடுத்து வரும் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொள்ளலாம் , ஆனால் கலந்துகொள்ளும் நாளில் இருக்கும் சீட்டைதான் தேர்வு செய்ய முடியும் , உங்களுடைய அசல் ரேங்க் படி சேட்டை கோர இயலாது .

அல்லது 
3. மாணவ /மனைவி  கவுன்சிலிங் உங்கள் செலவில் கலந்துகொள்ள வேண்டும் .
3. The candidate has to attend the counselling at his/her own cost.
கவுன்சிலிங்  அழைப்பு கடிதம் பார்க்க :  https://www.tnea.ac.in/tharam2017.php

Source : http://wp.me/ppzkn-1jw

Wednesday, June 28, 2017

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் என்ற பதிவை போட்டு இருந்தோம், 

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாகச் சிலர் ஆறு நோன்பு குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட்டு சில வாதங்களையும் முன்வைக்கிறார்கள். 
அந்த ஹதீஸ் இதுதான்:
 حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ ثَابِتٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ
யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி)
நூற்கள்: முஸ்லிம்திர்மிதீஅபூதாவூத்இப்னுமாஜாஅஹ்மத்,
பைஹகீயின் சுனன் ஸகீர்தப்ரானியின் முஃஜம் ஸகீர்தாரிமி இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) கூறியதாக உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் அறிவிக்கிறார்.
உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்பார் அறிவிக்கின்றார்.
ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்ற இந்த அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் விமர்சனம் செய்கின்றனர்.
ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல்இப்னு மயீன் ஆகியோர் கூறுகிறார்கள். இவர் பலமானவர் அல்ல என்று நஸாயீ கூறுகிறார். இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்கள் குறை கூறியுள்ளதாக திர்மிதீ கூறுகிறார். இவரை ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.
இப்னு அதீஅஜலீஇப்னு ஸஅத் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
பொதுவாக ஒரு அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு அபிப்பிராயங்கள் கூறப்பட்டால் குறை பற்றிய விமர்சனத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.
ஆயினும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது பற்றிய நம்பகமான வேறு அறிவிப்புகளும் உள்ளன.
அவற்றையும் கவனத்தில் கொண்டால் ஆறு நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் மற்றொரு அறிவிப்பில்வேறொரு அறிவிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ وَسَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي أَيُّوبَ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ
அபூதாவூத் 2078, நஸயீஇப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் இடம் பெற்று இந்த அறிவிப்பில்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்.
அபூ அய்யூப் அல்அன்ஸாரி கூறியதாக உமர் பின் ஸாபித் அறிவிக்கிறார்.
உமர் பின் ஸாபித் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் என்பாரும்ஸஃப்வான் பின் ஸுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
அதாவது உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து மேற்கண்ட ஹதீஸை ஸஅத் பின் ஸயீத் மட்டும் செவியுறவில்லை. அவருடன் ஸஃப்வான் என்பாரும் செவியுற்று அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் ஸைத் என்ற அறிவிப்பாளர் பலவீனமாக இருந்தாலும், அதே உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து ஸஃப்வான் பின் சுலைம் என்பாரும் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர் அல்லர் என்பதால் இது சரியான ஹதீஸாகும்.
ஸஃப்வான் பின் ஸுலைம் என்பார் நம்பகமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல்அலீ பின் மதீனீமுஹம்மத் பின் ஸஅத்அஜலீஅபூஹாத்தம் ராஸீநஸயீ மற்றும் பலர் கூறியுள்ளனர்.
உமர் பின் ஸாபிதும்அவரிடமிருந்து அறிவிக்கும் ஸஃப்வான் ஆகிய இருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் ஸஃப்வானிடமிருந்து நூலாசிரியர் அபூதாவூத் வரையுள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் தாமாஎன்ற சந்தேகம் இந்த இடத்தில் தோன்றலாம்.
ஸஃப்வான் கூறியதாக அறிவிப்பவர் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆவார்.
இவர் நம்பகமானவர்ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸாயீ கூறுகிறார். மாலிக்அஜலீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
இவர் நம்பகமானவர்சில நேரம் தவறு செய்து விடுவார் என்று இப்னு ஹிப்பான்இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகிறார்கள். (நம்பகமான பெரும்பாலான அறிவிப்பாளர் பற்றிசில நேரம் தவறு செய்து விடுவார் என்று கூறப்படுவதுண்டு)
அப்துல் அஸீஸிடமிருந்து இதை அறிவிப்பவர் நுபைலீ என்பார் ஆவார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ. இவர் நம்பகமானவர் என்று நஸாயீ கூறுகிறார். இவரை விட நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூதாவூத் கூறுகிறார். இவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்று அபூஹாத்தம் ராஸீ கூறுகிறார். தாரகுத்னீஇப்னு ஹிப்பான்இப்னு கானிவு ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர்.
இவரிடமிருந்து அபூதாவூத் கேட்டுதமது நூலில் இதைப் பதிவு செய்துள்ளனர். எனவே முஸ்லிம் நூலில் உள்ள அறிவிப்பில் குறை இருந்தாலும் அபூதாவூதில் இடம் பெற்ற அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்க தகுதியில் அமைந்துள்ளது.
மேலும் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி ஆதாரப்பூர்வமான வேறு செய்திகளும் உள்ளன.
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذِّمَارِيُّ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صِيَامُ شَهْرٍ بِعَشَرَةِ أَشْهُرٍ وَسِتَّةِ أَيَّامٍ بَعْدَهُنَّ بِشَهْرَيْنِ فَذَلِكَ تَمَامُ سَنَةٍ يَعْنِي شَهْرَ رَمَضَانَ وَسِتَّةَ أَيَّامٍ بَعْدَهُ
ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானதுஅதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி)
நூல்: தாரிமி 1690
ஸஃப்வான் வழியாக இதை அம்ர் பின் மிர்ஸத் என்பார் அறிவிக்கிறார். இவர் நம்பகமான அறிவிப்பாளர்.
அம்ர் பின் மிர்ஸத் வழியாக இதை யஹ்யா பின் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
யஹ்யா பின் ஹாரிஸ் வழியாக யஹ்யா பின் ஹம்ஸா என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
யஹ்யா பின் ஹம்ஸா வழியாக யஹ்யா பின் ஹஸ்ஸான் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.
இதே ஹதீஸ் இப்னுமாஜா 1705, அஹ்மத் 21378 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருநாள் முடிந்து மறு நாளே நோன்பை ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை நோற்க வேண்டுமாஅல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமாஎன்ற கேள்விக்கு இந்த அறிவிப்பில் விடை உள்ளது.
அதாவது எல்லா நன்மைகளும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ரமளானில் நோற்ற 30 நோன்புகளும் பத்து மாதத்திற்குச் சமமாகி விடுகின்றது. ஆறு நோன்பு அறுபது நோன்புக்குச் சமமாகி விடுகின்றது.
இதனால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஒன்றுக்குப் பத்து என்ற நன்மையை அடைவது தான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்வாலில் எந்த ஆறு நாட்களில் நோற்றாலும் இந்த நன்மை கிடைத்து விடும்.

மீள் பதிவு :http://onlinepj.com/aayvukal/aru_nonbu_atharamatratha/#.WVNnWmiGNPY

குறிப்பு : 
பெருநாளைக்கு மறுநாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்க வேண்டும் எனும் போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அந்த நன்மையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.