News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Thursday, December 22, 2016

மாநில தலைமையின் அறிவிப்பு!

மக்கா பள்ளியின் இமாமாக இருந்த சம்சுத்தீன் காசிமி அப்பள்ளி நிர்வாகத்தால் நீக்கப்பட்டு வேறொரு இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை இரு தரப்பும் சொல்லவில்லை. எனவே அவரது நீக்கம் குறித்து பலவாறாக சொல்லப்படுவதை பரப்ப வேண்டாம். நமது இலக்கிலிருந்து நம்மை திசை திருப்பும் இது போன்ற வேலைகளில் ஈடுபடாமல் ஆக்கப் பூர்வமான பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சம்சுத்தீன் காசிமியின் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டு உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும் நாம் சொல்வது சத்தியம் என்பதை நிரூபிக்க அதை ஆதரமாக ஆக்கக் கூடாது. நாம் சொல்லும் கொள்கை குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டது என்பதை வைத்துத்தான் நமது பிரச்சாரம் அமைய வேண்டும். அவரது நடத்தை சரி இல்லை என்பது நமது கொள்கை சரி என்பதைக் காட்ட உதவாது.

நம் ஜமாஅத் மீது அவர் அவதூறு சொன்ன போது அதற்கு பதிலளிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால் அவரது குற்றச் சாட்டை மறுப்பதுடன் அவரது தகுதியையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். அது போன்ற தேவை எதுவும் இப்போது இல்லாததால் அவரைப் பற்றிய தனிப்பட்ட விஷயத்தை ஆதாரமின்றி பரப்ப வேண்டாம் என்று அன்புடன் கொள்கைச் சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

மு.முஹம்மது யூசுஃப்

பொதுச் செயலாளர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Monday, December 12, 2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரிடர் உதவி எண்கள்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரிடர் உதவி எண்கள்:*
TNTJ பொதுச் செயலாளர்
முஹம்மது யூசுப்
9952035222
TNTJ தலைமை நிலைய செயலாளர் எக்மோர் சாதிக் 9677171391
TNTJ செயலாளர் குழு:
எம்.எஸ்.சுலைமான் 9952035444
சிராஜுதீன் 9789027757
ஆவடி இப்ராஹீம் 9003167714
திருவாரூர் அப்துர்ரஹ்மான் 9789030302
மயிலை அப்துர்ரஹீம் 9940659299
இ.முஹம்மது 9600556685
நெல்லை சையது அலி 9003167713
நெல்லை யூசுப் அலி 9952046555
சேப்பாக்கம் அப்துல்லாஹ் 9952056111
இ.ஃபாரூக் 9952056444
TNTJ வட தமிழக மாவட்ட நிர்வாகிகள் :
வட சென்னை
அன்சாரி 9566137765
சுல்தான் 9884132651
ரஃபீக் 9840271828
தென் சென்னை
சித்தீக் – 7708067162
அலாவுத்தீன் – 7708067163
ராசிக் அலி – 7708067164
கடலூர் தெற்கு
முஹம்மது ஆதம் 9788083569
தமீஸீதீன் 9894583913
ஜமீல் நசீர் 9600578603
கடலூர் வடக்கு
முஹம்மது கவுஸ் 9790583337
சர்புதீன் 9994218285
முஹம்மது சலீம் 9443046580
கிருஷ்ணகிரி
பொறுப்பாளர்கள்
அபுதாஹிர் 8110988704
சித்தீக் 8110988702
சர்தார் 9488921747
லியாகத் பாஷா 8110988703
சிராஜ் 9003450040
தர்மபுரி
சமியுல்லாஹ் 9042729693
ரிஸ்வான் 9600749498
சுலைமான் 9095783529

தொண்டரணியினருக்கு மாநிலத் தலைமையின் அன்பான வேண்டுகோள்

தயார் நிலையில் இருங்கள்!!! தொண்டரணியினருக்கு மாநிலத் தலைமையின் அன்பான வேண்டுகோள்.
அன்பான கொள்கைச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.மழை என்பது எல்லாம்வல்ல இறைவனின் அருட்கொடை.எனினும் அதிலும் பல சோதனைகளை உண்டாக்கி, அதன் மூலம் நமக்குப் படிப்பினைகளையும், நன்மைகளையும் அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.இதை சென்ற ஆண்டு சென்னை,கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட, புயலும் மழையும் நமக்கு உணர்த்தின.
இதனிடையே சிலதினங்களுக்கு முன்பு ‘வர்தா’ புயல் உருவானது.இது அதி தீவிரப் புயலாக மாறி சென்னை,காஞ்சிபுரம்,புதுவை,திருவள்ளூர்,கடலூர் ஆகிய பகுதிகளைத் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக,வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனவே நமது ஜமாத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருக்கவும்.
அவ்வாறு தங்கள் பகுதியில்,புயல் மற்றும் மழையால் பெரும் சேதங்கள் ஏற்படுமானால்; தொண்டரணியினர் உடனடியாகக் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசுப்
மாநிலப் பொதுச் செயலாளர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
ஊடகத் தொடர்பு. 9789030302