News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Wednesday, September 7, 2016

முக்கிய அறிவிப்பு


முக்கிய அறிவிப்பு :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய ஆய்வு முடிவு என்ற பெயரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் தொலைபேசி எண்களுடன் ஒரு பொய்யான செய்தியை வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ் புக் வாயிலாக சில குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர்.

திருக்குர்ஆன் வசனங்களில் இடைச்செருகல்கள் இருக்கின்றதா என தவ்ஹீத் ஜமாஅத் ஆய்வு செய்து வருவதாக அந்த அவதூறு செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும்
ஹஜ் கடமைகளில் ஷைத்தானுக்கு கல் எறியக்கூடாது;
ஸஃபா மர்வா தொங்கோட்டம் ஓடக்கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததாக பரப்பப்படும் அந்த பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.

தவ்ஹீத் ஜமாஅத் தின் பெயரில் ஏதேனும் அறிவிப்புக்கள் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்தால் 
நமது அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பக்கமான 
www.facebook.com/ThouheedJamath/ என்ற முகவரியிலோ

அல்லது
www.Onlinepj.com என்ற நமது இணையதளத்திலோ

அல்லது
tntj.net என்ற நமது இணையதளத்திலோ சென்று பார்த்து அது நம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தானா என்பதை உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இவண்,
மாநில தலைமையகம்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பெருநாள்_தின_சிறப்புச்சலுகை உணர்வு மற்றும் ஏகத்துவம்

உணர்வு மற்றும் ஏகத்துவம் இரண்டு இதழ்களும் இணைந்த ஆண்டுச் சந்தா சலுகை விலையில் ரூ.600. மட்டுமே.
Image result for unarvu
Image result for egathuvam
உணர்வு முகவர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் திடல் தொழுகையில் ஸ்டால் அமைத்து, புதிய சந்தாக்கள் பிடித்தல், பழைய சந்தாக்களை புதுபித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நமது ஜமாஅத்தின் இதழ்களை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு
மாநில தலைமையகம்

Tuesday, September 6, 2016

2016 ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்திற்க்கு....

ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்திற்க்கு....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்!
இஸ்லாத்தின் கடைமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றிட எப்படியாவது மக்கா என்னும் புனிதத் தலம் சென்றுவிட வேண்டும் என்று எண்ணுவோரை மையப்படுத்தி இயன்றவரை கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன சில டிராவல்ஸ் நிறுவனங்கள்.


கடைசி நேரத்தில் இந்த வருடம் உங்களுக்குப் பயணம் கிடையாது என்று கை விரிப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பின்னர் பணத்தைத் திருப்பித்தர இழுத்தடிப்பது அடுத்த கட்டமாகும்.
இந்த விவகாரத்தில் பயணத்திற்கான விசாவிலும் குளறுபடி செய்யப்படுகிறது என்று இப்போது வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
டூரிஸ்ட் விசா போன்று ஏதோ ஒரு விசாவில் ஹஜ் பயணிகளை அனுப்பி வைத்து, சவூதியில் அவர்களைத் திண்டாட வைத்துவிடுகின்றன சில மோசடி நிறுவனங்கள்.
எனவே இவர்களால் வழங்கப்படும் விசாவானது ஹஜ் பயணத்திற்கான விசாதானா என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் பயணிக்கவும்.
வேறு வகையான விசா பெற்று பயணிப்பது கடும் சிரமத்தையும் பல சட்ட சிக்கல்களையும் உருவாக்கும் என்பதை மனதில் நிறுத்தி, எச்சரிக்கையுடன் செயல்பட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
முறையாக மத்திய அரசிடம் பதிவு செய்துள்ள நிறுவனமா என்று ஆய்வு செய்து பின்னர் முறையான விசாதானா என்பதையும் ஆராய்ந்து பயணம் மேற்கொள்வதே ஹஜ் செய்யவிருப்போருக்கு பாதுகாப்பாகும்.
எனவே மோசடி நிறுவனங்களைக் கண்டறிந்து, எச்சரிக்கையாக இருக்கும்படி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு;

எம். முகம்மது யூசுஃப்
(பொதுச் செயலாளர்)