News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, January 31, 2015

பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?

இவ்வசனங்களில் (24:31, 33:59) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆடை ஒழுங்குகள் பற்றி கூறப்படுகிறது.
பெண்கள் தமது உடல் அழகில் மணிக்கட்டு வரை முன்கைகள், முகம் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.
இஸ்லாமிய வழக்கில் இது "ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் "பர்தா' "புர்கா' "துப்பட்டி' என்றும் இது குறிப்பிடப்படுகின்றது.
ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது! என்று சிலர் கூறுகின்றனர்.
ஹிஜாப் என்பது உண்மையில் பெண்களைக் கவுரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.