News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்
Showing posts with label பள்ளிவாசல். Show all posts
Showing posts with label பள்ளிவாசல். Show all posts

Sunday, May 1, 2016

ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் 01/05/2016 ஞாயிறு


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹஅமதுல்லஹி வ பரகாத்தஹு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் 01/05/2016 ஞாயிறு அன்று நடைபெற்றது .......


உரை : சகோ. முகமது ஜலால்


தலைப்பு : கோடை விடுமுறையில் பெற்றோர்கள் பேண வேண்டியவை




 



நாற்பதுக்கும் மேற்பட்டஆண்கள்மற்றும்பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.................

Saturday, February 21, 2015

ஹதீஸ் தப்சீர்

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி  வ பாரகாதஹு ,

எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் , வாரந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக , தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் , கடந்த வெள்ளிகிழமை (20 பிப்ரவரி 2015 ) அன்று , இஷா தொழுகைக்கு பிறகு , ஹதீஸ் தப்சீர் நடைபெற்றது .

கணிசமான சகோதரர்கள்  பங்கெடுத்து பயன்பெற்றார்கள் , அல்ஹம்து லில்லாஹ் .

புகைப்படத்துடன் செய்தி அனுப்பியவர் : சகோதரர் முஹம்மது அலி ஜின்னா .

Thursday, August 7, 2014

பெண்களை பள்ளிக்கு நபி(ஸல்) அனுமதித்தார்கள்

நபி அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி
உமர்(ரலி) அவர்களின் மனைவி (ஆதிகா) சுபுஹ் தொழுகைக்கும், இஷா தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்திலே கலந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (உங்கள் கணவர்) உமர் அவர்கள் இதை விரும்பமாட்டார். இன்னும் ரோஷப்படுவார் என்று அறிந்திருந்தும் எதற்காக நீங்கள் வெளியேறி (மஸ்ஜிதுக்கு) வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (இதுவரை என்னை அவர் தடுக்கவில்லையே) என்னை மஸ்ஜிதுக்கு வராமல் தடுப்பதை விட்டும் அவரை எது தடுத்தது என்று வினவினார்கள். அதற்கு (அவர்களின் மகன் அப்துல்லாஹ்) இப்னு உமர் அவர்கள் அல்லாஹ்வினுடைய பெண் அடிமைகளை அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுக்காதீர்கள் என்ற நபியின் சொல்தான் அவர்களை தடுத்துள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி