News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, December 19, 2015

யார் இவர்கள் ? யார் இந்த தௌஹீது முஸ்லிம் தோழர்கள்? மழை வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உயிரையும் குடுத்து , ஏன் காப்பாற்ற வேண்டும் ? இவர்களுக்கு என்ன லாபம்?


சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்ட முதல் நாளிலிருந்தே மக்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். அந்த அமைப்பின் 3000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் களத்தில் ...

யார்  இவர்கள் ?  இந்த தௌஹீது முஸ்லிம் தோழர்கள் , இவர்களுக்கு என்ன லாபம்? 

மழை வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உயிரையும்  குடுத்து , ஏன்  காப்பாற்ற வேண்டும் ?

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை  இவர்கள் எதற்கு செய்ய வேண்டும்.?



அரசியல்வாதி உதவி செய்தால், ஓட்டுகளை கவர வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும், அரசியல்வாதி நோக்கம்  ஓட்டு .

இவர்களிடம் ,ஒட்டு போடுறோம் , எங்கள் ஒட்டு உங்களுக்கு தான் என்று சொன்னால் ,  
TNTJ பனியன் போட்ட பாய்மார்கள் ... அவசரமாக .....அப்படி பேசாதீர்கள், நாங்கள் எந்த தேர்தலிலும் எந்த பதவிக்கும் நிற்க மாட்டோம் என்கிறார்கள் .... 



சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி,  (இல்லை இல்லை.... உதவி என்று சிறிய வார்த்தையால் சுருக்கிவிட முடியாது  ..) 

  • சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் சிக்கி சிதைந்து போனது மக்களின் வாழ்க்கை. யாரிடம் போய் உதவி கேட்பது என்று கூட தெரியாமல் மக்கள் கலங்கிப் போய் தவித்தனர். எந்த "இயந்திரமும்" தங்களுக்காக ஓடி வராத நிலையில்,இந்த அமைப்பினர் ஆங்காங்கே சமையல் பாத்திரங்களை வைத்து மொத்தமாக சமைத்து வண்டிகளில் வைத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் தெருத் தெருவாக சென்று வீடு வீடாக பாக்கெட் உணவைக் கொடுத்து வந்தனர். தண்ணீர் பாட்டில், அடிப்படை மருந்துகள், பிஸ்கட் போன்றவற்றையும் கொடுத்தனர்.
  • பசியாலும் தாகத்தாலும் சிக்கி தவித்தவர்களுக்கு , உண்ண உணவு, நல்ல நீர் , குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் பெண்களுக்கு தேவையான  உபகரணங்கள் , அனைத்தும் ராணுவம் வரதயங்கிய இடங்களுகேல்லாம் நீந்தி வந்து கொடுத்துவிட்டு சென்றார்கள் 
  • இறந்த பாட்டியின் உடல் ,வீட்டில் துர்நாற்றம் ,  கழுத்தளவு தண்ணீர்.. உதவிக்கு வராத கவுன்சிலர் ,தகவல் அறிந்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் விரைந்து வந்து பாட்டி உடலை மீட்டு அடக்கம் செய்துள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட ஜமாத்தின் நிர்வாகி அப்துல் ரஹ்மான் கூறுகையில், அந்தப் பகுதி முழுவதும் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்திருந்ததால் உடலை மாடியில் இருந்து இறக்க முடியவில்லை. இதனால் வீட்டில் துர்வாடை வீசியது. அந்த உடலோடு உறவினர்கள் பரிதவித்து நின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர், போலீஸ் என யாருமே உதவவில்லை. ஃபிரிசர் பாக்ஸைக்கூட அங்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்து உடலைத் துணியால் சுற்றி வெளியே கொண்டு வந்து நல்லடக்கம் செய்தோம் என்றார்.
  • மீட்டவர்களை தங்கள் பள்ளிவாசல்களிலும், அலுவலகங்களிலும் தங்க வைத்து , உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை குடுத்து உதவினார்கள் 
  • பள்ளிவாசல்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்தனர்.அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்து என சகலமும் செய்து தந்துள்ளனர் இஸ்லாமியர்கள். வேளச்சேரி பள்ளிவாசலில் தங்கியிருந்த மக்களை தொந்தரவு செய்யாமல் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை, சாலையில் வைத்து நடத்தியுள்ளனர்.
  • மழை வெள்ளம் நீர் வடிய தொடங்கி உடன் , மழை வெள்ளத்தால் சேர்ந்த குப்பைகள் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விடுமென அஞ்சி , எங்கள் உள்ள குப்பை கழிவுகளை எல்லாம் முகம் சுளிக்காமல், அசராமல்  ( அவர்களின் உடல் நலம் கேட்டு விடுமே என்ற பயம் இல்லாமல்)  அனைத்து கழிவுகளையும் அகற்றி சீர்பாடுதினார்கள் ....
  • பல பகுதிகளில் சேறும் சகதியுமாக இருந்ததைப் பார்த்த அவர்கள் சொந்த செலவில் ஜேசிபியை வரவழைத்து அவர்களே முன்னின்று குப்பைகளையும், சேறு சகதிகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
  • ஆனால் ஜேசிபி வாகனம் வர முடியாத பகுதிகளில் அவர்களே கையில் பாலிதீன் பைகளை மாட்டிக் கொண்டு சேறு, சகதியை அள்ளி அங்குள்ள மக்களை நெகிழ வைத்தனர். இவர்களைப் பார்த்து அப்பகுதி மக்களும் தெருக்களை சுத்தப்படுத்தும் பணியில் குதித்தனர்.
  • கோட்டூர்புரம் பகுதியில் ஒரு கோவிலைச் சுற்றிலும் சேர்நது கிடந்த சேறு சகதியை ஒரு முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் படை சேர்ந்து சுத்தப்படுத்திய செயல் அனைவரையும் நெகிழ வைத்தது......
  • 5. அடுத்த கட்டமாக , மருத்துவ முகாம்களையும் அமைத்து மருத்துவம் பார்த்து கொண்டிருகின்றார்கள்...
இவர்களெல்லாம் யார் பெத்த பிள்ளைகளோ .... தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து  இங்கு வந்து இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை , கொஞ்சமும் அசராமல் தேவையான நேரத்தில் தேவையான உதவிகளை , அடுக்கடுக்காக செய்து கொண்டிருகின்றார்களே !!!!

இதுவரை 347 உயிர் இழப்பு ஏற்படுத்திய மழைவெள்ளம் , 
இந்த மழையில் பாய்மார்கள் வராவிட்டால் அப்பப்பா , நினைத்து பார்க்க முடியவில்லை .... 
இவர்கள் வந்திருக்காவிட்டால் மேலும் எதனை மேலும்  உயிர்பலி ... இறைவன் தான் இவர்களை அனுப்பி வைத்து இருகின்றான் .


சரி , சுகாதார சீர்கேடு  ஏற்பட கூடாது என்று இவர்கள்  மழை விட்டு சென்ற கழிவுகளையும் , மனித கழிவுகளையும் அகற்றாமல் இருந்திருந்தால்  , நோய் தாக்கி எத்தனை பேரழிவு ஏற்பட்டிருக்கும் .

இந்த பேரழிவிலிருந்தும் காக்க, இவர்கள் , அருவருக்க நாற்றம் தாங்கமுடியாத , கழிவுகளை ,  இஸ்லாமியர்கள் , குறிப்பாக தௌஹீது  ஜமாஅத் சகோதரர்கள் தங்கள் உயரை பணயம் வைத்து  கழிவுகளை அகற்றி , சுத்தபடுத்தி ப்லீசிங்  பவுடர் தெளித்து, 

மருத்துவ முகாம்களையும் நடத்தி , அப்பப்பா ...........   


எதற்காக செய்கிறார்கள்...

உதவி பெறுபவர்களில் பணக்காரன் ஏழை என்று வித்தியாசம் இல்லை , 
பணம் கொடுத்தாலும் வாங்க மாறுகின்றார்கள் , பின் எதற்காக அனைத்தையும் செய்கிறார்கள் ?


அதை தவ்ஹீத்  சகோதர்கள் , எவரிடம் கேட்டாலும் , 
அனைவரும் சொல்லும் ஒரே பதில் ....



இஸ்லாதில் , எங்களின் வழிகாட்டி முஹம்மது நபி சல்லாஹு வலைவசல்லாம் , அவைகள் எங்களுக்கு கற்று தந்த வழிமுறை தான் .... 
         ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவர் 
-அல்குரான் 5:32

இந்த போதனையின் படி தான், இஸ்லாமியர்கள் அனைத்து உதவிகளையும் செய்தோம்.


ஒன்று  மட்டும் புரிந்தது .....

இவர்களை தவறாக புரிந்து (பத்திரிக்கைகள் இவர்களை தவறாக சித்தரித்து ), வைத்துருந்த விசயத்துக்காக வருந்துகிறோம் ....

ஒற்றுமை என்றால் என்ன மனித நேயம் என்றால் என்ன என்று புரிய வைத்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு , நன்றி என்று ஒரு வார்த்தையில் நிறுத்திவிட முடியாது  , 

இனிமேலும் ஒற்றுமையை சீர்குலைக்க இந்துத்துவா சக்திகள்  முயற்சி செய்தாலும் , மண்ணை கவ்வ வைப்போம்.  

நன்றி : தன்  பெயரை வெளியிட விரும்பாத ஒரு முதியவர்.

வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் இப்படி மதம் பாராமல் முகம் பாராமல், மனிதத்தை மட்டுமே பார்த்து செய்த உதவிகளைப் பார்த்து வெள்ளமே கூட வெட்கப்பட்டுப் போயிருக்கக் கூடும். இந்த மனிதம் மேலும் மேலும் வலுப்பெற வேண்டும், என்றென்றும் தழைத்தோங்க வேண்டும்.

Wednesday, December 16, 2015

தவ்ஹீத் ஜமாஅத்தின் வெள்ளநிவாரணப்பணிகள் , பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட செய்திகள்..!

தவ்ஹீத் ஜமாஅத்தின் வெள்ளநிவாரணப்பணிகள் குறித்து பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட செய்திகள்..!





தவ்ஹீத் ஜமாஅத்தின் வெள்ளநிவாரணப்பணிகள், மக்கள் மனதில் எழுந்த கேள்வி

தவ்ஹீத் ஜமாஅத்தின் வெள்ளநிவாரணப்பணிகள் குறித்து  மக்கள் மனதில் எழுந்த கேட்கப்பட்ட கேள்விக்கான விடை 



Monday, July 13, 2015

ரமலான் மாத இரவுத் தொழுகை(12/07 2015)

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி  வ பாரகாதஹு ,

எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் ,, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் ,12/07 2015 ஞாயிற்று கிழமை அன்று , 



ரமலான் மாத கடைசி பத்து இரவுத் தொழுகையில்  இடையில் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு என்ற தலைப்பில்;  இப்றாஹிம் ஃபிர்தௌஸி பான் செய்தார் ,
 இதில் ஏராளமானோர் பங்கெடுத்து பயன் பெற்றனர் , அல்ஹம்துளில்லாஹ் ,


அன்றே 
இரண்டாவது அமர்வில் நரகத்தின் வேதனை பற்ற விளக்கப்படத்துடன் புரொஜக்டர் மூலமாக மக்களுக்கு விளக்கப்பட்டது 

எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள்

எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள் :

மக்களை நன்மையின் பக்கம் அழைபதர்காக எதை செய்தாலும் சரிதான் என்ற நோக்கில் தான் அந்த பெரியார் அப்படி செய்தார் இந்த பெரியார் இப்படி செய்தார் என கதைகளை எழுதி வைத்தனர்... அனால் அவை மனிதன் வார்த்தைகள் என்பதால் முன்னுக்குபின் முரணாகி அல்லாஹ்வை மட்டும் தான் வணங்கவேண்டும் என்பது உடைந்து பெரியார்களை வணங்கலாம் என்றுமாரி தர்ஹாக்களுமாக அவுளியாக்களுமாக சுற்றித்திரிகிறது...

மக்கள் தொழவேண்டும் என்பதற்காக அந்த பெரியார் அவ்வளவு நேரம் தொழுதார் இப்படியெல்லாம் தொழுதார் என கதைகள் சொல்ல ஆரம்பம் செய்ததுதான் ...

அந்த பெரியார்களை அவுளியாக்களுமாக ஆக்கி பின் கடவுளாகவும் சித்தரிக்க செய்து பெரும் பாவத்தை மக்களை செய்ய வைத்தது... எனவே ஒருவர் நன்மைசெய்யவேண்டும் என நீங்கள் யாரேனும் நினைத்தால் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய உண்மைகளை (ஹதீஸ்) மட்டும் கூறி இஸ்லாத்தின் பக்கம் அழையுங்கள்...தேவையற்ற கட்டுகதைகளை அல்லாஹ்வின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் முஹம்மது (ஸல்) அவர்கள் பெயராலும் இட்டுகட்டாதீர்கள்...

நீங்கள் உண்மையாகவே முஹம்மது (ஸல் ) அவர்களை நேசிப்பதாக இருந்தால் அவர்களின் தெளிவான போதனைகளை மட்டும் மற்றவருக்கு எடுத்து சொல்லுங்கள்...ஏனென்றால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் கடைசி தூதர் ,அவர்களுக்கு பின் வந்த இமாம்களோ பெரியார்களோ அல்ல (சஹாபாக்கள் கூட இல்லை),  எனவே நாம் பின்பற்ற வேண்டியது நமது இறுதி தூதர் நபிகள் நாயகம் சல்லாஹு வலைவசல்லாம் அவர்கனின் அவர்கள் கூறிய உண்மைகளை (ஹதீஸ்) மட்டும் தான்.

Saturday, June 6, 2015

குர்ஆனில் யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன, மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். 
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலாம் என்ற மீன்தான்.
கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு. இத்திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
நாக்கில் மட்டும் ஐம்பது பேர் அமர முடியும் என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும்.
மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன. ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான். இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீங்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

onlinepj 

Friday, June 5, 2015

பாக்கியம் நிறைந்த இரவு, பராஅத் இரவு எது?

திருக்குர்ஆனைப் பாக்கியம் நிறைந்த இரவில் அருளியதாக இவ்வசனம் (44:3) கூறுகிறது. பாக்கியம் பொருந்திய இரவு எதுவென்பதை வேறு சில வசனங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆன் ரமலான் மாதத்தில் அருளப்பட்டது என்று 2:185 வசனம் கூறுகிறது. 
இந்தப் பாக்கியம் பொருந்திய இரவு ரமலானில் தான் இருக்கிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.
ரமலானில் 'லைலத்துல் கத்ர்' இரவில் திருக்குர்ஆனை அருளினோம் என்று 97:1 வசனம் கூறுகிறது.
44:3 வசனத்தில் பாக்கியமிக்க இரவு என்று சொல்லப்படுவதும், 97:1 வசனத்தில் மகத்துவமிக்க இரவு (லைலதுல் கத்ர்) என்று சொல்லப்படுவதும் ஒரே இரவைத்தான் குறிக்கின்றன என்பது உறுதியாகின்றது.
44:3 வசனத்தில் பாக்கியமிக்க இரவு என்று சொல்லப்படுவது ஷாபான் மாதத்தின் 15வது இரவைக் குறிக்கிறது என சிலர் வாதிடுகிறார்கள். இதற்கு குர்ஆனிலோ, ஏற்கத்தக்க நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆன் ஷாபான் மாதத்தின் 15வது இரவில் அருளப்பட்டது என்று கூறுவது, ரமலானில் தான் அருளப்பட்டது என்ற இறைவனின் கூற்றுக்கு எதிரானது.
இந்த வசனத்தைத் தவறாக விளங்கிக் கொண்டதால் தான் 'பராஅத்' என்று ஒரு இரவை சில முஸ்லிம்கள் தாமாக உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
'பராஅத் இரவு' என்ற சொல் திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலோ பயன்படுத்தப்படவே இல்லை. இல்லாத ஒரு இரவைக் கற்பனை செய்து, அல்லாஹ்வின் வசனத்திற்குப் பொருத்தமற்ற விளக்கம் கொடுத்து அந்த நாளுக்கென்று சில சடங்குகளை உருவாக்கி, அறியாத முஸ்லிம்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஷாபான் மாதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாக நம்புவது, ரமலானில் அருளப்பட்டது என்ற குர்ஆனின் கூற்றுக்கு எதிரானது என்பதை அவர்கள் விளங்க வேண்டும்.
அவர்கள் தங்களின் தவறான கருத்துக்கு மற்றொரு விளக்கத்தையும் தருகிறார்கள். அதாவது, பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு திருக்குர்ஆன் அருளப்பட்டது பராஅத் இரவு, அங்கிருந்து சிறிது சிறிதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது லைலதுல் கத்ர் இரவு எனக் கூறுகிறார்கள். இதற்கு ஏற்கத்தக்க ஹதீஸ்களில் எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆன் ஒரே இரவில் அருளப்பட்டதா என்பதை அறிய 447வது குறிப்பைக் காண்க!

Saturday, May 2, 2015

தெருமுனை பிரசாரம் - பண்ருட்டி கிளையில்(28/04/2015)

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி  வ பாரகாதஹு ,

எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் ,, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் ,  செவ்வாய்  கிழமை அன்று  மாலை (28/04/2015) தெருமுனை பிரசாரம் நடை பெற்றது .

சகோதரர் , கடலூர் மாவட்ட பேச்சாளர் அப்துல்சலாம் பிரசாரம் செய்தார்.







Thursday, March 26, 2015

வருமுன் உரைத்த இஸ்லாம் - பகுதி 14

நிறைவு பகுதியாக , 

16 ஸம்ஸம் கிணறு பற்றிய முன்னறிவிப்பு

மக்காவில் ஸம்ஸம் என்ற கிணறு உள்ளது. ஆண்டு முழுவதும் மக்காவாசிகளும், புனிதப் பயணம் செய்வோரும் இந்தத் தண்ணீரைத் தான் பயன்படுத்துகின்றனர்.
ஹஜ் காலத்திலும், புனித ரமளான் மாதத்திலும் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குழுமி இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர்.
பாலைவனத்தில் நிலத்தடி நீர் போதுமான அளவில் இருக்காது. இத்தகைய பாலைவனத்தில் உள்ள ஒரு கிணறு பல ஆயிரம் ஆண்டுகள் வற்றாத நீரூற்றாகவும் எத்தனை இலட்சம் மக்கள் குழுமினாலும் அவர்களின் தேவையை நிறைவு செய்வதாகவும் அமைந்துள்ளது. இது எப்படிச் சத்தியம் உலகமே அதிசயிக்கும் இந்தக் கிணறு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். இக்கிணறு உருவான வரலாற்றையும் அவர்கள் விளக்குகிறார்கள்.


இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது மனைவி ஹாஜர் அவர்களையும் குழந்தை இஸ்மாயீலையும் இப்போது மக்கா நகரம் அமைந்துள்ள இடத்தில் விட்டுச் சென்றார்கள். அப்போது யாரும் குடியிருக்காத பாலை நிலமாக அது இருந்தது. குழந்தை இஸ்மாயீல் தாகத்தால் துடித்த போது ஜிப்ரீல் எனும் வானவரை இறைவன் அனுப்பி அவர் மூலம் நீரூற்றை வெளிப்படுத்தினான். ஹாஜர் அவர்கள் அந்தத் தண்ணீரை ஓடவிடாமல் தடுப்பு ஏற்படுத்தினார்கள். அவர்கள் அவ்வாறு செய்திருக்காவிட்டால் அது வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 3364

அந்தக் கிணறு இறைவன் கட்டளைப்படி உருவாக்கப்பட்டது என்பதையும் வற்றாத நதியாக ஓடும் அளவுக்கு அதன் நீரோட்டம் அமைந்துள்ளது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததற்கு ஏற்ப இன்று வரை இலட்சக்கணக்கான மக்களுக்கு தினசரி தண்ணீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர் தண்ணீர் வழங்கிகொண்டிருகின்றது, சுபஹானல்லாஹ் .

17 தனது எஜமானியைத் தானே பெற்றெடுக்கும் பெண்கள் பற்றிய முன்னறிவிப்புகள்

யுக முடிவு நாள் நெருங்கும் போது ஏற்படும் மாற்றங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல முன்னறிவிப்புகளைச் செய்துள்ளனர். அவற்றுள் முக்கியமான அடையாளங்களைத் தனி நுலாக ஏற்கனவே நாம் வெளியிட்டுள்ளோம்.
ஒரு பெண் தனது எஜமானியைத் பெற்றெருப்பாள் என்பதும் அவற்றுள் ஒன்றாகும்.
நூல் : புகாரி 4777
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்பதன் கருத்து என்ன?
பொதுவாகப் பெண்கள் தங்கள் முதுமையில் தங்கள் புதல்வர்களால் கவனிக்கப்படுபவார்கள். இது தான் ஆரம்ப முதல் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் பெற்ற தாயைக் கவனிப்பாரற்று விடும் ஆண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து அவள் வீட்டில் அடைக்கலமாவது அதிகரித்து வருகிறது.
அந்த வீட்டின் எஜமானியாக மகள் இருப்பாள்; அந்த எஜமானியின் கீழ் அவளைப் பெற்ற தாய் அண்டி வாழும் நிலை ஏற்படுகிறது.
பெற்ற தாயை ஆண்பிள்ளைகள் கவனிக்க மாட்டார்கள். பெண் பிள்ளைகள் தான் அவர்களைச் சுமப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிய இந்தச் சீரழிவு இன்று அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

18 ஆடு மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவர்

கறுப்பு ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவார்கள்
நூல் : புகாரி 50,

ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயர்ந்த கட்டடங்களை எழுப்புவார்கள்
நூல் : முஸ்லிம் 9
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உயரமான கட்டடங்களைக் கட்டுவது எளிதானதாக இருக்கவில்லை. அரசாங்கம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்ற அளவுக்கு இது சிரமமானதாக இருந்தது.
இந்த நிலை மாறும்; சர்வ சாதாரணமாக உயரமான கட்டடங்கள் கட்டும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்படும் என்ற கருத்து மேற்கண்ட சொற்றொடரில் அடங்கியுள்ளது. இதற்கேற்ப எளிதாக உயரமான கட்டடங்களைக் கட்டும் தொழில் நுட்பம் இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஏழைகள் தீடீர் பணக்காரர்களாக ஆவதற்கான வழிகள் கடந்த காலங்களில் இல்லை. இன்றோ புதிய வகையான தொழில் முறைகளால் அடித்தட்டு மக்கள் கூட திடீரென்று வசதி மக்கவர்களாக ஆக முடிகின்றது.
இந்த இரண்டு மாறுதலையும் மேற்கண்ட சொற்கள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.

19 ஆடை அணிந்தும் நிர்வாணம்

'எதிர் காலத்தில் இரண்டு சாரார் தோன்றுவார்கள். இவர்களை இன்னும் நான் காணவில்லை. ஒரு சாரார் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகளை வைத்துக் கொண்டு மக்களைச் சித்திரவதை செய்வார்கள். இன்னொரு சாரார் சில பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 3971
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் மக்களை அடக்கி ஒடுக்கும் சர்வாதிகாரிகள் தோன்றினார்கள்.

இன்று நாம் வாழ்கின்ற காலத்தில் பெண்கள் மெல்லிய சருகுகள் போன்ற ஆடைகளை அணிகின்றனர். இதனால் ஆடை அணிந்தும் நிர்வாணமாக அவர்கள் காட்சி தருகின்றனர்.
மேலும் பலர் அரை குறை ஆடைகள் அணிந்து மறைக்க வேண்டிய பகுதிகளை வெளிப்படுத்திக் காட்டுகின்றனர்.

'ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள்' என்ற நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

பொதுவான முன்னறிவிப்புகள்

விபச்சாரம் பெருகும்

கொலைகள் அதிகரிக்கும்

நாணயமும், நேர்மையும் அரிதாகி விடும்

பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்

பூகம்பங்கள் அதிகமாகும்

செல்வம் பெருகும்

என்றெல்லாம் பொதுப்படையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

இவையனைத்தும் இன்று நிறைவேறி வருவதை நாம் காண்கிறோம்.
இதுவரை நாம் எடுத்துக் காட்டியவை நம்முடைய சிற்றறிவில் பட்டவை மட்டும் தான். சிந்தனையாளர்களும், அறிஞர்களும் திருக்குர்ஆனை ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் எண்ணற்ற அதிசயங்களைத் திருக்குர்ஆனில் நிச்சயம் காண்பார். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வசனங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்களும் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட மார்க்கம் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன

Wednesday, March 25, 2015

வருமுன் உரைத்த இஸ்லாம் - பகுதி 13

8 ஒட்டகப் போர் பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே போர் நடக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு வழிகளில் முன்னறிவிப்புச் செய்தனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தலை நகரமான மதீனா நகரில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட பின் இக்கொலைப் பழி அலீ (ரலி) அவர்கள் மீது விழுகிறது. தான் ஆட்சிக்கு வருவதற்காக அலீ தான் உஸ்மானைக் கொல்லத் திட்டம் தீட்டினார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்தனர்.
மற்றும் சிலர் அலீ (ரலி) அவர்களுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லாவிட்டாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்றும் அவர்களைக் காப்பாற்ற முனைகிறார் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

Tuesday, March 24, 2015

வருமுன் உரைத்த இஸ்லாம் - பகுதி 12

2 தமது மரணம் குறித்து அறிவித்த முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பதாம் வயதில் துவக்கிய இஸ்லாமியப் பிரச்சாரத்தை 63 வது வயதில் முடித்துவிட்டு மரணம் அடைந்தார்கள்.
மனிதன் தீராத நோய்க்கு ஆளாகும் போதும், படுத்த படுக்கையில் நாட்களைக் கழிக்கும் போதும் தனக்கு மரணம் நெருங்கி விட்டதை ஓரளவுக்கு ஊகித்து அறிந்து கொள்வான்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயதை அடைவதற்கு முன் திடகாத்திரத்துடன் இருக்கும் போதே தமக்கு மரணம் மிக விரைவில் வந்து விடும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு மரணத்தைத் தழுவினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன் ஹஜ் செய்தனர். மதீனாவிருந்து மக்கா சென்று ஹஜ் செய்ய அன்றைக்கு நல்ல திடகாத்திரமும் உடல் வவும் இருக்க வேண்டும். அந்த நிலையில் அவர்கள் இருந்ததால் தான் ஹஜ் கடமையை மேற்கொண்டார்கள்.
நபிகள் நாயகத்தின் முதல் ஹஜ்ஜாகவும். கடைசி ஹஜ்ஜாகவும் திகழ்ந்த அந்த ஹஜ்ஜின் போது பின்வரும் வசனம் தமக்கு அருளப்பட்டதாகக் கூறினார்கள்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.
(அல்குர்ஆன்5.3)
இன்றுடன் மார்க்கத்தை இறைவன் முழுமைப்படுத்தி விட்டான் என்றால் இனி மேல் இறைவனிடமிருந்து எந்தச் சட்ட திட்டமும் வராது. அதைப் பெற்று மக்கள் மன்றத்தில் வைக்கக் கூடிய தூதருக்கு இனி வேலையில்லை என்ற கருத்தும், மிக விரைவிலேயே அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிவார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.
இந்த ஆண்டுக்குப் பின் இனி மேல் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம் என்று தமது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டார்கள்.
நூல் : தப்ரானி அல்கபீர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உஹத் போர் நடந்து) எட்டு ஆண்டுகள் கழிந்து உஹத் போரில் கொல்லப்ட்டவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இது உயிரோடு உள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் விடைபெறுவது போல் அமைந்திருந்தது. பின்னர் மேடையில் ஏறினார்கள். 'நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன். உங்களுக்கு நான் சாட்சியாக இருப்பேன். ஹவ்லுல் கவ்ஸர் எனும் தடாகத்தில் (மறுமையில்) உங்களைச் சந்திப்பேன்' என்று உரை நிகழ்த்தினார்கள். அது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நான் கடைசியாகப் பார்த்ததாகும் என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 4042
ஆண்டு தோறும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து (அது வரை அருளப்பட்ட) குர்ஆன் வசனங்களை ஓதச் செய்து வந்தனர். இந்த ஆண்டு இரண்டு தடவை என்னிடம் வந்தார்கள். என் மரணம் நெருங்கி விட்டதாகவே எண்ணுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) தமது மகள் ஃபாத்திமாவிடம் தெரிவித்தார்கள்.
நூல் :புகாரி 3624, 6285
ஏமன் நாட்டின் ஆளுநராக முஆத் பின் ஜபலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். முஆது அவர்கள் குதிரையில் ஏறி அமர்ந்து வர அவருடன் நடந்தே வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி அனுப்பி வைத்தார்கள். அப்போது பல அறிவுரைகளைக் கூறிவிட்டு அடுத்த ஆண்டு நீ என்னைச் சந்திக்க மாட்டாய் என்றே நினைக்கிறேன் என்று கூறினார்கள். 
நூல் அஹ்மத் 22404
அவர்கள் அறிவித்த படியே அந்த ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

3 தனி நபரைப் பற்றி நரகவாசி என்ற முன்னறிவிப்பு

நியாயத்திற்காகக் களம் இறங்கிப் போராடுவதற்கு நிகரான நன்மை வேறு எதிலும் கிடைக்காது. இவ்வாறு தன் உயிரைத் தியாகம் செய்ய போர்க்களத்திற்கு வந்த ஒருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகவாசி என்று குறிப்பிட்டார்கள். அவர்கள் நரகவாசி என்று அடையாளம் காட்டிய அந்த நபர் கடைசியாக நரகில் செல்வதற்குரிய வழியைத் தேர்வு செய்து கொண்டார். இது பற்றிய நிகழ்ச்சி பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இணை வைப்பவர்களும் போர்க்களத்தில் மோதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டார்கள். இணை வைப்பவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டனர். நபித் தோழர்களில் ஒரு மனிதர் மட்டும் தனது படையினரைச் சாராமல் விரட்டிச் சென்று போரிட்டார். 'இவரைப் போல் நம்மில் யாரும் வீரமிக்கவர் இல்லை' என்று நபித்தோழர்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் நரகவாசியாவார்' என்று அவரைப் பற்றிக் கூறினார்கள். அங்கே சபையில் இருந்த ஒருவர் 'நான் இவருடன் சேர்ந்து இவரைக் கண்கானிக்கிறேன்' என்று புறப்பட்டார். அவர் ஓடினால் இவரும் ஓடுவார். இந்த நிலையில் அந்த அந்த மனிதருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. (வேதனை தாள முடியாமல்) தனது வாளைத் தரையில் ஊன்றி அதன் மீது தனது மார்பை அழுத்தி தற்கொலை செய்து விட்டார். அவரைக் கண்காணிக்க முன் வந்த அந்த மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்' எனக் கூறி நடந்ததை விளக்கினர்.
நூல் : புகாரி 2898)
தற்கொலை செய்பவர்கள் என்றென்றும் நரகில் கிடப்பார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை செய்திருந்தனர். இதன் அடிப்படையில் அந்த மனிதர் தற்கொலை செய்து கொண்டதன் மூலம் நரகவாசியாக மரணித்தார்.
போர்க்களத்தில் வீரதீரமாகப் போரிடும் ஒருவரைப் பற்றி நரகவாசி என்று எந்த மனிதராலும் கூற முடியாது. கடைசியில் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததால் இதை இறைவன் முன்பே அறிவித்துக் கொடுத்திருக்கிறான் என்பதால் தான் இவ்வாறு அறிவிக்க முடிந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாக அமைந்துள்ளது.

4 தமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண் குழந்தைகளை வழங்கியிருந்தான். ஸைனப், ருகையா, உம்மு குல்ஸும் ஆகிய மூவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே மரணித்து விட்டார்கள். கடைசி மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மட்டும் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை உயிரோடு இருந்தார்கள்.
தமது குடும்பத்து உறுப்பினர்களில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் முதலில் மரணிப்பார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
'என் குடும்பத்தார்களில் (நான் மரணித்த பின்) என்னை முதலில் வந்து சேர்பவர் நீ தான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள்.
நூல் : காரி 3626, 3716, 4434
நபிகள் நாயகத்தின் மனைவியரிலும், அவர்களின் உறவினர்களிலும் அதிக வயதுடைய பலர் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சுமார் 25 வயதுடையவராகத் தான் இருந்தார்கள். மரணத்தை நெருங்கிய வயதுடையவராக அவர்கள் இருக்கவில்லை.
அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் மரணித்து ஆறாவது மாதத்தில் மரணத்தைத் தழுவினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை இச்செய்தியை இறைவன் அறிவித்துக் கொடுத்ததன் மூலம் மெய்ப்படுத்தினான்.

5 அம்மாரின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

ஆரம்ப கால முஸ்லிம்களில் யாஸிர், சுமய்யா தம்பதிகள் முக்கியமானவர்கள். சுமய்யா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர்களது எஜமானனால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இஸ்லாத்திற்காக முதன் முதலில் உயிர் நீத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்கள்.
இவர்களின் தல்வரான அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழராக இருந்தார்கள். மக்காவிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவராகத் திகழ்ந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் மதீனாவில் பள்ளிவாசல் ஒன்றை எழுப்பினார்கள். கூலி ஆட்கள் இன்றி தன்னார்வத் தொண்டர்களான நபித்தோழர்களே அப்பள்ளி வாசலைக் கட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் ஒவ்வொரு கல்லாகச் சுமந்து வந்தனர். அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு கற்களாகச் சுமந்து வந்தார். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது தலையில் படிந்த புழுதியைத் துடைத்து விட்டனர். 'பாவம் அம்மார் இவரை வரம்பு மீறிய கூட்டத்தினர் கொலை செய்வார்கள்' என்று முன்னறிவிப்புச் செய்தார்கள்.
நூல் : புகாரி 2812, 447
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் அபூபக்கர் (ரலி), அவர்களுக்குப் பின் உமர் (ரலி), அவர்களுக்குப் பின் உஸ்மான் (ரலி) ஆட்சி புரிந்தனர். உஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட பின் அலீ (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றனர்.
இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது சிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டில் வராமல் சிரியாவைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக அலீ (ரலி) அவர்களுக்கும், முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே பல்வேறு சண்டைகள் நிகழ்ந்தன. சிஃப்பீன் என்ற இடத்தில் இரு தரப்புப் படைகளும் மோதிக் கொண்ட யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
கி.பி.657ஆம் ஆண்டு நடந்த இப்போரில் அம்மார் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் படையில் அங்கம் வகித்தனர். இப்போரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
அலீ(ரலி) அவர்கள் அதிபராக இருக்கும் போது அவர்களுக்குக் கட்டுப்படாமல் முஆவியா (ரலி) அவர்கள் வரம்பு மீறினார்கள்.
வரம்பு மீறிய கூட்டம் அம்மாரைக் கொல்லும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அவர்கள் இறைவனின் தூதர் என்பது நிரூபணமானது.

6 ஸைனப் (ரலி) அவர்கள் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஸைனப் (ரலி) அவர்கள் முக்கியமானவர்கள். நபிகள் நாயகத்தின் மாமி மகளான ஸைனபை ஸைது எனும் அடிமைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். ஸைது அவர்களுக்கும் ஸைனப் அவர்களுக்கும் மனக் கசப்பு ஏற்பட்டதால் ஸைத் அவர்கள் ஸைனபை விவாகரத்துச் செய்தார்கள்.
இதன் பின்னர் அல்லாஹ்வே ஸைனபை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.

பார்க்க திருக்குர்ஆன் : 33:37
தமது மனைவியரில் யார் முதலில் மரணிப்பார்கள் என்பது பற்றிய பேச்சு வந்த போது 'உங்களில் நீளமான கைகளை உடையவரே முதலில் மரணிப்பார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒரு குச்சியின் மூலம் ஒவ்வொருவரின் கைகளையும் அளந்து பார்த்தனர். மற்றவர்களின் கைகளை விட ஸவ்தா (ரலி) அவர்களின் கைகளே நீளமாக இருந்தன. ஆனால் நபிகள் நாயகத்தின் மனைவியரில் ஸைனப் (ரலி) தான் முதலில் மரணித்தனர். 'தாரளமாக வாரி வழங்குபவர்' என்ற கருத்திலேயே 'கைகள் நீளமானவர்' என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியதை அவர்களின் மனைவியர் புரிந்து கொண்டார்கள்.
இந்த விபரம் புகாரி 1420 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அவர்களின் மனைவியரில் ஸைனப் அவர்கள் முதலில் மரணித்தார்கள்.

7 இரண்டு கலீஃபாக்களின் வீர மரணம் பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார்கள்.
அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்கள் யூதன் ஒருவனால் கொல்லப்பட்டார்கள்.
அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உஸ்மான் (ரலி) அவர்கள் கலகக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
'உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் இயற்கை மரணத்தைத் தழுவ மாட்டார்கள். கொல்லப்பட்டு வீர மரணம் தான் அடைவார்கள்' என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் ஒரு முறை உஹத் மலை மீது ஏறினார்கள். அப்போது உஹத் மலை நடுங்கியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உஹத் மலையே அசையாமல் நில். உன் மீது ஓர் இறைத் தூதரும், ஒரு (சித்தீக்) உண்மையாளரும், வீர மரணம் அடையும் இருவரும் உள்ளனர்' என்று குறிப்பிட்டார்கள்.
நூல் புகாரி 3675
உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்களும் இயற்கையாக மரணத்தைத் தழுவ மாட்டார்கள். எதிரிகளால் கொல்லப்பட்டே மரணிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இருவரும் எதிரிகளால் கொல்லப்பட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தாம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இந்த முன்னறிவிப்பும் அமைந்துள்ளது.